காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நமது சர்வரில் தடங்கல் (24-10-2015) (http://www.kamalogam.com/new/showthread.php?t=67541)

xxxGuy 25-10-15 03:52 AM

நமது சர்வரில் தடங்கல் (24-10-2015)
 
நண்பர்களே,

நமது சர்வர் தொடர்ந்து 6 வருடங்களுக்கு மேல் நிறுத்தப் படாமல் ஓடிக் கொண்டிருந்தது, அது நேற்று காலை (24-10-2015) திடீரென எதிர்பாராதவிதமாக சர்வரின் ப்ரோசசர் (processor) பழுதடைந்து நின்று விட்டது, அதில் நமது சேமிப்பு தட்டும் (hard disk) பழுதடைந்து விட்டது. தற்போது உடனடியாக தற்காலிக ஏற்பாட்டின் கீழ் புதிய சேமிப்பு தட்டிற்கு பேக் அப்-பில் (RAID backup) இருந்து மாற்றி தளத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறோம். இந்த மாற்றத்தில் நமது பதிப்புகள் எதுவும் பாதிக்கப் படவில்லை என்று தெரிகிறது, கடைசியாக பதித்தவர்கள் தான் இதை உறுதி செய்ய்ய வேண்டும்.

ஒரு நாள் முழுதும் தளம் வராமல் பலர் பதட்டப் பட்டிருப்பீர்கள். இதனால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்க்கு வருந்துகிறோம்.

தற்போது பின்னணியில் இன்னும் வேலை நடந்து கொண்டிருக்கிறது, அடுத்த 2-3 நாட்களுக்கு இது தொடரும், அதனால் தாங்கள் பதிக்கும் முக்கிய பதிப்புகளை முன் ஜாக்கிரதையாக நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.


உங்கள் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி..!


xxxGuy



பின் சேர்ப்பு: பழுதை சரியாக்கிய பின், மேலும் ஒரு முறை தளம் 2 மணி நேரம் தளம் தடை படும், அது நாளை அதிகாலை இந்திய நேரம் 6:30 மணி (around GMT 1 am) அளவில் தொடங்கும் 2 மணி நேரத்திற்குள் முடிவடையும்..

vjagan 25-10-15 04:55 AM

ஆமாம் அய்யா, நேற்று முழுவதும் காமலோகம் கிடைக்கவில்லையே என்ற தவிப்பில் எம் போன்ற வாசகர்கள் மிகவும் தவித்துப் போனோம் என்பது உண்மைதான் அய்யா !

காமலோகம் கிடைக்கவில்லையே தவிர பதிவுகள் எவையும் பாதிப்பு அடையவில்லை அய்யா !

தங்களின் கண் அயராத,கண் துஞ்சாதக் கடுமையானக் கண்காணிப்பு தொடர்ந்து இடைவிடாது இருந்து வருவதால் காமலோகம் சீராக மேம்பாடு கண்டு வருகிறது என்பது மிகவும் மகி,ழ்ச்சியான செய்தி அய்யா !

எம் போன்ற எல்லா வாசகர்களும் தங்களின் தன்னலமற்ற சேவையை எண்ணி, எண்ணி தங்களுக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம் அய்யா !

தங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா !

lotoffun768 25-10-15 10:36 AM

நான் வழக்கம் போல் தளத்திற்குள் பிரேவசிக்க முயன்ற போது உள்ள நுழைய முடிய வில்லை
நான் என்ன நடந்தது என்று தெரியாமல் குழம்பி போய் விட்டேன்
பிறகு தான் தளத்தின் தற்போதிய நிலை குறித்து அறிய பிற தங்களின் உதவியை நாடினேன் அப்போது தான் நாம் சர்வர் டௌன் ஆன விஷயம் தெரிந்து கொண்டேன்
எப்போது பழுது நிக்க பட்டு மீண்டும் இயங்கும் என்று அவளோடு காத்து கொண்டு இருந்தேன்
நாம் தளம் பழுது நிக்கபட்டு மீண்டும் இயங்க ஆரம்பித்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
நாம் தளம் மீண்டும் சிறப்பாக இயங்க பாடுபட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
வாழ்த்துக்கள்

catwalk 25-10-15 11:36 AM

நேற்று உண்மையில் பயந்து விட்டேன். ஆனால் செர்வர் பழுதாயிருக்கும் என்று நினைக்கவில்லை. தலைவருக்கும் ரிப்பேர் குழுவினர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

kathalan 25-10-15 12:07 PM

நேற்று முழுவதும் காமலோகம் பார்க்க முடியாமல் நானும் சிரம பட்டேன். முதலில் என்னுடைய கணினியில் தான் ஏதோ பிரச்சினை என்று நினைத்தேன். அதன் பிறகு என்னுடைய இன்டர்நெட் ப்ரோவைடர் இல் பிரச்சினை இருக்கும் என நினைத்தேன். முதலில் அலுவலக கணினியில் முயற்சி செய்தேன். ஒப்பன் ஆகவில்லை. அதன் பிறகு வீட்டில் உள்ள கணினியில் முயர்ச்சி செய்தேன். இறுதியில் வேறு இன்டர்நெட் ப்ரோவைடர்-இல் முயர்ச்சி செய்தேன். அதிலும் கிடைக்கவில்லை. ஏதோ சர்வர் பிராபிளம் என்பது அப்போது தான் புரிந்தது. சர்வர்-இல் வந்த பிரச்சினைக்கு உடனே தீர்வு கண்ட தலைவருக்கு முதலில் ஒரு சபாஸ் சொல்லிக் கொள்கிறேன்.

மேலும் இந்த பழுதை சரி செய்யும் வேலையை மிகவும் கவனத்துடன் சரி செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன். நண்பர்களின் பதிப்புகள் எதுவும் அழிந்து விடாதபடி உன்னிப்பான கவனத்தோடு இந்த வேலைகளை செய்யும்படி பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

தங்களுக்கு இது ஒரு சவாலான மற்றும் சிரமமான பணி என்பதை நான் அறிவேன். சீக்கிரமே இந்த பழுதுகள் சரி ஆகி மீண்டும் நல்ல முறையில் நம் தளம் இயங்க என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

sunrise 25-10-15 01:06 PM

Quote:

Originally Posted by Tamil_Lover (Post 1362425)
நேற்று முழுவதும் காமலோகம் பார்க்க முடியாமல் நானும் சிரம பட்டேன். முதலில் என்னுடைய கணினியில் தான் ஏதோ பிரச்சினை என்று நினைத்தேன். அதன் பிறகு என்னுடைய இன்டர்நெட் ப்ரோவைடர் இல் பிரச்சினை இருக்கும் என நினைத்தேன். முதலில் அலுவலக கணினியில் முயற்சி செய்தேன். ஒப்பன் ஆகவில்லை. அதன் பிறகு வீட்டில் உள்ள கணினியில் முயர்ச்சி செய்தேன். இறுதியில் வேறு இன்டர்நெட் ப்ரோவைடர்-இல் முயர்ச்சி செய்தேன். அதிலும் கிடைக்கவில்லை. ஏதோ சர்வர் பிராபிளம் என்பது அப்போது தான் புரிந்தது. சர்வர்-இல் வந்த பிரச்சினைக்கு உடனே தீர்வு கண்ட தலைவருக்கு முதலில் ஒரு சபாஸ் சொல்லிக் கொள்கிறேன்.

நேற்று என்னுடைய நிலைமையும் நண்பர் சொல்லியது போன்றே அமைந்தது. காமலோகம் மறுபடியும் கிடைத்ததற்கு பின்னணியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

lotoffun768 26-10-15 07:20 PM

தலைமை நிர்வாகி அவர்களுக்கு வணக்கம்
நமது தலத்தில் இன்று சிறு சிறு பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தன
சற்று நேரத்திற்கு முன்பு நமது தளத்தில் பராமரிக்கும் பனி நடை பெறுவதாக செய்தி வந்ததது
இன்று மதியம் என்னுடைய பின்னுட்டங்கள் எண்ணிக்கை 1050 கடந்ததாக பார்த்தேன் மீண்டும் இப்போது பார்க்கிறேன் 1026 அக உள்ளது எனது பதிப்புக்கள் அழிந்து போய்விட்டன என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்

oolvathiyar 27-10-15 06:16 PM

தளம் இன்று சரியாக வேலை செய்கிறது, மிக்க சந்தோஷம். இதனால் வாக்கெடுப்பை தள்ளி போட்டேன், இந்த கேப்பில் ஒரு புதிய கதையும் எழுதி விட்டேன். இனி வாக்கெடுப்பு திரியை துவங்கலாமா என்று தெரியவில்லை.

alaga 27-10-15 11:32 PM

ஆமாம் நான் கூட பயந்து விட்டேன் இந்த அரசாங்கம்தான் மீண்டும் தடை போட்டு விட்டது என்று பயந்து விட்டேன் நண்பரே ... சிரம பட்டு உழைத்து கடமையாற்றிய உங்களுக்கு நன்றி ...

suppan 28-10-15 10:16 PM

தளம் மறுபடியும் இயங்கு நிலைக்கு கொண்டு வந்த அனைவருக்கும் நன்றிகள்.


All times are GMT +5.5. The time now is 11:52 PM.

Powered by Kamalogam members