View Single Post
  #8  
Old 26-07-22, 04:42 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,276
iCash Credits: 674,079
My Threads  
Quote:
Originally Posted by ASTK View Post
இதில் பெரும்பாலானவர்கள் அடிக்கடி தளத்திற்கு வருபவர்களாக இருக்கிறார்கள். இதிலேயும் குறிப்பிட்ட சிலர் தொடர்ந்து கதைகளுக்கு பின்னூட்டம் அளித்து வருகிறார்கள்
அப்படி தொடர்ந்து பின்னூட்டம் இடுபவர்கள் மேலே உள்ள லிஸ்டில் யார் என்று அறிய தாருங்களேன், உண்மையிலே ஓட்டுப்போட நினைத்தால் பின்னூட்டம் இடும் நேரத்தில் 3ல் ஒரு பங்கு நொடிகள் கூட ஆகாது ஓட்டுப்போட, ஆனால் போடுவதில்லை.


நீங்கள் உறுப்பினர் மனநிலையில் இருந்து சொல்கிறீர்கள். நாங்கள் நிர்வாகத்தை செம்மையாக நடத்த நினைக்கிறோம். நடந்து முடிந்த ஒரு நிர்வாக சவாலில் வாக்கெடுப்பை நான் பார்க்க முடியும் என்பதால், கவனித்து வந்ததில் ஒரு மூத்த கதாசிரியர் ஒருவர் எழுதிய கதைக்கு ஒருவர் கூட வாக்களிக்கவில்லை என்பதனை கண்டு, அதுவரை வாக்களிக்காத நண்பர் ஒருவரிடம் தனிமடலில் இந்த நிர்வாக சவாலில் இம்மாதிரி ஒரு சிறந்த கதாசிரியர் ஒருவருக்கு ஒரு வாக்கு கூட அளிக்கப்படவில்லை, நீங்கள் சவாலுக்கு வாக்களியுங்கள் என்றேன். அவர் உடனே அவர் தவிர்த்து இன்னொருத்தருக்கு வாக்களித்து விட்டார். அந்த சவாலுக்கு கதை எழுதிய உறுப்பினர் என்ன மனநிலை பெற்றிருப்பார். அவரை விட நான் மிகுந்த மன கஸ்டத்திற்குள்ளானேன், நான் வாக்கெடுப்பை மேற்பார்வையிடுபவன் ஆதலால் எப்போதும் யாருக்கும் முன்னரே ரிசல்ட் பார்க்க நேர்ந்தால் வாக்களிக்க மாட்டேன். அது தார்மீக ரீதியாக தவறு என்பதால். அதனால், வாக்கெடுப்பு ரிசல்ட் பார்க்கும் முன்னரே வாக்களித்து வாக்களிப்பு முறையாக வேலை செய்கிறதா என்று பார்த்து விடுவேன்.

ஒரு தேர்தல் பிரச்சாரத்தில், வேட்பாளர்கள் செய்யும் பிரச்சாரங்களுக்கெல்லாம் கூட்டமாக கூடி அவர்கள் பேச்சை கேட்டு மகிழ்ந்து கை தட்டி, பின்னர் ஓட்டெடுப்பு நாளன்று ஓட்டுப்போடாமல் விடுமுறை நாள் போல வீட்டிற்குள்ளே இருப்பவரால் யாருக்கு என்ன பிரயோசனம்?.

இல்லை வாக்கெடுப்பே வேண்டாம், இம்மாதிரி தண்டனையும் வேண்டாம் என்று சொல்லுங்கள், கதாசிரியர் எல்லோரும் கதை மட்டும் எழுதி செல்லட்டும், மாதந்திர, மற்றும் நிர்வாக சவால் எதுவும் நிர்வாகம் சார்பில் நடத்தப்படாது.

விருப்பப்படுபவர் பின்னூட்டம் இடட்டும், இல்லை என்பவர் படித்து மட்டும் செல்லட்டும், யாரையும் எதுவும் சொல்ல செய்ய மாட்டோம். சேர்ந்தவுடன் எல்லோருக்கும் தங்கவாசல் அனுமதி தந்து விடுவோம், இங்கிருக்கும் கதைகளை எல்லாம் நகல் எடுத்து தனித்தனி வெப்சைட் அல்லது ப்ளாக் ஆரம்பித்து அதில் பகிர்ந்து மகிழட்டும். நாம் வேடிக்கை பார்த்து மகிழ்வோமா?.

ஓட்டு யாருக்கு போடச்சொல்கிறோம், நிர்வாகத்திற்கா, நிர்வாக உறுப்பினர் எழுதிய கதைக்கு மட்டும் ஒட்டுப்போடுங்கள் என்று சொல்கிறோமா?. உங்களில் ஒருவர் எழுதிய கதைக்கு படித்து மகிழ்ந்ததில் சிறந்ததை சுட்டிக்காட்டி கதை எழுதியவர் தரத்தை உயர்த்திக்காட்டி இன்னும் அவரை சிறப்பாக பங்களிக்கவைக்கத்தானே.

கட்டண உறுப்பினர் தளத்திற்கான பொருளாதார தேவைகளுக்கு பங்களிப்பு செய்கிறார்.

ஆரம்ப நிலை உறுப்பினர் தலைவாசல் / தமிழ்வாசல் உறுப்பினர்கள் அடுத்தடுத்த வாசல் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இருப்பதால் பின்னூட்டம் எழுதி கதை எழுதுபவரை ஊக்குவிக்கிறார்கள்

எப்போதோ பதிப்புகள்/கதைகள் எழுதி அனுமதி வாங்கியவர்கள், அந்த அனுமதியை தக்க வைக்க 3 மாதத்திற்கு ஒரு பதிவு, மாதத்திற்கு ஒரே ஒரு ஓட்டு, ஆக மொத்தத்தில் வருடத்திற்கு 36 பதிவுகள் செய்ய மனம் இல்லை என்றால் இவர்கள் எதற்கு?.

இம்மாதிரி செய்யாதவர்களை இனங்கண்டு கீழிறக்கி விட்டால் திரும்ப பங்களிப்பார்கள் இல்லையா, இல்லாவிடால் அவர்கள் எப்போதும் போல அப்படியே இருந்து வருவார்கள். அவர்களால் தளத்திற்கு பலன் ஏதும் இல்லை. அவர்கள் மட்டுமே அடுத்தவர் உழைப்பை சுரண்டி அனுபவித்து பலனடைந்து வருவார்கள்.

சுரண்டலை அனுமதிப்பதில்லை. சோம்பலையும் அனுமதிக்கலாகாது. அது ஒரு புற்று நோய் அப்படியே பரவி பின் ஒருவரை பார்த்து இன்னொருவர் எதற்கு பங்களிக்க வேண்டும் என்று பரவி விடும். பின்னர் கதை பதிப்பவர் ஒவ்வொரு திரியிலும் பின்னூட்ட பிச்சை கேட்டு கடைசி வரி பதிக்க நேரிடும்.



Quote:
Originally Posted by Revathi90 View Post
இப்படி ஒட்டு போடாதவங்க எல்லாரையும் பத்தி விட்டுட்டிங்கன்னா எங்க கதைக்கு பின்னுட்டடமிடற ஒன்னு ரெண்டு பேரும் காணாம போயிடறாங்க, இதனால் எழுத்தாளர்களுக்கு கதை எழுதும் ஆர்வம் குறைந்துவிடாதா ?
மேலே உள்ளவர்களில் எவர் உங்கள் கதைகளுக்கு ரெகுலராக பின்னூட்டம் இட்டு வந்தார்கள் என்று சொல்லுங்கள். தளத்திலே ஆக்டிவாக உள்ள உறுப்பினர்கள் 150 பேர் தான். அவர்களை 200 என மாற்றவே இந்த நடவடிக்கை, உங்கள் கதைக்கு வரும் ஒன்றிரண்டு பின்னூட்டம் இனி நான்கைந்தாக மாறும் அப்போது தெரியும், ஏன் இந்த கசப்பு மருந்து என்று.

இனி அடுத்து வரும் மாதங்களில் பின்னூட்டம் அதிகம் வரும். வாக்கெடுப்பும் இதை விட கூட இருக்கும், ஏனென்றால் நாம் தட்டி உசுப்பி விட்டவர்கள் எல்லோருமே இதற்கு முன் இங்கே பங்களித்தவர்களே. தட்ட மறந்ததால் தூங்கி விட்டார்கள்.

Quote:
Originally Posted by Revathi90 View Post
அதான் தகுதி குறைப்பு செய்கிறீர்களே ஏழு நாள் தடை அவசியமா ?
ஏழு நாள் தடை இல்லாவிட்டால் இவர்கள் தலைவாசலில் ஆளுக்கொரு திரி ஆரம்பித்து ஏன் தகுதி நீக்கம் என்று கேள்வி கேட்பார்கள். ஒருவாரம் வெளியே இருக்கையில் தான் நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

Quote:
Originally Posted by Revathi90 View Post
இந்த ஏழு நாளில் அவர்கள் வேறு ஏதாவது இணையம் பக்கம் சென்று அது பிடித்து போயி நிரந்தரமாக இங்கே வருவதை நிறுத்தும் வாய்ப்பும் இருக்கிறதல்லவா
அப்படி மற்ற தளங்கள் போய் பார்த்து தான் இவர்கள் கெட்டு விட்டார்கள், அந்த தளங்களில் எல்லாம் எப்போது வேண்டுமானலும் ஒருவர் எத்தனை ஐடி வேண்டுமானாலும் தொடங்கலாம். உள் நுழைந்த பின் தளம் முழுதும் வலம் வரலாம். யாரைப்பற்றி எதைப்பற்றி எங்கு வேண்டுமானாலும் எழுதலாம் படிக்கலாம். முழுச்சுதந்திரம் அடைந்தவர்கள். அவர்களை நாம் ஏன் கொடுமைப்படுத்த வேண்டும், சிறையிலிருந்து விடுவித்து விடுவோம். கூட்டை திறந்து விடுவோம், அந்த பறவை தீர்மானிக்கட்டும் எங்கே செல்வதென்று.

நான் உழைக்க மாட்டேன், அடுத்தவர் உழைப்பில் வாழ்வேன் என்பது சரியல்ல.


இம்மாதிரி மாதந்திர கதை போட்டியில் வாக்கெடுப்பு தரவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை என்று இப்போது சொல்லவில்லை, ஏழு எட்டு வருடங்களாகவே சொல்லி வருகிறோம். ஆனால் கடுமையாக நடவடிக்கை எடுக்கவில்லை. சொல்லி சொல்லி ஒய்ந்து போய் சென்ற வருடத்தில் இருந்து தான் மெல்ல மெல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம். இப்போது தளத்திலே சோம்பல் விலகி திரும்ப சுறுசுறுப்பு வரும் போது, சிலர் டெக்னிக்கலாக பல மாதங்களாக வாக்களிப்பு திரி பக்கமே வராமல் ஏமாற்றியுள்ளனர். வாக்கெடுப்பு திரி வந்து வாக்களிக்கவில்லை என்றால் தானே கண்டு பிடிக்கிறீர்கள், நாங்கள் அந்த திரியே பார்ப்பதில்லை என்று அந்த லிங்க் கிளிக் செய்யாமலே சென்று விடுகிறார்கள். இனி அவர்களுக்கு அந்த சிரமம் இருக்காது.
__________________
Reply With Quote