காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0041 - ஜூன் '09 மாத சவால் கதைப் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=51050)

smartman 10-07-09 11:54 PM

நி: 0041 - ஜூன் '09 மாத சவால் கதைப் போட்டி முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே..!!

ஜூன் '09 மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான banu12 அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் கதையான "ஆசை நாயகி - பாகம் 1 - 11" என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டு, இந்தக்கதையின் 11 மூல பாகங்களும் காமக்கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது,

அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அவர்களில் ஹபீப் அவர்கள் வாக்கெடுப்பில் இருந்து விலக விரும்பியதால் மற்ற மூவர் கதைகள் பட்டியலிடப்பட்டு, அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப் பட்டது, அதை இங்கே காணலாம்.

இந்த மாத போட்டியிலும் நண்பர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தடுத்த போட்டியில் இன்னும் கூடுதலாக பங்கேற்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். கதைகளின் தொடர்ச்சி தந்த நால்வருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியின் இறுதியில் http://www.kamalogam.com/new/customa...tar26842_1.gif oshoviji அவர்கள் 12 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக முதல் முறையாகத் தேர்வு பெறுகிறார். கடந்த மே 2009 மாதத்தின் சிறந்தகதைக்கான பரிசு பெற்ற இவருக்கு இது இரண்டாவது பரிசு. அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் oshoviji.
வாக்குகள் கிடைத்த விவரம்.

1) oshoviji 12 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

2) KANNAN60 - 8 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

3) kadalkanni - 7 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

வெற்றி பெற்ற உறுப்பினர் oshoviji-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். அவர் முன்னரே பெய்டு (தங்க வாசல்) உறுப்பினராக இருந்து வருகிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இருவருக்கும் 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த வாக்கெடுப்பில் சற்று குறைவான நண்பர்களே பங்கேற்றார்கள். என்றாலும், இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...

லலிதாதாசன் 11-07-09 12:02 AM

முதலிடம் பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் விஜி.

தொடர்ந்தாற்போல் மாதாந்திர சிறந்த கதை போட்டியிலும் பதக்கம், நிர்வாக சவாலிலும் பதக்கம் என ஜாக்பாட் அடித்துவிட்டார் விஜி.

மிகவும் திறமையான எழுத்தாளர். அடையப்போகும் உயரங்கள் மிக அதிகம்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் விஜி.

இரண்டாமிடம் பெற்ற முன்னாள் சவால்ராஜா கண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மூன்றாமிடம் பெற்ற முன்னாள் சவால்ராணி கடல்கன்னி அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

anusuya 11-07-09 12:18 AM

வாழ்த்துக்கள் விஜி...பெய்டு உறுப்பினராக இருந்தும் எல்லா பகுதியிலும் பங்காற்றி வருவது பற்றி மகிழ்ச்சி...

இரண்டாமிடம் மூன்றாமிடம் பெற்ற kannan, kadalkanni ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்...

kadalkanni 11-07-09 12:56 AM

முதலிடம் பெற்ற விஜிக்கும் இரண்டாம் இடம் பெற்ற கண்ணனுக்கும் எனது வாழ்த்துக்கள்..

பச்சி 11-07-09 01:45 AM

தனது சிறப்பான பங்களிப்புகளால் தொடர்ந்து வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கும் நண்பர் ஓஷோவிஜிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

மேலும் பங்களித்த நண்பர்கள் கண்ணன், கடல்கன்னி ஆகியோருக்கும் என் பாராட்டுக்கள்.

அடுத்த சவாலில் அதிக போட்டியாளர்களை எதிர்பார்ப்போம்.

போட்டி அறிவிப்பு திரியில் நான் அறிவித்த பரிசு தொகையான 'முதலில் தொடரை பதிப்பவருக்கு 500 ஐகேஷ்கள்' என்பதை நண்பர் கடல்கன்னி அவர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

smdhabib 11-07-09 01:53 AM

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!!

நண்பர் விஜய்க்கு இந்த ஹபிபின் வாழ்த்துக்கள்!!!

ஜூன் மாத சவால் ராஜா, விஜய்க்கு வாழ்த்துக்கள்!!!

தொடர்ந்து பங்குப்பெற்று, நிர்வாக சவாலை சிறப்பிக்கும் படி இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்,

சிறப்பான தொடர்ச்சியை கொடுத்த நண்பர்கள் கண்ணன் மற்றும் கடல்கன்னி இருவருக்கும் இந்த ஹபிபின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

வெற்றி தோல்வியை பற்றி கவலை படாமல், ஜூலை மாத நிர்வாக சவாலிலும் கலந்துக்கொண்டு சிறப்பிக்கும் படி இப்போதே கேட்டுக்கொள்கிறேன்.

இது போன்ற வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ள சந்தர்ப்பம் அமைத்து கொடுத்துக்கொண்டு இருக்கும் தலைவர் அவர்களுக்கும், நமது ஸ்மார்ட்மேன் சார் அவர்களுக்கும், எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துகள் விஜய்! வாழ்த்துக்கள் விஜய்!! வாழ்த்துக்கள் விஜய்!!!

ஹபிப்

BILLA 11-07-09 07:54 AM

நான் இந்த திரியில் முதல் பின்னுட்டமிடலாமென்று நேற்று இரவு விழித்திருந்தேன். ஆனால் இங்கு சூழ்நிலை எனக்கு சரிவராததால் உறங்க சென்றுவிட்டேன்.

எப்படி இருந்தாலும் இது எனது முதல் பின்னூட்டம் தான்.
வெற்றி பெற்ற சவால்ராஜா விஜிக்கு எனது பாராட்டுக்கள்.. நண்பர் கண்ணன் மற்றும் க.கன்னிக்கும் வாழ்த்துக்கள்

வரிப்புலி 11-07-09 10:11 AM

நண்பர் விஜிக்கும் மேலும் கலந்துக் கொண்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

muthirkanni 11-07-09 10:22 AM

அன்பிற்குரிய மூவருக்கும் என் பாராட்டுக்கள். முன்னிலை வகிப்பதுமட்டுமல்லமல், முதன் முறையாக, சவால் ராஜாவாக ஜொலிக்கும் விஜிக்கு என் வாழ்த்துக்கள்.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி

rina 11-07-09 10:50 AM

முதலிடம் பெற்ற விஜிக்கு எனது விசேட வாழ்த்துக்கள். மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 10:02 PM.

Powered by Kamalogam members