View Single Post
  #23  
Old 04-10-08, 04:10 AM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 763
My Threads  
வாழ்த்துகிறேன், நண்பர் சோபனாவை. முதல் சவால் போட்டியே வெற்றியுடன் தொடக்கம். அட்டகாசம்தான். இது அவரின் திறமைக்கும், உழைப்புக்கும் கிடைத்த பரிசு. வெற்றி யாருக்கு சொந்தம் ஆகவேண்டுமே அவருக்கே போய் சேர்ந்து இருப்பது மனதிற்க்கு திருப்தியை கொடுக்கிறது. சோபனாதான் வெற்றி பெறுவார் என்று அனைவருமே எதிர்பார்த்தோம். அதேபோல் நடந்துஇருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. வாழ்த்துக்கள் சோபனா. உங்களின் பங்களிப்பும், உங்களின் சுறுசுறுப்பும் தொடரட்டும் இன்னும் வேகமாக, அதற்க்கான டானிக் தான் இந்த வெற்றியை தாங்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள். வாழ்க சோபனா,

நண்பர் தங்கருக்கு எனது வாழ்த்துக்கள். அடுத்த முறை தாங்கள் கட்டாயமாக வெற்றிகனியை ருசிக்கவேண்டும் என்று ஆசைபடுகிறேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

நண்பர் சக்தி - தாங்களின் விடா முயற்சியை தொடருங்கள். இன்று இல்லை என்றாலும் அடுத்த அடுத்த முறையில் கட்டாயமாக நீங்கள் வெற்றியை ரூசிப்பீர்கள். தாங்களுக்கு சென்ற முறையை விட இந்த முறை ஆதரவு கூடி இருப்பதை தாங்கள் உணரலாம்.

எனது தொடர்ச்சியை படித்து, எனக்கு வாக்களித்து, ஊக்குவித்த அந்த 5 முகம் தெரியாத உள்ளங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை கிடைக்காமல், எனது அன்பு கண்ணீரை பரிசாக நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றி மட்டுமே வாழ்க்கை என்றால், மனிதன் தலைவெடித்துதான் சாகவேண்டும். இதுபோன்ற சின்ன சின்ன தோல்விகள் தேவைதான் என்பதை எனக்கு சுட்டிகாட்டிய, அன்பு நெஞ்சங்களை, இந்த நேரத்தில் அன்புடன் நினைவு கூர்ந்து, எனது நன்றியை அவர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்த சவாலுக்காக காத்து இருக்கிறேன்.


அன்புடன்
ஹபிப்