இந்த சவால் போட்டியில் பங்குகொண்டு வெற்றி பெற்று சவால் ராஜாவாகி வெண்கல வாசல் அனுமதியும் பெற்றிருக்கும் நண்பர் whiteburst அவர்களுக்கு என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்து ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டாலும் வெற்றி பெற்றவருக்கு கடுமையான நெருக்கடி கொடுத்து ஆறுதல் பரிசை பெற்றிருக்கும் நண்பர் vjagan அவர்களுக்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
இருவருக்குமே இந்த வெற்றி ஒரு பொங்கல் பரிசாகவும் அமைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.
அடுத்து சென்ற சவால் போட்டியின் வெற்றி நாயகரான manesh74 இம்முறையும் போட்டியில் பங்களித்து அடுத்த இடத்தை பிடித்திருக்கிறார். சிறப்பான அவரின் பங்களிப்பிற்கும் என் வாழ்த்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டு தளராமல் தொடர்ந்து பங்காளிக்குமாறும் வேண்டிக்கொள்கிறேன்.
வெற்றி தோல்விகளை கணக்கில் கொள்ளாமல் நிர்வாக சவால் போட்டிகளில் பங்களிக்கும் அனைவருமே நிர்வாகத்திற்கு உதவி செய்பவர்களே. அனைவருக்குமே எங்களின் நன்றி கலந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
|