View Single Post
  #20  
Old 05-12-14, 10:20 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
தலைவரே நீங்கள் ஒரு அற்புதமான மனிதர். தமிழ் காமக்களஞ்சியமான இந்த தளத்தை நீங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்ப்படும் இன்னல்களையும் பொருட்படுத்தாது.மிக சிறப்பாகவும் கட்டுக்கோப்புடனும் நடத்தி வருகிறீர்கள். நீங்களும் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனுபவம் மிக்க நிர்வாகிகளும் எடுக்கும் எல்லா முடிவுகளும் கண்டிப்பாக சிறப்பனவையாகவும் தளத்தின் நலனுக்கு மேலும் மெருகூட்டுபவையாகவும் இருக்கும். சந்தேகமில்லை.

காமக்கதை படைப்பாளிகள் எந்தவகையிலும் தரம் குறைந்தவர்கள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நிதானமாக யோசித்து கதைகள் படைக்க அங்கு வாய்ப்புகள் அதிகம்.
Quote:
Originally Posted by xxxGuy View Post
இதைக் காமக் கதை படைப்பாளிகள் கேட்டா.....ல், பொங்கியெழுந்து........... ஒன்றுமில்லை, உங்களுக்கு சவால் விடும் வகையில் சிறந்த அருமையான கதைகள் படைத்து மூக்கில் விரல் வைக்க வைப்பார்கள்.
மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயமல்லவா இது. வரவேற்கிறேன்.

மேலும் உங்களின்
Quote:
Originally Posted by xxxGuy View Post
ஆனால், நாங்கள் இதை வாசகர் சவால் போட்டியில் வெல்லாதவர்களுக்கு இன்னொரு போட்டியிலும் பங்குபெற ஒரு வாய்ப்பு என்று மட்டுமே எடுத்துக் கொள்கிறோம்.
இந்த கருத்தை ஒப்புக்கொள்கிறேன்.அது நல்லது தான்.
Quote:
Originally Posted by dreamer View Post
தங்களுடைய இப்போதைய நிலையே தொடரட்டும்.
இதை நானும் வழி மொழிகிறேன். இந்த விஷயத்தில் நானும் தலைவரின் பக்கமே.

தளத்தை ஆதரிக்கும் உறுப்பினர் என்றவகையில் என்னுடைய ஒத்துழைப்பையும் ஆதரவையும் தங்களுக்கும் இதர நிர்வாகத்தினருக்கும் மனதார இயன்றவரையில் தர தயாராக இருக்கிறேன் என்பதை சொல்லிகொள்கிறேன். நன்றி.
Reply With Quote