தமிழ் 99 அப்டிங்குறது தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு விசைபலகை வடிவமைப்பு. இதுல என்ன சிறப்பம்சம் என்னனா
- அனைத்து இயங்கு தளங்களிலும் எந்த மென்பொருளிலும் ஒரே விசைப்பலகை அமைப்பு.
- செல்லிடப்பேசியோ, கணிணியோ ஒரே வடிவம் தான். அ குறியீடு எல்லா கருவிகளிலும் ஒரு இடத்தில் இருக்கும்.
- இதுனால கணிணியில் விசைப்பலகைய பார்க்காமல் தட்டுவதற்கு எளிதாக பழகலாம்.
- அரசு பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு வடிவமைத்தது.
- ஒற்றுப்பிழைகள் வரும் வாய்ப்பு குறைவு.
- குறைவான தட்டல் மூலம் சொற்கள் உருவாக்கம்.
இதற்கான பயிற்சி தளம் :
Code:
https://wk.w3tamil.com/
இந்த முறையில் எப்படி உங்களோட தட்டும் அளவா குறைவா வச்சிக்கிட்டு அதே சொற்கள எழுதமுடியும் அப்படிங்குறத எடுத்துக்காட்டுகளோட விளக்கிருக்காங்க. இதப்பாத்தீங்கனா அப்புறம் தமிழ் 99 எவ்வளவு சிறப்பான விசைப்பலகை அமைப்புனு புரியும்.
Code:
https://blog.ravidreams.net/tamil99/