காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்தார்! (http://www.kamalogam.com/new/showthread.php?t=66995)

kay 15-07-15 11:55 PM

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்தார்!
 
[IMG]http://www.kamalogam.org/gallery/data/500/VR1.jpg[/IMG]

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தன் சக மன்னர் டி.கே ராமமூர்த்தியுடன் மீளா இசை சொர்க்கத்தில் இணைந்து விட்டார்! விஸ்வநாதன் ராமமூர்த்தி என்னும் மந்திர இசை அமைப்பாளர்கள் கண்ணதாசனுடனும் வாலியுடனும் இணைந்து படைத்த தேன் அமுதப் பாடல்கள் அமரமாக, ஒரு பெஞ்ச் மார்க்காக இன்றும் திகழ்கின்றனவே! 87 ஆண்டுகள் வாழ்ந்த மனிதருக்கு நம் முதல் அமைச்சர் கூறியது போல் மத்திய அரசு பத்ம விபூஷன் விருது கொடுத்துக் கௌரவித்திருக்க வேண்டும்! யாரும் செய்யவில்லையே! தன் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததே மிகப் பெரிய பெருமை என்று சொல்லி அடக்கத்துடன் வாழ்ந்த அந்த பரம சாதுவான மேதைக்கு என் ஏழைச் சொற்களால் சிறிய அஞ்சலி! எம்.எஸ்.வி. குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களைக் காணிக்கை ஆக்குகிறேன்! :0021:

முன்னால் லோகத்தில் நான் செய்த ஒரு பதிப்பு. மறுபடியும் ஒரு முறை காண நண்பர்களை விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்!
http://kamalogam.com/new/showthread.php?t=63096

venkat8 16-07-15 04:09 AM

கடைசிவரை தமிழனாகவே வாழ்ந்த மலையாளி எம். எஸ் விஸ்வநாதன். அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

tdrajesh 16-07-15 05:29 AM

ஆயிரக்கணக்கான, என்றென்றும் கேட்க விரும்பும் தேன் போன்ற பாடல்களை நமக்கு தந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

Kattumaram 16-07-15 05:46 AM

எம்.எஸ்.வி
 
யுகங்கள்
மாறிக்கொண்டே இருக்கலாம்,
மனிதர்கள்:**
வருவார்கள்,
வாழ்வார்கள்,
மறைவார்கள்,
எம்.எஸ்.வி
வாழ்வார் வாழ்வார் வாழ்ந்து கொண்டே இருப்பார்:
யுகங்களுக்கும், யுகங்களுக்கும், யுகங்களுக்கும்....>>>

Laal 16-07-15 08:21 AM

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

suresh85 16-07-15 08:41 AM

மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் மிகவும் அற்புதமான, எளிமையான ஒரு இசைக்கலைஞர்! அவர் இசையமைத்த பல பாடல்கள் இசையின் மென்மை காரணமாக மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், ஒளிமயமான எதிர்காலம், நெஞ்சம் மறப்பதில்லை, எங்கே நிம்மதி, சிட்டுக் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே, அமைதியான நதியிலே ஓடம், காலங்களில் அவள் வசந்தம், செந்தமிழ் தேன் மொழியாள், உள்ளத்தில் நல்ல உள்ளம், ...... என காலத்தால் அழியாத அர்த்தம் நிறைந்த பல நூறு பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

எம். எஸ் வி. அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

vjagan 16-07-15 08:49 AM

ஈடு இணையற்ற மெல்லிசை மன்னர் அய்யா அம்மணி ! அவருக்கு என்னுடைய இதயம் கனிந்த அஞ்சலி அய்யா அம்மணி !

அன்பு 16-07-15 09:46 AM

அன்னாரின் மறைவு இசை உலகிற்கு பெரும் இழப்பு. என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா இறைவனின் சாந்தியடைய வேண்டுகிறேன்.

HERMI 16-07-15 11:25 AM

Quote:

Originally Posted by suresh85 (Post 1348964)
அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், ஒளிமயமான எதிர்காலம், நெஞ்சம் மறப்பதில்லை, எங்கே நிம்மதி, சிட்டுக் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே, அமைதியான நதியிலே ஓடம், காலங்களில் அவள் வசந்தம், செந்தமிழ் தேன் மொழியாள், உள்ளத்தில் நல்ல உள்ளம், ...... என காலத்தால் அழியாத அர்த்தம் நிறைந்த பல நூறு பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நண்பர் சுரேஷ் சொல்வதை போல், காலத்தால் மறையாத காவியமான இசையை வார்த்து, தமிழுக்கு தந்திருக்கிறார். இந்த மாபெரும் இசை மாமேதையின் ஆத்மா, இறைவனின் சந்நிதியில் அமைதி பெற வேண்டுகிறேன்.!

r.saranraj85 16-07-15 11:30 AM

இனி ஒரு இசைக்கலைனஜ்ன் தேட வேண்டும் ஆயினும் இனி ஒரு எம்.எஸ்.வி கிடைப்பதென்பது அரிது


All times are GMT +5.5. The time now is 01:46 PM.

Powered by Kamalogam members