Quote:
Originally Posted by பச்சி
ஒரு பதிப்பை பதிந்து விட்டால் அதில் திருத்தம் செய்யவோ / கூடுதலாக ஏதும் சேர்க்கவோ வேண்டுமெனில்... அந்த பதிப்பின் அடியில் இருக்கும் 'Edit' பட்டனை அழுத்தி, வரும் எடிட்டரில் தேவையான மாற்றங்களை செய்து பின்னர் 'save changes' கொடுத்தால் போதும்.
|
தேவையான மாற்றங்களை செய்து அடியில் உள்ள 'Preview Post' பட்டனை அழுத்தி உங்கள் மாற்றங்கள் நீங்கள் வேண்டியபடி பிழையில்லாமல் வந்திருக்கிறதா என்று பார்த்து தேவையானால் எடிட்டரில் மாற்றி, மீண்டும் ப்ரீவ்யூ செய்து, எப்போது உங்களுக்கு முழு திருப்தி ஏற்படுகிறதோ அப்போது Save Changes பட்டனை அழுத்துங்கள். சில நேரங்களில் இப்படிப் பலமுறை செய்யவேண்டியிருக்கலாம். நாம் எழுதுவது நம் பிள்ளை, அதை சுத்தப்படுத்தி, துடைத்து, ஒப்பனை செய்வது நம் கடன். அப்படிச் செய்தால்தான் மற்றவர்கள் நம் படைப்பைப் பாராட்டுவார்கள்.
இவ்வளவையும் சொல்ல நண்பர் பச்சிக்கு நேரமிருக்காது. எனவே எழுதுவதைப் பிழையின்றி எழுதவேண்டும் எனக்கருதும் நான் இவ்வளவையும் சேர்த்துள்ளேன்.
சரிதானே, பச்சி?