காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   டிரீமர் இறையடி சேர்ந்தார். (http://www.kamalogam.com/new/showthread.php?t=68532)

tdrajesh 13-04-16 06:32 AM

டிரீமர் இறையடி சேர்ந்தார்.
 
நம்முடைய அண்ணன் ட்ரீமர் மூன்று நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டார். வெண்டிலேட்டர் மூலம் அவர் சுவாசிக்க உடல் நலம் தேறி வந்தார். ஆனால் நேற்று அவரின் உடல் நலம் சற்று சீரியஸாக இருப்பதாக டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.

அவர் பூரண நலம் பெற்று திரும்பி வர எல்லாம் வல்ல அந்த ஆண்டவரிடம் பிரார்த்திப்போம்.

பின்னர் பதிந்தது: (15.04.2016)

அருமை அண்ணன் டிரீமர் நேற்று இரவு ஒன்பது மணியளவில் இறையடி சேர்ந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரின் இறுதிக் கிரியைகள் இன்று காலை ஒன்பது மணியளவில் நடக்கவிருக்கிறது.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்….

Nallavan1010 13-04-16 06:38 AM

அண்ணன் ட்ரீமர் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது கவலையை தருகிறது. அவர் சீக்கிரம் நல்ல குணமடைந்து நம்முடன் உலாவ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அண்ணன் ட்ரீமர் விரைவில் பூரண குணமடையவேண்டும் இறைவா.

asho 13-04-16 07:38 AM

ட்ரிம்மர் அண்ணா, தளத்து மூத்த உறுப்பினர் விரைவில் குணமடைந்து மறுபடியும் சுறுசுறுப்பாக தளம் வலம் வர இறைவனிடம் பிரார்த்திருக்கிறேன்.

அனைவரின் வேண்டுதல்களும் நிச்சயம் அவருக்கு உடல்நலம் சிறப்படையச்செய்யும்.

Guna2009 13-04-16 08:32 AM

டிரீமர் அவர்கள் கூடியவிரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

PUTHUMALAR 13-04-16 09:41 AM

லோக பீஷ்மர் பூரண உடல் நலத்துடன் நலம் பெற்று நம்முடன் எப்போதும் போல் உலாவி வர இறைவன் அருள் புரிய வேண்டுகின்றேன்..

gmkumar_007 13-04-16 10:42 AM

பூரண நலமுடம் நலத்துடன் அண்ணா அவர்கள் வர இறைவனிடம் மன்றாடி வேண்டுகிறேன்

oolvathiyar 13-04-16 11:21 AM

டிரீமர் அவர்கள் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப இறைவனை பிராத்திக்கிறேன்.

HERMI 13-04-16 11:30 AM

நம்முடைய லோக வழிகாட்டி அண்ணன் ட்ரீமர் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற அந்த இறைவனை இறைஞ்சுகிறேன்.

Nallavan1010 13-04-16 02:54 PM

நான் நண்பர்கள் tdrajesh மற்றும் ராசு மூவரும் சற்று முன் அண்ணன் ட்ரீமர் அவர்களை அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் சென்று பார்த்துவிட்டு வந்தோம். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவர் நிலை தொடர்ந்து கவலைக் கிடமாகவே உள்ளது.

நம் லோக நண்பர்களின் கூட்டுப்ரார்த்தனை தான் அவரை விரைவில் குணமடைய செய்யவேண்டும். எல்லாம் வல்ல இறைவன் அதற்கு அருள் புரிவாராக.

ஸ்திரிலோலன் 13-04-16 03:05 PM

ட்ரீமர் ஐயா விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்..

RAJA678 13-04-16 03:07 PM

உடல் நலம் சீக்கிரம் குனமடையை பிரார்த்திப்போம்

mouni 13-04-16 03:30 PM

பூரண குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்! பிராத்திக்கிறேன்.

மௌனி

பச்சி 13-04-16 03:55 PM

நண்பர் மரியாதைக்குரிய ட்ரீமர் அவர்கள் உடல் நலம் இறையருளால் விரைவில் முன்னேற்றம் காணவும், பூரண நலம் பெறவும் வேண்டுகிறேன். தொடர்பில் இருக்கும் நண்பர்கள் நல்ல தகவலை விரைவில் சொல்வார்கள் எனவும் நம்புகிறேன்.

maria 13-04-16 04:25 PM

டீரிமர் ஐயா விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

தாசன் 13-04-16 07:25 PM

நண்பர் விரைவில் பூர்ண நலத்துடன் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறையை இறைஞ்சுகிறேன்.

Sent from my SM-N9005 using Tapatalk

tamilplus 13-04-16 11:28 PM

மூத்த உறுப்பினரும் , பலருக்கு வழிகாட்டியாகவும் திகழும் ட்ரீமர் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலை நீங்கி அவர் நலம் பெற்று , அனைவரையும் மகிழ்ச்சிக்கிடமாக மாற்றிட இறைவனை மனமுருக வேண்டுகிறேன்.

Thiru Raj 13-04-16 11:55 PM

ட்ரீமர் அவர்கள் உடல் நலம் பெற மனதார பிரார்த்திக்கிறேன்.

- ராஜ் -

NamiXXX 14-04-16 12:37 AM

ட்ரீமர் அண்ணாவின் நலமடைந்து சீக்கிரமே கமலோகதிர்க்கு தொண்டாற்ற விழைகிறேன் .

venkat8 14-04-16 03:09 AM

மதிப்பிற்குரிய ட்ரீமர் ஐயா விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Kaathadi 14-04-16 06:33 AM

வயது அதிகம், உடல் நலக் குறைவு என்றாலும் தளராமல் பல கருத்துக்களை முன் வைத்தவர் இவர். அவர் துயரத்தில் இருந்து விடு பட வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

nandabalan 14-04-16 07:47 AM

பூரண குணமடைந்து விரைவில் மருத்துவமனையிலிருந்து திரும்ப இந்த புத்தாண்டு தினத்தில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

hard bang 14-04-16 09:57 AM

நண்பர் ட்ரீமர் உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேண்..

tdrajesh 15-04-16 06:01 AM

அருமை அண்ணன் டிரீமர் நேற்று இரவு ஒன்பது மணியளவில் இறையடி சேர்ந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரின் இறுதிக் கிரியைகள் இன்று காலை ஒன்பது மணியளவில் நடக்கவிருக்கிறது.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்….

Nallavan1010 15-04-16 06:07 AM

மிகவும் வருத்தமளிக்கும் செய்தி. அண்ணன் ட்ரீமர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.

kaamaroja 15-04-16 06:22 AM

அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.

HERMI 15-04-16 06:45 AM

அன்பு அண்ணன் ட்ரீமர் நம்மை எல்லாம் விட்டு நீங்கி விட்டார் என்ற செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது. நல்ல நண்பனாய், நல்ல வழிகாட்டியாய், நல்ல உறவாய் இருந்தவர் இன்று நம்மோடு இல்லை என்பது ஒரு பெரிய இழப்புதான். அவரின் ஆன்மா இறைவனில் அமைதி கொள்ள வேண்டுகிறேன்...கண்ணீரோடு.

hard bang 15-04-16 08:30 AM

அன்னாரின் ஆன்மா அமைதி பெற பிரார்தனை செய்வோம்.

Guna2009 15-04-16 08:58 AM

மிகவும் வருத்தமான செய்தி. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

cembi 15-04-16 09:45 AM

மிகவும் வருத்தம் தரும் செய்தி. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லோரும்
ப்ரார்த்திப்போம்.

kamakedi 15-04-16 10:04 AM

ட்ரீமர் அண்ணன், நம் தளத்தில் உள்ள ஒரு மூத்த உறுப்பினர். நான் அவரை இருமுறை நேரில் சென்று சந்தித்து இருக்கிறேன். அவரின் பழகும் தன்மையும், நல்ல அறிவாற்றலும், அந்த வயதிலும் அவரின் சுறுசுறுப்பும் , அவரின் நகைச்சுவை உணர்வும் என்னை மலைக்க வைத்தது.
அவர் நம்மை விட்டு பிரிந்த செய்தி மிகவும் என்னை துயரத்தில் ஆழ்த்துகிறது. அவரின் நினைவுகள் என் வாழ்நாள் முழுக்க இருக்கும்.

shiva19 15-04-16 10:41 AM

ட்ரீமர் அண்ணா என்றதும் நான் நினைத்தது ஒரு 40-45 வயதான ஒரு மனிதரை. ஆனால் நேரில் சந்தித்த போது மலைத்துப் போனேன். அந்த வயதான தோற்றம் மட்டும் தான் நிஜம். மனம் விட்டு பேசும்போது ஒரு 25 வயது இளைஞர் போல் பேச்சு... குழந்தை போல் இனிமையான மிக்க அன்போடு பேசினார். பின்னர் சந்திக்க இயலவில்லை. ஆனால் இன்று அவர் நம்மிடம் இல்லை என்ற செய்தி கேட்டவுடன் மனம் மிக்க அழுத்தம் தந்து ஓர் சொந்த அண்ணன் நம்மை விட்டு பிரிந்தால் என்ன துயரம் ஏற்படுமோ அது போல் ஆகி விட்டது. அன்னாரின் ஆன்ம சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன். என்றும் அன்னாரின் நினைவுகளோடு......

geevan 15-04-16 10:42 AM

மீளா துயர்த்தில் விட்டு சென்ற நமது தளத்து வழிகாட்டி ட்ரீமர் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

Ondipuli 15-04-16 11:22 AM

அண்ணன் அவர்கள் இறந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது... அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்...

sreeram 15-04-16 11:35 AM

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிராரத்திக்கின்றேன்.

sunrise 15-04-16 11:35 AM

ட்ரீமர் அண்ணன் இறையடி சேர்ந்த செய்தியை கேட்டு மனதுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

maria 15-04-16 11:59 AM

மிகவும் துயரமுற வைத்த செய்தி
டிரீமர் ஐயாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் காமலோகநண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.
அவரது இறுதிசடங்கில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் நன்றி

ராசு 15-04-16 12:14 PM

இன்று காலை 7:00 மணியளவில் அந்த சோக செய்தி வந்தது ! இந்த சோக செய்தியை நமது தள நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலமும், (எஸ் எம் எஸ்) குறுஞ்செய்தி மூலமும் அனுப்பினேன். நானும் நண்பர் "tdrajesh" அவர்களும் நேரில் சென்று, அவரது உடல்மீது மலர் மாலை வைத்து, இறுதி மரியாதை செய்து விட்டு, உற்றார் உறவினர்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு, மயான ஊர்வலம் ஆரம்பித்ததும் வீடு திரும்பினோம்.

அவரது மரணம் ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு !

gemini 15-04-16 12:18 PM

ட்ரீமர் அண்ணாவின் ஆத்மா சாந்தி ஆடையை இறைவனை வேண்டுவோம்.
அவருடையை குடும்பத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

think4perfect 15-04-16 12:51 PM

மிகவும் வருத்தமான செய்தி. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

selvenselvi 15-04-16 01:06 PM

மன​தை வருத்தும் ​செய்தி. அன்னாரது ஆன்மா சாந்திய​டைய கடவு​​ளை பிராதிர்க்கி​றேன்.

jayjay 15-04-16 01:48 PM

அன்னாரது ஆன்மா சாந்திய​டைய கடவு​​ளை பிராதிர்க்கி​றேன்.

lawrence 15-04-16 02:00 PM

அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்

MACHAN 15-04-16 02:50 PM

ட்ரீமர் ஐயாவை நேரில் சந்தித்தவர்களில் நானும் ஒருவன். அவர்களின் இழப்புச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

வாட்ஸ் அப் வழி தகவல் அறியத்தந்த காமக்கேடியார் அவர்களுக்கு நன்றி.

பச்சி 15-04-16 03:59 PM

நண்பர் ட்ரீமர் அவர்களின் இறப்பு மிகுந்த வருத்தத்திற்குரிய ஒன்று தான். அவர்களை ஒன்றுக்கு இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். அந்த சந்தித்த பொழுதுகளின் நினைவுகள் கண்முன்னே நின்று கொண்டே இருக்கிறது. நல்ல மனிதர், அன்பும் மரியாதைக்கும் உரியவரான ட்ரீமர் அவர்கள் இன்று நம்முடன் இல்லை என்பது மிக மிக வருத்தம் அளிக்கிறது.

ராஜேஷ் மற்றும் ராசு சார் ஆகியோரின் தகவல் பதிவுகளுக்கும், இறுதிச் சடங்கில் கலந்து கொண்டமைக்கும் நன்றி.

வந்தியத்தேவன் 15-04-16 04:04 PM

இறைவா.. மரணம் கடக்கா மனிதன் இல்லை..

எனினும் மனிதன் அதை ஏற்றுக் கொள்ள தயாராயில்லை.

ட்ரீமர் அண்ணனின் ஆன்ம சாந்திக்குப் பிரார்த்திக்கிறேன்..

salem1963 15-04-16 04:33 PM

நமது உறுப்பினர் ட்ரீமர் அவர்கள் இறைவனடி சேர்ந்ததற்கு எனது ஆழ்ந்த வருந்தங்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்

anabayan 15-04-16 05:04 PM

இன்று காலையில் நண்பர் நல்லவன் அவர்கள் போனில் நம் லோக பிதாமகராக விளங்கிய அண்ணன் ட்ரீமர் அவர்கள் இப்பூவுலகம் விடுத்து மேலுலகத்தில் இறைவனின் பாதம் அடைந்தார் என்ற சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்ததோடு சொல்லொன்னா துயரமும் அடைந்தேன்.

அண்ணன் ட்ரீமர் அவர்களை நண்பர்கள் ராசு மற்றும் ராஜேஷ் அவர்களின் உதவியால் இரு முறை சந்தித்து பேசும் பாக்கியம் பெற்றவன். வயதில் மூத்திருந்தாலும் அவர் பேச்சில் குழந்தைதனமிருக்கும் எழுத்தில் இளமையிருக்கும்.

உடல் நலம் முடியாத சமயங்களில் கூட லோகத்தில் பங்களிக்க அவர் ஆர்வம் கொண்டவராய் இருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.

அமரரான அண்ணன் ட்ரீமர் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குவதோடு அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன்.

அண்ணனின் ஆன்மா இறைவனின் பாதத்தில் சாந்தியுடன் இளைப்பாற அந்த ஆண்டவனை பிராத்திக்கிரேன்.

oolvathiyar 15-04-16 05:44 PM

காமலோத்தில் மறக்க முடியாத வகையில் பெரிய கதைகள் வித்தியாசமான சிந்தனைகள் கொன்ட கதைகளை படைத்தும், நச்சென்று பின்னூட்டம் மூலமாக அனைவர் மனதையும் கவர்ந்த நன்பர் டிரீமர் காலமாகி விட்டார் என்ற செய்தி மிக மிக* வருத்தமான செய்தி. நான் லோகத்தில் சேர்ந்து 10 வருடம் பக்கம் ஆகிறது, இது தான் லோகத்தில் முதல் மரண செய்தி.

தன்னுடையை மரணம் எப்ப வரும் மிக சிறந்த ஞானிகளே உனர்வார்களாம், நம்ம டிரிமரும் அவ்வாறு உனர்ந்திருந்ததால் தான் சில மாதங்களுக்கு முன்பு,

லோக உறுப்பினர் மரணித்தால்...?


டிரிமர் அண்ணனின் பரிந்துரைபடி தான் நான் ஓல்நீதிமன்றம் என்ற சவால் போட்டியை துவங்கினேன்.

உடல் நலம் குறைந்த பிறகும் வந்து பின்னூட்டங்களை செய்து எங்களை மகிழ்ச்சியில் வைத்திருந்த நபர் டிரிமர். நான் எந்த படைப்பு செய்தாலும் டிரிமர் அண்ணனிடமிருந்து பின்னூட்டம் எப்ப வரும் என்று ஆவலுடன் ஏங்குவேன். நான் துவங்கி ஓல்நீதிமன்ற சவால் போட்டி அறிவிப்பு திரியில் டிரிமர் அண்ணன் அவர்கள் பதித்ததுதான் காமலோகத்தில் அவர் பதித்த கடைசி பதிப்பாகி விட்டதே. அதை அவர் எனக்கு கொடுத்த வரமாகவே நான் ஏற்றுக்கொள்கிறேன்.

டிரிமர் அண்ணனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை லோக நன்பர்களுக்கு தெரிவித்து அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய கடவுளை பிராத்திக்கிறேன்.

ஸ்திரிலோலன் 15-04-16 06:15 PM

ட்ரீமர் ஐயா அவர்களின் உடல்நிலை கடந்த சில நாட்களாக அண்ணன் ராஜேஷ் மற்றும் நல்லவன் அவர்களின் மூலம் அறிந்து வந்தேன். இடையே வெண்டிலேட்டர் சப்போர்ட்டில் இருந்து, அதன் பின் சற்று தேறி வருவதாய் அறிந்து ஆறுதல் அடைந்தேன். ஆனால் அதன் பின் சீரியஸ் ஆகி, இன்று ஐயா இறைவனடி சேர்ந்ததை அண்ணன் ராசு அவர்கள் வாட்ஸப் மூலம் கொடுத்த தகவல் மூலம் இன்று காலை அறிந்தேன். லோக நண்பர்கள் பலரை இது வரை சந்தித்து இருந்தாலும், ட்ரீமர் ஐயா அவர்களை கடைசி வரை சந்திக்க முடியாமல் போனது என் துரதிருஷ்டம். அவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

RAJA678 15-04-16 08:06 PM

நண்பரின் பிரிவுக்கு எனது வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்

asho 15-04-16 08:19 PM

வருத்தமான செய்தியை தாமதமாகவே அறிந்தேன். இம்மாதிரி நடக்காது என்றே நினைத்தேன். ஆனால், ட்ரீம்மர் அண்ணா நம்மை விட்டு பிரிந்து விட்டார்.

அவர் ஆத்மா சாந்தியடையவும், அவர் பற்றிய நம் நல்லெண்ணங்கள் அவரை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லவும் வேண்டிக்கொள்கிறேன்.

RasaRasan 15-04-16 09:04 PM

சென்னையில் நண்பர்கள் சந்திப்பின் போது நடந்த அலை பேசி உரையாடலின் போது ட்ரீமர் அய்யா அவர்களுடன் பேசியுள்ளேன். ட்ரீமர் அய்யாவை சென்னைக்கு செல்லும் போது எப்படியும் சந்திக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அது முடியாமல் போய் விட்டது.

தளத்தில் எப்போதும் எனது நல விரும்பியாய் இருந்தவர் ட்ரீமர் அவர்கள்.

ட்ரீமர் அய்யா விண்ணுலகில் இறைவனுடன் இளைப்பாற எல்லாம் வல்ல இறைனிடம் வேண்டுகிறேன்.

ராஜேஷ் மற்றும் ராசு சார் ஆகியோரின் தகவல் பதிவுகளுக்கும், இறுதிச் சடங்கில் கலந்து கொண்டமைக்கும் நன்றி.

காமகேடியாரின் வாட்சப் பதிவை என்னிடம் அலைபேசியில் சொன்ன மச்சானுக்கும் நன்றி.

madan 15-04-16 09:16 PM

மிகவும் வருத்தமான செய்தி. நல்ல மனிதரை இழந்து விட்டோம்.

Kanchanadasan 15-04-16 09:25 PM

மனம் நிறைய வருத்தத்துடன் அஞ்சலி

nandabalan 15-04-16 09:51 PM

இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். இதை திரு.ராசு அவர்களின் வாட்ஸ்ப் தகவல் மூலம் பார்த்ததும் மிகவும் வேதனை அடைந்தேன்.

dhamaya 15-04-16 10:33 PM

நமது தளத்தின் மூத்த உறுப்பினர் திரு.டிரீமர் அவர்கள் இறையடி சேர்ந்தார் என்று கண்டவுடன் ஆளா துயரம் கொண்டேன். அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
தமயா

PUTHUMALAR 15-04-16 10:50 PM

துயர செய்தியை ஜீரணிக்க முடியவில்லை.. மனம் ஏற்க மறுக்கின்றது.. இதை தட்டச்சு செய்யும் போதே இதயம் கனத்து கண் விழிகளில் நீர் கோர்த்து நெஞ்சு விம்முகின்றது.. அன்னாரின் பாதத்தில் என் கண்ணீர் துளிகளால் அஞ்சலி செலுத்துகின்றேன்.. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்..

துயாரமான திரிக்கு ஸ்டார் ரேட்டிங் கொடுக்க மனம் ஒப்பவில்லை..

NamiXXX 15-04-16 10:50 PM

டிரிமர் அண்ணனின் பிரிவுக்கு எனது வருத்தத்தையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்

knantham 15-04-16 11:06 PM

நேரம் போக்க தளத்தினுள் நுழைந்த எனக்கு இந்த செய்தி மிகுந்த துக்கம் அளிக்கிறது.
இந்த தளத்தில் ஒவ்வொருவரையும் எழுத்துக்கள் மூலமே பார்த்து வந்தேன். திரு டிரீமர் அவர்களின் எழுத்துக்களிலிருந்து அவர் பக்குவமான மனிதர் என்பதை உணர்ந்தேன்.
அவரது மரண செய்தி எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. மண்ணுலகை விட்டு விண்ணுலகை அடைந்த ஆத்மா சாந்தி அடைய நானும் பிராத்திக்கிறேன்.

gayathrigrp 15-04-16 11:13 PM

ஆழ்ந்த அஞ்சலிகள். அன்னாரின் ஆன்மா சாந்தி பெற என் பிராத்தனைகள்.

pooja_priyan 15-04-16 11:19 PM

அண்ணன் ட்ரீமர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

kay 15-04-16 11:31 PM

அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ட்ரீமர் அய்யா அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி கண்டு மிகவும் வருத்தம் உற்றேன். மிகவும் பண்புடையவர் அவர். அவர் பின்னூட்டங்கள் சிலவே ஆனாலும் நன்கு உற்சாகப்படுத்துவார். அவர் இறைவனுடன் என்றும் ஒன்றாய் இருக்கப் பிரார்த்திக்கிறேன்! அவர்தம் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இறப்புக்கள் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன! தகவல் பதிவு செய்த நண்பர் டிடிஆர் அவர்களுக்கு மிக்க நன்றி!:0021:

subbu2000 16-04-16 12:43 AM

எனது சில கதைகளுக்கு ட்ரீமர் அண்ணனிடமிருந்து பின்னுட்டங்கள் கிடைக்க பெற்றேன். அவருடைய எழுத்திலிருந்தே அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தியிருந்தார். அவரிடம் எப்படியாவது பின்னுட்டம் பெற்றுவிடவேண்டும் என்ற அவா எனக்கு எப்போதுமே உண்டு. அப்படிப்பட்ட பெரியவரின் மறைவு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருக்கின்றது

mouni 16-04-16 02:48 AM

லோகத்தில் நான் இருந்த ஒரக்குறைய 10 ஆண்டுக்கு மேலாக லோகத்தை அடைந்து வெளியே லாக் அவுட் ஆகும்போது சோகமாக போனது கிடையாது. அந்த அளவு நேற்றிலிருந்து ஏதோ ஒரு மனபாரம் மனதை அழுத்தி உள்ளது. ஒரு குடும்ப உறுப்பினரை இழந்த ஒரு உணர்வு.

அவர் ஆன்மா சாந்தியடையட்டும். அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

மௌனி

venkat8 16-04-16 04:31 AM

மிக்க சோகமான செய்தி. ட்ரீமர் ஐயா மருத்துவமணையிலிருந்து விரைவில் குணமடைந்து செல்வார் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால் இந்து துக்ககரமான செய்தியை எதிர்ப்பார்க்கவில்லை. இந்தியா சென்றால் சென்னைக்கு சென்று ட்ரீமர் ஐயாவை சந்திக்கலாம் என்றிருந்தேன்.

ட்ரீமர் ஐயா பற்றி வாத்தியார் சொன்ன கருத்துகள் யாவும் உண்மையே.

ட்ரீமர் ஐயாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

gmkumar_007 16-04-16 09:42 AM

அண்ணா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
இது ஒரு மிக பெரிய இழப்பு இந்த தளத்திற்கு

காமராஜன் 16-04-16 12:40 PM

துயரமான செய்தி.. நண்பர் ட்ரீமர் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்

அன்பு 16-04-16 12:41 PM

தளத்தின் மூத்த உறுப்பினர் ட்ரீமர் ஐயாவின் மறைவு செய்தியை கேட்டு மிக மனவருத்தம் அடைகிறேன்.

ஐயா அவர்கள் இவ்வுலகை விட்டுப்பிரிந்தாலும் உறுப்பினர்கள் அனைவரின் நினைவிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

xxxGuy 16-04-16 05:19 PM

நமது மூத்த உறுப்பினர், அண்ணன் "டிரீமர்" இயற்கை எய்தியது மிக வருத்தத்தை அளிக்கிறது.
இந்த வயதிலும் அவரது சுறுசுறுப்பும் பங்களிப்பும் என்னை வியக்க வைத்தது.
அவரது இழப்பு செய்தியை கேட்டது முதல் என் நெஞ்சத்தை துக்கம் அழுத்துகிறது.
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

nana2003 16-04-16 05:34 PM

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

anarth_maddy 16-04-16 08:22 PM

அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

BILLA 16-04-16 08:50 PM

ஐயா டீரீமர் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்

கண்ணன்76 17-04-16 12:05 AM

லோகத்தின் மூத்த உறுப்பினர், எல்லாருக்கும் நல்ல வழிகாட்டியாக செயல்பட்டவர். அவரின் ஆன்மா சாந்தி பெற இறைவனை பிராத்திக்கிறேன். வருத்தங்களுடன்...

சந்திரமுகி 17-04-16 12:16 AM

அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.. ட்ரீமரின் இறுதி த்ரெட் லோக உறுப்பினர்களின் மரணத்தை குறித்தது.. அது இன்னும் மனதை கனமாக்குகிறது.

ramxxx 17-04-16 03:01 AM

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

Thiru Raj 17-04-16 11:25 AM

டிரீமர் அவர்களின் ஆன்மா இறைவனிடத்தில் இளைப்பாற மனமுருக பிரார்த்திக்கிறேன்.

- ராஜ் -

niceguyinindia 17-04-16 11:44 AM

மிகவும் வருத்தமான செய்தி அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

anticitizen 17-04-16 12:02 PM

மிகவும் தாமதமாக கிடைத்த செய்திக்காக வருந்துகிறேன்.. அவரது ஆன்மா சாந்தி அடையவும் அவரைப் பிரிந்து துயரடையும் அன்பர்களுக்குத்துணை புரியவும் இறைவனை வேண்டுகிறேன்

annaisivakumar 17-04-16 12:21 PM

அண்ணாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.

shobana_rv80 17-04-16 01:39 PM

துயரமான செய்தி.. நம் அனைவராலும் அண்ணன் என அன்போடு அழைக்கப்பட்ட ....
தளத்தின் மூத்த உறுப்பினரின் மறைவுச்செய்தி கலங்கவைத்துவிட்டது.....
எல்லாரையும் ஊக்குவித்து பதிவுகள் இடுவதில் அவரின் குணம் மெய்சிலிர்க்க வைக்கும்....
அவரது ஆன்மா சாந்தி அடைய மனமாற வேண்டுகிறேன்

sinna vaaththiyaar 17-04-16 04:21 PM

வருத்தபட வைத்த துயரமான செய்தி அது....

அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்...

tamilplus 18-04-16 10:53 PM

அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ramjiram 18-04-16 11:21 PM

நமது தள உறுப்பினரின் மரணம் என்று முதல் முறையாக அறிகிறேன். ப்ரபலங்களுக்கு அஞ்சலி பதிவு செய்துள்ளேன். நமது உறுப்பினரின் மரணம் மனதிற்கு கஷ்டமாக உள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

Mohan1234fivesix 19-04-16 12:15 AM

மிகவும் வருத்தமான செய்தி. உற்சாகம் பொங்க இருந்த அவரது எழுத்தும் அடுத்தவருக்கு கொடுத்த ஆதரவும்....இனி இல்லை. ஆனாலும் அவருடன் எழுத்தில் பழகிய தருணங்கள் நினைவலையாய் இருக்கும். அனைவருக்கும். ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

__DELETED USER__ 19-04-16 01:48 AM

ஐயா ட்ரீமர் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய அனைத்தும் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

Kattumaram 19-04-16 07:46 AM

எல்லோரும் ஒரு நாள் போய்த்தான் விடுகிறோம்,
ஏனோ இழப்புக்கள்
தாங்கவொனா துயரம்..
ஆன்மா சாந்தி அடையட்டும்.........

vjagan 19-04-16 07:59 AM

அந்தக் கடவுள் ஈவு இரக்கம் அற்ற மிகவும் கொடுமையானவர்தாம் அய்யா அம்மணி !

நல்லவர்களை நமக்கு மிகவும் காலம் தாழ்த்தித்தான் அறிமுகபடுதுகிறார் அய்யா அம்மணி !

அந்த காலம் தாழ்த்தி அறிமுகமானவர்களை மிகவும் வந்த வேகத்தை விட விரைவாக நம்மிடமிருந்து பிரித்து வேடிக்கை பார்த்து மகிழ்கிறார் அய்யா அம்மணி !

அந்தக் கடவுள் ஈவு இரக்கம் அற்ற மிகவும் கொடுமையானவர்தாம் அய்யா அம்மணி !

அந்தப் பொல்லாத உத்தம அய்யா , அந்தப் பொல்லாதக் கடுமையான விமர்சிகர் ,அந்தக் கனவுலக சஞ்சாரியின் ஆத்மா சாந்தி அடைய என் நெஞ்சார்ந்த பிராத்தனைகள் செய்கிறேன் அய்யா அம்மணி !

அவரின் பிரிவால் வாடும் அய்யாவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரின் நெருங்கிய நண்பர்கள அனைவருக்கும் என்னுடைய அனுதாபங்கள் அய்யா அம்மணி !

அவரின் நாமம் வாழ்க அய்யா அம்மணி ! அவரின் புகழ் வாழக் அய்யா அம்மணி !

raja197x 19-04-16 09:15 AM

ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்!!!

sana9 19-04-16 09:31 AM

ஆழ்ந்த அனுதாபங்கள்

mouse1233 19-04-16 04:28 PM

வருந்துகிறேன்

bedroom_salak 19-04-16 07:08 PM

அண்ணனின் மரண செய்தி கேட்டு துயரமுற்று, அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்..

Pijjaimani 20-04-16 12:54 PM

என்னப்பா இப்படி குண்டதூக்கி போடுரிங்க

அனைவரையும் இன்பத்தில் வைத்திருந்தவர் காலமானார்.
அவரது ஆன்மாவும் இன்பப்படவேண்டும் என விரும்புகிறேன்.
எப்படி சில விசயத்தை மாற்றமுடியாதோ அதில்
மரணமும் ஆதிக்கம் செலுத்துகிறது.
நாம் என்ன செய்ய முடியும்.
நாம் சாதாரண மனிதர்கள் தானே.
எனது அஞ்சலியை அன்னாருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

Moderated Message:
ஒரே பொருள் பற்றி ஒரே திரியில் மீண்டும் மீண்டும் கருத்து பதிப்பதை தவிர்க்கவும். உங்களின் இரண்டு பதிவுகளும் இணைக்கப்படுகின்றன.Nallavan1010 நி. உதவியாளர்.

hnysam79 20-04-16 03:15 PM

அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் :( .......

Vaasan 20-04-16 04:26 PM

அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

apdiya 20-04-16 07:15 PM

அதிர்ச்சியான செய்தி. இவரை பற்றி நிறய கேள்வி பட்டிருக்கிறேன். நேரில் பார்க்க முடியாமல் போயிற்று. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

karrthee 20-04-16 08:43 PM

எனது திருமண விடுப்பு முடிந்து இப்பொழுது தான் தளத்திற்கு வந்தேன். வந்தவுடன் நான் கண்ட முதல் செய்தியே என்னை மிகவும் வருத்தமடைய செய்து விட்டது. தளத்தின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் அவர் பல எழுத்தாளர்களை ஊக்குவித்தார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

soosi4002 20-04-16 09:13 PM

நமது தளத்தின் மூத்த உறுப்பினர் நம்முலகம் விட்டு விண்ணுலகம் சென்றுள்ளார் என்ற செய்தியை இன்றுதான் அறிந்தேன். நம் தளத்திற்கும், பங்களிப்பாளர்களுக்கும் பக்கபலமாகவும், வழிகாட்டியாகவும் இருந்து வந்த ட்ரீமர் அவர்களின் மரணசெய்தி அனைவரையும் போல் என்னையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது. அவரை பிரிந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும், நம் தள பங்களிப்பார்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

psycho 20-04-16 11:27 PM

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

ஆதி 21-04-16 08:46 PM

அன்னார் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

Rudran 22-04-16 01:53 AM

தளத்தில் நுழைந்த உடன் அண்ணன் ட்ரீமர் அவர்களின் மறைவுச் செய்தியை பார்க்க நேரிட்டது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.


All times are GMT +5.5. The time now is 01:39 AM.

Powered by Kamalogam members