View Single Post
  #29  
Old 22-11-10, 08:56 PM
பீனா பீனா is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2004
Posts: 1,698
My Threads  
சரி, சரி, சரி. உங்கள் வழிக்கே வருகிறேன் வாத்தி. கற்பனை வறட்சியில் தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழ்த் திரையுலகம் என்ன செய்கிறது? முதலில் பாடல்களை 'ரீமிக்ஸ்' என்னும் பெயரில் சற்று 'டெம்ப்போ' கூட்டி... அப்பட்டமான 'காப்பி' அடித்தார்கள். (அதை பாராட்டி முகஸ்துதி செய்யவும் தமிழகத்தில் ஓர் கூட்டம் வாழ்கிறது). பின்னர், ஏற்கனவே 'ஹிட்'டான படங்களை 'ரீமேக்' செய்கிறேன் என்று சொல்லி, புதிய மொந்தையில் கொடுக்கிறார்கள். (அதையும் கண்ணை மூடிக் கொண்டு ரசிக்கிறது ஓர் கூட்டம்).

மாகியின் ஆதங்கம் எனக்கு புரிகிறது. பழைய கதைகளைப் படிக்க ஆட்கள் இல்லையே...! அவை பொக்கிஷம் ஆயிற்றே என்று மனமார வருந்துகிறார். நானும் இத்தகைய பொக்கிஷங்கள் படைத்தவள் என்னும் உரிமையில் ஓர் சிறிய லாஜிக் கேட்கட்டுமா?

ஹரிதாஸ், மணாளணே மங்கையின் பாக்கியம், பானை பிடித்தவள் பாக்கியசாலி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும், குலேபகாவலி, கூண்டுக்கிளி.... இது போன்ற பழைய பொக்கிஷங்களை யாரும் இப்போது பார்ப்பதில்லையே. வேலையத்த வேலையாக உட்கார்ந்து மைனா, வல்லக்கோட்டை, குவார்ட்டர் கட்டிங்.........ஸாரி.... ஸாரி.... "வ" போன்ற இப்போதைய படங்களை மட்டும்தானே பார்க்கிறார்கள் என்று ஆதங்கப்படுவது போன்றதுதான், நம் தளத்தில் பழைய கதைகள் வாசிப்பற்று புழுதிபடிகின்றனவே என்னும் கவலையும் - என்று ஒருசாரர் விவாதிக்கக்கூடும்.

மாகி போலவே எனக்கும் பழைய கதைகள், உயிரினும் மேலாக பிடித்திருக்கிறது. உதாரணமாக, என்னை மிகவும் பாதித்தது உறவு மயக்கம் என்னும் கதை. இது போன்று பல கதைகள் உள்ளன. காதாவின் 'பெரியம்மாவும் பெரியக்காவும்', 'ரம்யமாய் என் ரம்யா', 'பட்டப்பகலில் பரம சுகம்' () என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

ஹைய்யா...... சூப்பரா குழப்பியாச்சு. நான் எந்தக் கட்சின்னே கண்டுபிடிக்க முடியாதே.....!!
Reply With Quote