காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   மேம்படுத்துதல் இன்னும் தொடர்கிறது... (http://www.kamalogam.com/new/showthread.php?t=27882)

xxxGuy 12-10-06 10:57 AM

மேம்படுத்துதல் இன்னும் தொடர்கிறது...
 
நண்பர்களே... நண்பிகளே...

சமீபத்தில் Database error பலருக்கு வருவதை நன் அறிவேன். எனக்கு கூட அடிக்கடி இந்த பிழைச் செய்தி வந்து தொல்லை தருகிறது. ஆட்கள் அதிகமாக உலாவும் போதோ, அல்லது தகவல் தளத்தின் மீது அழுத்தம் ஏற்படும் போதோ மன்றத்தினுள் 4-5 நிமிடங்களுக்கு நுழைய முடிவதில்லை. ஆனால், சிறிது நேரத்திற்கு பின் சரியாகிவிடுகிறது.

அடுத்த வாரம், நமது தளத்தை புதிய இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளேன். புதிய இடத்தில் நிறைய இடவசதி, பேண்ட்விட்த் வசதி உள்ளது. அங்கே இந்த தகவல் தள பிரச்சனை வராது என்று நம்புகிறேன். ஆனால், வேறு ஏதும் பிரச்சனை வராமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்.

இவ்வளவு பெரிய தகவல்தளத்துடன் ஆன தளத்தை, எப்பொழுதும் உறுப்பினர்கள் உலவிக் கொண்டிருக்கும் தளத்தை நகர்த்துவது மிகவும் கடினமான செயல். இது பல வேலைகளை உள்ளடக்கியது, ஒரு வேலையில் தவறு ஏற்பட்டாலும் தளம் இயங்காமல் போகலாம், அல்லது பழையவற்றை இழக்க நேரிடலாம், அதனால் மிக எச்சரிக்கையாக நகர்த்த இருக்கிறேன்.
இதன் காரணமாக, வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வேலை நடைபெறும். இந்த சமயத்தில் கதைகள், அல்லது பெரிய பதிப்புகளை நேரடியாக பதிப்பவர்கள், எச்சரிக்கையாக பதிக்கவும், அவை சரியாக பதிக்கப் படாமல் பிழைச் செய்திகள் வரலாம். அதனால், எச்சரிக்கையாக தங்கள் கணணியிலும் ஒரு நகலை வைத்துக் கொண்டு பிறகு நமது தளத்தில் பதிக்கவும். இந்த நாட்களில், உங்களுக்கு அதிக பிழைச் செய்திகள் வர வாய்ப்புள்ளது, சில சமயங்களில் தளம் இயங்காமலும் போகலாம், அதை தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும்.

இந்த மேம்படுத்துதல்கள் வெற்றிகரமாக முடிவடைந்தவுடன், நவம்பர் முதல் வாரம் முதல் புதியவர்கள் ஏற்றுக் கொள்ளப் படுவார்கள். அவர்கள் வருகையால் பல புது படைப்புகள் கிடைக்கும், அதே நேரத்தில் பல புது தொந்தரவுகளும் வரும், அதை எதிர் கொண்டு அவர்களுக்கு உதவ காத்திருங்கள்.

நன்றி..

xxxGuy


update on 20th Oct.

http://www.kamalogam.com/new/showpos...6&postcount=35

நண்பர்களே..

நமது மன்ற மென்பொருள் மேம்படுத்தப் பட்டுள்ளது. இதனால் பல வசதிகள் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம், சில வசதிகள் காணாமல் போகலாம். பிறகு அவை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யப் படும்.

நமது மன்றத்தை பூட்டாமலேயே வேறு இடத்துக்கு நகர்த்த 2 முறை முயற்சித்தும், பல தடைகளால் சரிவர செய்ய முடியவில்லை. அதனால் மன்றத்தை 48 மணி நேரம் பூட்டுவதை தவிர வேறு வழியில்லை. ஆனால் எப்போது பூட்டுவதை என்பதை மட்டும் இன்னும் முடிவு செய்யவில்லை. நாளையில் இருந்து அடுத்த வாரத்தில் என்று வேண்டுமானாலும் மன்றம் தற்காலிகமாக 48 மணி நேரம் பூட்டப் படலாம்.

மன்றம் பூட்டியிருந்தால் கவலைப் படாதீர்கள் 48 மணி நேரத்திற்குள் திறக்கப் படும்.

ஏன் மன்றம் இயங்க வில்லை, ஏன் இந்த வசதி வேலை செய்யவில்லை, எதற்கு என் விண்ணப்பம் கவனிக்கப் படவில்லை, என் அனுமதி என்னாச்சு போன்ற கேள்விகளை அனுப்பி என் நேரங்களை வீணாக்காதீர்கள், அது நமது மன்ற வேலைகளை இன்னும் தாமதமாக்கும்..

நன்றி..

vaithiyanathans 12-10-06 11:36 AM

புதியன புகுதலும், பழயன கழிதலும் இயற்கைதானே தலைவரே. உங்களது அனுபவமும், தற்போது உள்ள நவீன வசதிகளும் இந்த முயற்சிக்கு பக்கபலமாக அமையும். ஏதும் பிரச்சினைகள் இல்லமல் இருக்க வாழ்த்துக்கள்.

senthuse 12-10-06 12:36 PM

புதிய முயற்சிகள் வரவேற்கத்தக்கவை.நாங்கள் உதவக்காத்திருக்கிறோம்.

porumai 12-10-06 01:53 PM

அறிவிப்புக்கு மிக்க நன்றி தலைவரே!
நீங்கள் சொன்னபடி மிக கவணமாக நாங்கள் செயல்படுகிறோம். நமது தளம் எதுவும் ஆகாமல் இருக்க வேண்டிக்கொள்கிறேன்.

skumar78 12-10-06 02:44 PM

அறிவிப்புக்கும் தள வசதியினை மேம்படுத்த தாங்கள் எடுக்கும் முயற்சிக்கும் மனமார்ந்த நன்றிகள் அதனால் வரும் இடைக்கால பிரச்சினைகளை தாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறோம் தலைவரே

selvenselvi 12-10-06 02:46 PM

தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் தங்களின் முயற்ச்சியில் எந்த இடைஞ்சலும் வராது என்றே நினைக்கிறேன். நாங்களும் தக்க எச்சரிக்கையுடன் இருந்துக் கொள்கிறோம். இட மாற்றம் வெற்றியடைய வாழத்துக்கள்.

devendira 12-10-06 03:21 PM

என்னிடம் 4 கதைகள் உள்ளன. ஆனால் தகாத உறவு தளத்தில் உனிகொட் கன்வெர்டரில் தயாரித்து அதை எதில் பதிப்பது என புரியவில்லை. யாராவது உதவுவீர்களா?

jayvijay 12-10-06 05:01 PM

தளத்தை மேம்படுத்துவதற்கு தாங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றிகரமாக அமையவேண்டுமென வேண்டிக்கொள்கிறேன். பல சிரமங்களுக்கு மத்தியிலும் உறுப்பினர்களின் நலன் கருதி செயல்படும் உங்களுக்கு எம் சிரம் தாழ்ந்த நன்றிகள்.புதுப்பொழிவுடன் காமலோகம் தொடர்ந்தும் வெற்றிப்பாதையில் பயனிக்க வாழ்த்துக்கள்.

MANJU_4U 12-10-06 05:16 PM

தலைவருக்கு வணக்கம்...
இந்த தள த்தை மேன்மைஆக்க நீங்கள் படும் பாடு மிக்க பாராட்டுக்கு உரியது.ஏதோ இப்பொழுது தான் ஊனிகோடுக்கு மாறியது போல இருக்கு.ஆனால் அதற்க்குள் மீண்டும் இன்னொரு முன்னேறம்.காலத்துக்கு ஏற்றாபோல் நம் தளமும் நடை போடுகிறது என்பதை அறியும் போது நமக்கு ரொம்ப கர்வமாக இருக்கிறது...
ஒரே ஒரு கேள்வி...இப்பொழுது தளம் மாறும்பொழுது நாங்கள்
ஏதாவது சைய்ய வேண்டுமா...ஊனிக்கோடு க்கு மாறினால் போல...
தயவு சைது சொல்லுங்கள்...

kamakalaingan 12-10-06 05:53 PM

தலைவர் அவர்களுக்கு,
எனக்கும் இது போன்ற டேட்டா பேஸ் எரர் மூன்று நான்கு முறை வந்துள்ளது. அதற்கான காரணத்தை தற்போது புரிந்து கொண்டேன். மேலும் நமது தளம் புதுப்பொலிவு பெற இருப்பதை அறிந்து அளவிற்கரிய மகிழ்ச்சி கொள்ளும் பல உள்ளங்களில் நானும் ஒன்று. இவ்வாறு உலக தமிழர்களை ஒன்றுபடுத்தி அவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உதவும் தளத்தை ஏற்படுத்திய தலைவர் அவர்களுக்கு எங்களின் மனப்பூர்வமான நன்றிகள். இதற்காக ஒரு வாரம் என்ன? ஒரு வருடம் கூட காத்திருக்க தயார். நன்றி தலைவரே!..


All times are GMT +5.5. The time now is 03:15 AM.

Powered by Kamalogam members