காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   வித்தகப் பாடல்கள் படைத்த தத்துவத் தேரோட்டியின் 89 வது பிறந்தநாள் இன்று! (http://www.kamalogam.com/new/showthread.php?t=68874)

vjagan 25-06-16 06:43 PM

வித்தகப் பாடல்கள் படைத்த தத்துவத் தேரோட்டியின் 89 வது பிறந்தநாள் இன்று!
 
வித்தகப் பாடல்கள் படைத்த தத்துவத் தேரோட்டியின் 89 வது பிறந்தநாள் இன்று!

பல்லாயிரக்கணக்கான கவிதைகள்,திரைப்படப் பாடல்களை எழுதி ,தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்ற ‘கவியரசு’ கண்ணதாசன் பிறந்த தினம் இன்று.-ஜூன் 24.அவரைப் பற்றிய அறிய முத்துக்கள் பத்து இதோ:
• சிவகங்கை மாவட்டம் சிருகூடலபட்டியில் 1927ல் பிறந்தவர்.பெயர் முத்தையா.அமராவதிப்பூரில் எட்டாம் வகுப்பு வரியில்தான் பாடித்தார்.
• சிறுவனாக இருந்தபோது ’கடைக்குப் போனேன்,காலணா கொடுத்தேன்,கருப்பட்டி வாங்கினேன்... ‘ என அன்றாட நிகழ்வுகளைக் கூட கவிதை வடிவில் எழுதிய பிறவிக் கலைஞன்.
• திருவொற்றியூரில் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்துகொண்டே கதையும் எழுதினர்.’கிரகலட்சுமி’ பத்திரிகையில் வெளியன் ‘நிலவொளியிலே’ என்பதுதான் இவரின் முதல் கதை.’சண்டமாருதம்’ , ‘திருமகள், ‘திரையொலி’, ’தென்றல்’ உள்ளிட்ட பல பத்திரிகைகளின் ஆசிரியர்.
• கம்பர் பாரதியார் அவர்களிடம் ஈடுபாடு கொண்டவர்.பாரதியை மானசீகக் குருவாக ஈற்று தன்னுடைய பெயரை ‘கண்ணதாசன்’ என்று மாற்றிக்கொண்டு,கதை,கட்டுரை,கவிதைகள் எழுதினர்.காரை முத்துப்புலவர்,வணகாமுடி;க்கப் பிரியா,பார்வதிநாதன்,ஆரோக்கியசாமி என்று பலபுன பெயர்களிலும் எழுதினர்.
• சேலம் ‘மாடர்ன் தியடேர்சில்’கதை,வசனம் எழுதுபவராக இணைந்தார்.’கன்னியின் காதலி’ படைக்கு ‘கலங்காதிரு மனமே’என்ற முதல் திரைப் பாடல் எழுதினர்.கா.அப்பாதுரையிடம் இலக்கண இலக்கியங்கள் கற்று தேர்ந்தார்.
• ‘பாகப் பிரிவினை ’, படத்தில் எழுதியைத் தொடர்ந்து ‘பாசமலர்’, பாவ மன்னிப்பு’, ‘படிக்காத மேதை’, உள்ளிட்ட படங்களில் இவரது பாடல்கள் பிரபலமாகின.2o ஆண்டுகள் ஆண்டுகள் ஈடு இணை அற்ற கவிஞராகத் திகழ்ந்தார்.நான்கு ஆயிரம் கவிதைகள், ஐந்து ஆயிரம் திரைப் படப் பாடல்கள் எழுதினர்.
• ‘இயேசு காவியம்’, பாண்ட மாதேவி’,உள்ளிட்ட காவியங்கள்,பல பகுதிகளாக வெளிவந்த ‘கண்ணதாசன் கவிதைகள்’,’அம்பிகை அழகு தரிசனம் ’ உள்ள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் படைத்தார்.
• ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ பத்து பாகங்களாக வெளிவந்தது.’சேரமான் காதலி’ நாவலுக்கு சாகித்திய அகாடமியின் விருது பெற்றார்.’ ‘குழந்தைக்காக’குழனைதைக்காக’ திரைப்பட வசனதைர்க்காக 1961 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றார்.
• உடல் நலிவு காரணமாக தம்முடைய 54 வயதில் -1981 ஆம் ஆண்டு மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில் காரைக் குடியில் மனை மண்டபம் அமைக்கப்பட்டு இயங்கியும் வருகிறது.
தொகுத்து வழங்கியவர்: ராஜலட்சுமி சிவலிங்கம்
-----------------
திரைப்பாடல்களை ஓர் இலக்கிய வகையாகக் கொள்ள இயலுமா என்ற விவாதம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அப்படியொரு அங்கீகாரம் திரைப்பாடல்களுக்கு கிடைக்குமானால் அதில் முதல் இடம் பிடிப்பவை கவியரசு கண்ணதாசனின் திரை இசைப் பாடல்களாகவே இருக்கும் என்பது திண்ணம்.
இது ஒரு ரசிகனின் உணர்ச்சிகரமான வாதம் அல்ல.
கண்ணதாசனின் திரைத் தமிழை தங்கள் வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே உள் வாங்கிக்கொண்ட தமிழர்கள் அனைவரும் தரும் நியாயமான கவுரவம்.

பாடாத பொருளில்லை:

கவிதைத் தமிழை எளிமையாகவும் நயத்துடனும் தைகட்டதிகாட்டதிரையில் அள்ளித்தெளித்த முத்தையா ,கசப்பான உண்மைகளையும் வரிகளாக்கத் தவறவில்லை.
ஏழ்மை முதல் பொதுடமை வரை,வாழ்வின் அனைத்துப் படி நிலைகளையும்,அனைத்து மனித உணர்வுகளையும் பாடல்களை படைத்த இந்தப் பாட்டுச் சித்தர், சீர்களில் சித்து விளையாட்டை செய்தவர்.
விருத்தங்களால் தன்னை விரும்ப வைத்தவர்.
இன்று பெரும்பாலன திரைப்பாடல்கள் வெற்று தத்தக் காரங்களாய் காற்றை அசுத்தப்படுத்திவரும் நிலையில் திரைத் தமிழுக்கும், கவிதைக்கும் இடைவெளியை குறைத்து அவற்றை காற்றில் அலையும் இலக்கியமாக உயர்த்தி கவுரவம் செய்தவர்.

தவழும் நிலமாய் தங்க இதயத்தில் அமைந்திருக்கும் அவரது அரசாங்கத்தில்,குயில்கள் பாடும் கலைக்கூடத்தில்,தாரகை பதித்த மணி மகுடத்தோடு அமர்ந்திருக்கும் அந்தப் பாட்டுக்காரரின் பல்லாயிரம் படைப்புக்களில் ஒரு சில திரைப்பாடல்களை இப்போது அசை போடலாம்.

தத்துவத் தேரோட்டி:
வாழ்க்கைக்கான தத்துவங்களைத் தன்னுடைய அனுபவங்களின் வாயிலாக மக்களின் வாசலுக்கு வரவழைத்தவர் கானதாசன். மயக்கத்தையும்.கலக்கத்தையும்.மனக் கசப்பையும் ஒரு சேர ஓரம் கட்ட, நம் மக்களுக்குக் கற்பித்தவர்.

ஆடும் வரை ஆட்டம் போடுபவரையும்,ஆயிரத்தில் நாட்டம் கொள்பவரையும் விட்டு விலகி நிற்கச் சொன்னார்.

‘நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றுமில்லை’ என்று ஆற்றுப்படுத்தி, மனித மனங்களை அடுத்த உயர் நிலைக்கு இட்டுச்சென்றார்.

பொய்யர்களை இனம் காட்ட,கைகளில் தோளில் போடுகிறான்-அதைக் கருணை என்று கூறுகிறான்- பைகளில் எதையோ தேடுகிறான் -கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்-‘ என்று பாடி நம்மை எச்சரித்து வைத்தார்.
தன முதல் பாடலிலேயே ‘கலங்காதிரு மனமே’ என்று ஆறுதல் தந்த அந்த கலை மகள், ”கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா? இரு கைகளில்லாமல் மலர்களை அனைத்து காதல் தரவில்லையா?”என்று மாற்றுத் திறனாளிகளுக்கு மன எழுச்சி தந்தார் .

மாற்றுப்பார்வை:

அதே போல ’பார்ப்பவன் குருடனடி! படித்தவன் மூடனடி! உண்மையைச் சொல்பவனே உலகத்தில் பித்தனடி! நீரோ கொதிக்கதடி! நெருப்போ குளிருதடி! வெண்மையைக் கருமை என்று கண்ணாடி காட்டுதடி!” என்று பாடி நேர்மைக்குக் கிடைக்கும் பரிசை நயம்பட உரைத்தார்.

இலக்கிய நயம்:

ஊர்,தேன், தான், கை, ஆவேன் என்ற சொற்களாலும், மீ, வா, தா, லா, லே, லோ, போன்ற எழுத்துக்களாலும் வரிக்கு வரி முடிவடையும்படி, பாடல்களை புனைந்து கவியரசிரின் புலமையால் விளைந்த புதுமை.

அந்தாதித்தொடை:

ஒரே படத்தில் இரண்டு பாடல்களை அந்தாதியில் அமைக்க ஓர் அசுரத் திறமை வேண்டும். ’மூன்று முடிச்சு’ படத்தில், ’வசந்த கால் நதிகளிலே வைரமணி நீரலைகள்- நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்...காமனவன் மலர்க்கணைகள்’ , என்று பாடியவர் அதே பாடலில் கமல் ஸ்ரீதேவி இருவரும் காதலில் மயங்கிக் கிறங்கும் பாடலாதலால் மொத்தம் பதிமூன்று இடங்களில் ‘கள்’ என்ற பொல்லாத வார்த்தையை பிரயோகித்து இருப்பான் அந்தப் பொல்லாத பெருங்கவி.

கண்ணதாசன் என்று பேரு நதிய்டம் பல முரண்பட்ட கருத்துக்கள் நிழலாடினாலும்,முத்தான,சத்தான,பாடல்களை தந்ததினால் ,நித்தமும் நினைப்பட வேண்டிய திரைத்தமிழின் பிதாமகனாகவே இன்றும் திகழ்கிறார்.

வானும்,வான்மதியும்,வின்மீன்யும்,கடலும்,காற்றும்,மலரும,மண்ணும்,கொடியும்,சோலையும்,நதியும்மாராது போலவே கவியரசரின் புகழும் என்றுமே மாறாது, மங்காது,மறையாது.

தொகுத்து அளித்தவர்:மு.சங்கரன் அவர்கள்

மிகுந்த நன்றியறிதலுடன்:தி இந்து தமிழ் நாளிதழ், வெள்ளி ஜூன் 24,2016.

tamilplus 25-06-16 11:29 PM

கவியரசு கண்ணதாசன் அவர்களை பற்றி மரியாதைக்குரிய மூத்த உறுப்பினர் ஜெகன் அண்ணா ஆரம்பித்துள்ள இந்த திரியில் முதல் பின்னூட்டமிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
கண்ணதாசன் அவர்கள் பாடாத பொருட்கள் மிகவும் குறைவு.ஆனால் அவருக்கு சரிவர பொருள் - அதாவது பணம் சேர்க்க தெரியவில்லை. பத்திரிக்கைகள் நடத்தியும் , திரைப்படங்கள் எடுத்தும் நஷ்டப்பட்டு, அந்த கடன்களுக்கு வட்டி கட்டவே அவர் பாட்டு எழுதி வந்த பணம் எல்லாம் போயிற்று,
பின் ஓரளவு சுதாரித்து குடும்பத்துக்கு நல்ல பணம் சேர்த்து விட்டு மரணமடைந்தார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
அந்த நல்ல ஆத்மா சாந்தி அடையட்டும்.

vjagan 03-04-19 08:33 AM

பின்னூட்டமிட்ட அனைத்து+ வாசகர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் !


All times are GMT +5.5. The time now is 10:53 PM.

Powered by Kamalogam members