காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   பிறமொழிச் சொற்களைத் தமிழில் ‘ஒலி பெயர்ப்பு’ செய்து எழுதும் வழக்கம் ஏன்? (http://www.kamalogam.com/new/showthread.php?t=61018)

vjagan 20-07-12 03:54 PM

பிறமொழிச் சொற்களைத் தமிழில் ‘ஒலி பெயர்ப்பு’ செய்து எழுதும் வழக்கம் ஏன்?
 
  • பிறமொழிச் சொற்களைத் தமிழில் ஒலி பெயர்ப்பு’ செய்து எழுதும் வழக்கம் ஏன்?
நாம் எல்லோரும் விரும்பும் நம்முடைய காமலோகம்,
http://www.kamalogam.com/pic/2007/kl_logo_white.gif
தமிழில் காமத்தை அலசும் ஒரு நல்லுலகம்


என்று மிகவும் தெளிவாகவும், பெருமையாகவும், கம்பீரமாகவும் முகப்புப் பக்கத்தில் கொண்டது இது மிகவும் பெருமைப்பட வேண்டியது ஒன்று. காமலோகத்தின் இந்த உயரிய உள் நோக்கம் மிகவும் பாராட்டுக்கு உரியது.

முகப்பிலிருக்கும் வாசகமே என்னை நான் லோகத்தில் சேர்ந்த முதல் நாள் ஆரம்பித்து இது நாள்க வரை இந்த அளவுக்கு உந்த வைத்து தமிழில் எழுதத் தூண்டியது.

  • அந்தத் தாக்கம் என்னை இப்படியேதான் இனியும் என்னை வழி நடத்திச்செல்லும் தாரக மந்திரம் !
இந்த முகப்பு வரிகள் எனக்குக் கொடுத்த தாக்கம்தான் நான் காமலோகத்தில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் என்னை மிகவும் ஆட்கொண்டு வருகிறது. திரும்பத் திரும்ப அந்த ஓர் ஐந்து வார்த்தைச் சொற்றொடர் என்னுடைய எழுத்துக்களை வெகுவாகவே பாதித்து வருகிறது.

அதனை வேத வாக்காக என்னுடைய மனதில் பதிய வைத்தது. அதை பெரிதும் மதித்துப் போற்றி அது சுட்டிக் காட்டும் பாதையில்தான் நடை பிறழாமல் நான் என்னுடைய எழுத்துக்களை வழி நடத்திச் செல்கிறேன். - அன்று முதல் இது நாள் வரை. அந்த தாக்கம் என்னை இனியும் இப்படியேதான் என்னை வழி நடத்திச் செல்லும்.

ஆனாலும், அத்திப் பூத்தாற் போல என்னுடைய எழுபதியைந்துக்கும் மேற்பட்ட படைப்புக்களில் ஒரேயொரு படைப்பில் மட்டுமே ஓர் இருபத்தி ஐந்து ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது:

வா.சவால்: 0056 – கொதிகலன் பரிசீலனை செய்யும் பூங்குழலி

என்னும் தலைப்பில் வெளிவந்த காமக் கதை.

அதனுடைய சுட்டி: http://www.kamalogam.com/new/showthread.php?t=60689

"சில டெக்னிக்கலான சமாச்சாரங்களை அதே போன்ற ஆங்கில
வார்த்தையில் இருந்தால் என்னை போன்றவர்களுக்கு புரியும்"


என்று பல வாசகர்கள் கேட்டுக் கொண்ட பிறகு, கதையைத் திருத்தியமைக்கும்போது, அந்தக் கதையின் முதல் பதிப்பில் எழுதப் படாத அந்த இருபத்தியைந்து ஆங்கில வார்த்தைகளைச் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. இது ஒன்றுதான் என்னுடைய நடையில் நேர்ந்த ஒரேயொரு சறுக்கல்.

அந்த ஆங்கில வார்த்தைகள், மற்றும் சொற்றொடர்கள் அப்படியே உரு மாறாமல் ஆங்கில எழுத்துக்களில் உள்ளவையேயன்றி .

  • அவை எதுவொன்றும்தமிழில் ஒலி பெயர்ப்பு’ செய்யப்பட்டன அல்ல.
அப்படி இருந்தும் இதுவும் என்னுடைய தவறுதான்.
இனி இவ்வாறு நிகழ நான் விட மாட்டேன்.


  • என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் பிறமொழிச் சொற்களைத் தமிழில் ஒலி பெயர்ப்பு’ செய்து எழுதும் வழக்கம் ஏன் நம்முடைய படைப்பாளர்கள் பலரிடையே பரவலாக நிலவி வருகிறது, என்பதே .
நண்பர் ஒருவர் சொல்லியது போல நாம் நம் தாய் மொழி தமிழை யாருக்காகவோ அடகு வைத்துப் பல அந்நிய மொழிகளை நம் மொழியாக இணைத்துக் கொண்டோம்.

நான் காம லோக படைப்பாளர்கள் பலரின் படைப்புக்களில் கண்ணுற்ற ஒலி பெயர்ப்பு’ செய்யப்படும் வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள்:

  • சிச்ஷுவேசன், பிஸியாயிட்டீங்களோ..,ஸ்டைலில், டெக்னிகல் டீடைல்சு, ஃபைவ் ஸ்டார்ஸ் ரேட்டிங், ஜாலிதான், ஆர்கெஸ்ட்டா , ஹெட் ஆபீஸில், ட்ரைனிங்,சான்ஸ், ஓனர், ரூமை, பிராக்டிகள்…,தேக்ஸ்டா, லீடரான, சூப்பர்ப், ஐ லவ் யு, டெலிபோனில், ஆர்கனைஸ், பிக்னிக், ப்ராஜெகட், ஜஸ்ட், ,பிளான், போட்டா, டேக் யூவர் ஸீட், ஆன் த வே, காண்பரன்ஸ், சூட்டிங் ஸ்பாட், ஸ்டார், ரெஸ்டாரணடில்,ரிசப்ஷன், எக்ஸலண்ட்,எக்ஸர்சைஸுமாச்சி, ப்ளாஸ்பேக், வெரி குட் மை பாய், வெரி குட் மார்னிங்,கேட்டகரி [category ], ரிட்டையர்ட் பர்ஸன்..
இப்படி இன்ன பிற கணக்கிலடங்கா வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள் யாவுமே ஆங்கிலத்தில் இருந்து 'ஒலி பெயர்ப்பு' செய்யப்பட்டு தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டு உரு மாறுகின்றன.

இவைகளுக்கு தமிழில் தமிழ் மரபு மாறாத வார்த்தைகளா, சொற்றொடர்களா இல்லை?

என்று தணியும்/மடியும் நம்மில் இந்த ஆங்கில ஒலி பெயர்ப்பு மோகம் ?

mouse1233 20-07-12 05:44 PM

உங்க ஆதங்கம் எனக்கு புரியுது . ஆக்சுவலா சில விசயங்களை பேச்சுத்தமிழுல் :) பேசினால் அங்கே தகவல் தொடர்பானது எளிதாக போய்ச்சேருகிறது.
கமலின் பல பேச்சுகள் மக்களுக்கு புரியாது ஒரு உதாரணமாக சொல்லலாம்.
எந்த மொழி வளைந்து கொடுக்கும் தன்மை உள்ளதே அதுவே சிறந்த மொழி.
(1955 ல் வெளி வந்த பல தமிழ் படங்களில் ஆங்கில கலப்பு இருப்பதை பார்க்கலாம்..ஆனால் தற்போது அவ்வகை வார்த்தைகள் பயன் பாட்டில் இல்லை )

அழகாக சொல்லுவதை விட தெளிவாகச்சொல் என ஒரு பழமொழி உண்டு.

புரியும் படி சொல்வது பெட்டர்ன்னு :) தோனுது !

நம் லோகத்தில் இருக்கும் ஒரு அகராதி
ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ் சொற்கள்

oolvathiyar 21-07-12 07:58 PM

Quote:

Originally Posted by vjagan (Post 1164838)
நண்பர் ஒருவர் சொல்லியது போல நாம் நம் தாய் மொழிதமிழை யாருக்காகவோ அடகு வைத்துப் பல அந்நிய மொழிகளை நம் மொழியாகஇணைத்துக் கொண்டோம்.

ஆங்கிலம் மட்டுமல்ல, இப்ப நாம் பயன்படுத்தும் தமிழில் சமஸ்கிருத வார்த்தைகள் 3000 வருடங்களுக்கு முன்பே கலந்து விட்டது. அதே போல ஹிந்தியிலும் பல ஆண்டுகளுக்கு முன்பே பல தமிழ் வார்த்தைகள் கலந்து விட்டது. ஏராளமான வார்த்தைகள் வட இந்திய தென் இந்தியா முழுவதும் ஒரே மாதிரி இருக்கும் (அதன் பிறப்பிடம் எது என்று இன்னும் சர்சையா இருக்கு). தமிழிலிருந்தும் ஆங்கிலத்துக்கு வார்த்தைகள் போயிருக்கிறது.
ஒரு உதாரனம்
மண் என்பது தமிழ் + சமஸ்கிருத வார்த்தை. மன்னிலிருந்து பிறந்தவன் என்பதால் மனிதன் என்று சொல் வர மனு என்ற வார்த்தையும் இதிலிருந்துதான் வந்தது. அதுவே ஆங்கிலத்திலும் மேன் என்ற வார்த்தையாக பயன்படுத்தபடுகிறது.

உலகம் முழுவதும் பிறமொழி கலப்பில்லாமல் எந்த மொழியும் இருக்காது. எந்த மொழி பல மொழிகளிலிருந்து சொற்களை வாங்கி கொள்கிறதோ அந்த மொழி பவர்புல்லாகவும் அழியா மொழியாகவும் விளங்கும்.

அதுவும் டெக்னிக்கல் வார்த்தைகளுக்கும் கண்டுபிடித்து பயன்படுத்துவது உலகலாவிய அறிவு பரிமாற்றலை தடுக்கும் என்பது என் கருத்து. டெக்னிக்கல் தமிழ் வார்த்தைகள் படித்தவர்களுக்கே தடுமாறும் போது படிக்காதவர்களுக்கு படு கஷ்டம். உதாரனத்திற்க்கு படிக்காதவர்களுக்கு ரேடியோ டீவி என்றால் என்னனு தெரியும் ஆனால் வானொலி தொலைகாட்சி நு சொன்னா அவர்களுக்கு புரியாது. அதில் தவறும் இல்லை.

ஆகையால் பிறமொழி கலப்பை நான் குறை சொல்லாமல் ஏற்று கொள்ள வேண்டும்.
Quote:

Originally Posted by mouse1233 (Post 1164856)
எந்த மொழி வளைந்து கொடுக்கும் தன்மை உள்ளதே அதுவே சிறந்த மொழி.

அருமையான பாயின்ட். மேலும் இங்கே கதை எழுதுபவர்கள் அனைவருக்கும் புரிந்து ரசிக்கும் படியும் எழுத வேன்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேன்டும்.

KANNAN60 22-07-12 01:58 AM

தூய தமிழில் எழுதுவது ஒரு கலை நண்பர் விஜெகன் அவர்களே! அது உங்களுக்கு நன்றாகக் கைகூடி வருகிறது என்பதை உங்கள் கதைகளில் கண்டு வியப்பவன் நான்! எனக்கும் அப்படி எழுதப் பிடிக்கும்தான்.

ஆனால், ’உண்மை வாழ்க்கையில் நடப்பதை அப்படியே கதைகளில் எழுதினால் இயல்பாக இருக்குமே’ என்ற நோக்கத்தில் அவ்வாறு ஆங்கிலக் கலப்பில் எழுத நேர்கிறது. இல்லையென்றால், படிப்பவர்களிடம் இருந்து நம் கதை அந்நியப்பட்டுவிடுமோ என்ற சிறு அச்சமும் (அது தேவையற்ற அச்சமாக இருக்கலாம்) அவ்வப்போது எழுந்து தூய தமிழ்நடையிலிருந்து இயல்பு நடைக்குத் தாவ நேர்கிறது.

வாத்தியார் குறிப்பிட்டதுபோல் சமஸ்கிருதக் கலப்பும் நம்மில் தவிர்க்க இயலாததாகவே ஆகிவிட்டது.

எடுத்துக்காட்டாக, ”வாசகம்”, ”மந்திரம்”, ”நிர்ப்பந்தம்”, ”ஆதங்கம்” முதலியவை சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்குத் தாவியவை என நினைக்கிறேன்.

நல்ல திரிக்கு 5 விண்மீன் பாராட்டுகள் நண்பர் விஜெகன் அவர்களே! உங்கள் தமிழுக்கு ரசிகன் நான்!

PUTHUMALAR 22-07-12 08:13 AM

எலியார், வாத்தியார், கண்ணன் ஆகியோர் அழகாக கூறிய பின் நான் என்ன கூறுவது.. அவர்களின் கருத்தை அப்படியே நானும் இங்கே வழி மொழிகின்றேன்..

என்னாலும் பிறமொழிச் சொற்கள் கலக்காமல் தூய தமிழில் எழுத முடியும்.. ஏற்கனவே எழுதியும் உள்ளேன்.. ஆனால் அது கதை படிப்பவர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கவில்லை என்பதை அறிந்த பிறகு நான் என் நடையை மாற்றிக் கொண்டேன்..

குறிப்பு: இப்பதிவில் பிறமொழி கலப்பில்லை..

SIRUTHAI 22-07-12 09:14 PM

ஜெகன் அன்பருக்கு என் மரியாதையான வணக்கங்கள்!

இத்திரியை ஆரம்பித்து தங்கள் ஆதங்கங்களை பரிமாறிக்கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள்!

சுத்தமான தமிழில் எழுததான் எனக்கும் பிடிக்கும்... நானும் என் கதைகளில் குறைந்தபட்ச ஆங்கில வார்த்தைகளை மட்டுமே உபயோகிக்கிறேன். கதையில் யதார்த்தத்தை கொண்டுவர சில சில வார்த்தைகளை உபயோகிப்பது கட்டாயமாகிறது. சில சமயம் ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பது கொஞ்சம் பொது அறிவு வளரவும் உதவுகிறது. இந்த லோகத்தில் இருக்கும் உறுப்பினர்கள் வெறும் காமக்கதைகளை மட்டுமே படிக்காமல்/படைக்காமல் நிறைய பொதுநலக் கருத்துகளையும் கதை மற்றும் பிற பதிப்பு மூலம் பதிக்கிறார்கள்! ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது, அதன்மூலம் மற்றவர்களுக்கு கொடுக்கிறார்கள்!

ஆனால் எல்லோரையும் தமிழ் வார்த்தைகள் மட்டுமே உபயோகித்து கதை எழுத வைக்க முடியும்... அதற்கு ஒரு சவால் போட்டியை நீங்கள் நடத்தினால் சிறப்பாக இருக்கும்... எந்த அளவிற்கு அரிய தமிழ் வார்த்தைகளை உபயோகித்து/தமிழ் வார்த்தைகள் மட்டும் உபயோகித்து சிறப்பான காமக்கதை கொடுக்கிறாரோ அதைப் பொறுத்து பரிசளிக்களாம்!

dreamer 23-07-12 06:20 AM

என் படைப்புகளிலும் பின்னூட்டங்களிலும் நிறைய ஆங்கில வார்த்தைகள் த்மிழில் 'ஒலிமாற்றம்' செய்யப்பட்டிருக்கும். இதறகுக் காரணம் மணிப்பிரவாளமாகப் பேசிப்பேசி எழுதும்போதும் அப்படியே வருகிறது. தனித்தமிழில் பொதுவான இடங்களில் பேசிப்பாருங்கள், அனேகமாக அனைவரும் உங்களை 'ஒருமாதிரி' பார்ப்பார்கள். (உ.ம்.: 'நான் ஒரு பணவிடை அனுப்ப விரும்புகிறேன். அஞ்சலகம் எங்கே இருக்கிறது?') இயல்பாக எழுதவேண்டுமா, செயற்கையாக எழுத வேண்டுமா என்பது கேள்வி.

அன்றாடம் பேசுகையில் பயன்படுத்தும் பல ஆங்கிலச் சொற்களுக்குச் சரியான தமிழ்ச்சொற்கள் கிடைப்பதில்லை. இன்னும் பல்வற்றுக்கு யோசித்துக் கண்டுபிடிக்க வேண்டும். இது நேரம் எடுத்துக்கொள்ளும் செயல். தேவைதானா?

என்னாலும் தூய தமிழில் எழுத முடியும் --.ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல் - (1). அது இயற்கையாக இருக்காது; (2) கால விரயம் ஆகும்.

மன்னியுங்கள், நான் என் எழுத்துப் பாணியை மாற்றிக்கொள்ளப் போவதில்லை.

asho 23-07-12 11:48 AM

எனக்குத்தெரிந்தவரை, மொழி என்பது ஒருவர் கருத்தை, ஒருவர் சொல்ல வந்ததை இன்னொருவர் புரிந்து கொள்ளவே.மொழிக்கான இலக்கணம் என்பது அந்த மொழியை செம்மைப்படுத்த.

இங்கே காமலோகத்தில் ஆங்கிலத்தில் எழுதுவதை தவிர்க்க சொல்வது செக்ஸ் வார்த்தைகளை கண்டு தளங்களை தடை செய்யும் வளைகுடா பில்டர்களில் இருந்து லோகத்தை காப்பற்றவே. மற்றபடி தூய தமிழில் தான் எழுதனும் கதை அமைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதும் இல்லை.

நம்ம வாத்தியார் தமிழை அடித்து, துவைத்து, பிழிந்து, ஒச்சப்படுத்தி பதிந்தாலும் அவர் சொல்ல வரும் உட்கருத்தை புரிந்து பதிலுக்கு நாம் பதில் அல்லது அர்த்தம் புரிந்து கொள்வதை விட ஆங்கில வார்த்தைகளை தமிழில் ஒலிக்குறிப்பாக பதிவதை ஏற்றுக்கொள்வதில் சிக்கலில்லை.

தனித்தமிழை எழுதுவதை நாம் ஊக்குவிக்கலாமே அன்றி கட்டாயப்படுத்த முடியாது. பிழை இல்லாமல் தமிழில் எழுதுவதும் அப்படியே.

இருவர் சந்திக்கும் போது வெவ்வேறு மொழி பேசுபவராக இருந்தாலும், ஒருவர் சொல்வதை மற்றொருவர் கூடுதல் சைகைகள் மூலம் அர்த்தம் புரிந்து கொண்டால் பிரச்சினை தீர்ந்தது என்று கொள்ளலாம்.

இங்கே கதை எழுதுபவர் தான் சொல்லவந்ததை தனக்குத்தெரிந்த வார்த்தைகள் போட்டு தன்க்கென்று தனி முத்திரையுடன் பதிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

சிறுவயதில் நான் பட்டுக்கோட்டை பிராபகர் கதை ஒன்றை படிக்கும் போது சிறிது யோசித்து பின் புரிந்து ஆச்சர்யப்பட்டேன். அந்த வரி.

"அவன் அடித்த பின் தலை ஆங்கிலத்தில் வெற்றி வெற்றி என்று வலித்தது".

இதில் ஆங்கிலவரி நேரடியாக இல்லை, ஆனால் ஆங்கிலம் தெரிந்திராமல் ரசிக்க முடியாது.


இன்னொரு பெரிய உண்மை. நாம் இன்று பயன்படுத்தும் பல தமிழ் வார்த்தைகள்(நல்ல தமிழ் வார்த்தை என்று நினைப்பவை கூட) உண்மையிலே தமிழ்வார்த்தைகள் இல்லை. பாரசீக, அரபு, உருது, சமஸ்கிருத சொற்கள் கொண்டவையே.

எல்லோரும் அசால்ட்டாக பயன்படுத்தும் அசால்ட் என்ற வார்த்தை மறைந்திருந்து, கவனமாயிராத போது தாக்கு என்று அர்த்தம் தரும் ஆங்கில வார்த்தையை நாம் எப்படி எளிதாக ஈசியாக எடுத்துக்கொண்டிருக்கோம். :).

niceguyinindia 24-07-12 11:16 PM

சுத்தமான தமிழ் படைப்புகளை படைக்க ஆர்வம் தான் ஆனால் அது எந்த அளவுக்கு வெற்றியை தரும் என்பது தெரியவில்லை கதையின் சுவாரஸ்யத்துக்காக இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதில் தவறொன்றும் இல்லை என்றே நானும் கருதுகிறேன்

HERMI 30-08-12 08:01 AM

உங்கள் ஆதங்கம் புரிகிறது...அதேசமயம் தூய தமிழில் கதை எழுதுவது உங்களுக்கு நன்றாக வருகிறது..ரசனையாகவும் இருக்கிறது..ஆனால் அதை எல்லோரும் முயற்சி செய்தால் சரியாக வருமா என்று தெரியவில்லை..அதனால் நீங்கள் உங்கள் பாணியிலேயே தொடருங்கள். சரியா?

பிற மொழிகளை தமிழில் கலந்து (தமிழில் எழுதுவது) வருவது தமிழுக்கு சிறப்புதானே..! காமலோகத்தில் ஆங்கில வார்த்தைகளை நேரிடையாக தட்டச்சு செய்யாமல் தமிழில் தட்டச்சு செய்வதால் இதை ஒரு குறையாக சொல்ல முடியாது.

நண்பரே, ஜெகன் உங்கள் தமிழ் தொண்டு தொடரட்டும்...வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 08:16 PM.

Powered by Kamalogam members