View Single Post
  #7  
Old 11-09-08, 02:29 AM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
மறைந்த அந்த வயலின் மேதைக்கு பணிவான அஞ்சலி.

அவரைப் பற்றி மேலும் சில தகவல்கள்:
அவரது இசைப் பயணம் அவர் பிறந்த சிற்றூரான குண்றக்குடியில் இருக்கும் சண்முகநாதர் ஆலயத்திலிருந்து தொடங்கியது. ஆலயத்தில் உள்ள பூசகர்களுடன் பக்தி இசையை பாட ஆரம்பித்தார். அவரது தாயார் அவரை முறையாக இசை பயிலச் சொன்ன போது அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை.

ஒரு முறை அவரது தந்தையின் ஒரு இசை நிகழ்ச்சிக்கு பக்கவாத்தியம் வாசிக்க வேண்டிய ஒரு வயலின் இசைக் கலைஞர் வர இயலாத நிலை ஏற்பட்டது. அதுகுறித்து அவரது தந்தை வினவியபோது அவர் இறுமாப்புடன் பதில் கூறியதாக் கூறப்படுகிறது. அப்போது அவரது தந்தையார் தன் மகனை ஒரு வயலின் வித்துவானாக்கிக் காட்டுகிறேன் என்று விடுத்த சவால் காரணமாக அவர் வயலின் கற்கும் நிலை ஏற்பட்டது.

அவரது அரங்கேற்றம் காரைக்குடியில் பிரபல இசை வல்லுநர் அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் அவர்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் வாய்ப்பிலிருந்து தொடங்கியது. அதுவும் எதிர்பாராமல் அமைந்த வாய்ப்பே.

மரபு ரீதியான இசையைத் தவிர மெல்லிசை திரையிசை ஆகியவற்றிலும் அவர் கவனம் செலுத்தினார்.

பட்டி தொட்டியிலிருக்கும் பாமரனுக்கும் சாஸ்திரீய இசையை கொண்டு சென்றார்.

தனது 16 ஆவது வயதில் திரையிசை மேதை ஜி இராமநாத ஐயர் அவர்களின் இசைக் குழிவில் இடம் பிடித்தார்.

இப்படி படிப்படியாக அவரது இசைப் பயணம் உயர்ந்தது. பின்னாளில் இசை மூலம் நோய்களுக்கு குணம் காண முடியும் எனும் கோட்பாட்டில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ராக ஆராய்ச்சி மையம் எனும் அமைப்பை நிறுவி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். திருவையாறு தியாகராஜ ஆராதனை குழுவின் செயலராக பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.

வயலினுக்கு பக்கவாத்தியமாக மிருதங்கமே வாசிக்கப்பட்டு வந்த நிலையில், தவில் கலைஞர் வலயப்பட்டி சுப்பிரமணியத்துடன் இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

அவரது இசையைப் போலவே அவரது கோணங்கித்தனமான முகபாவங்களும், மிகப்பெரிய அளவிலான குங்குமப் பொட்டும், பலவண்ணங்களில் அவர் உடுத்தும் மேல்சட்டையும் பிரபலமடைந்தன.

வயலினின் தாயகம் எனக் கூறப்படும் இத்தாலியில் கூட அவருக்கு பெருமளவில் ரசிகர்கள் உண்டு..........

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.
Reply With Quote