View Single Post
  #2  
Old 10-11-18, 09:45 AM
kauveri's Avatar
kauveri kauveri is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 14 Jan 2018
Posts: 1,470
iCash Credits: 55,767
My Threads  
நண்பரே நெருங்கிய உறவுகள் பலர் புற்றுநோயால் போராடி வெற்றிப் பெற்றதையும் பெறாமல் மாண்டுப்போனதையும் நெருக்கமாக பார்த்தவன் என்பதால் என்னுடைய சிறு அபிப்பராயம்.
மனம் தளராதீர்கள். போராடுங்கள். யுத்தம் செய்யுங்கள்.. துணைக்கு யாரையும் நம்பாதீர்கள். உங்களுக்கு நீங்களே நம்பிக்கைகள். இது துச்சமாக கடந்துப் போகும் தடை என்று நினையுங்கள். இரண்டாவதாக, வெறுத்துப் போய் உங்களின் அன்றாட வாழ்கை முறையை மாற்றாதீர்கள். உதறிவிடாதீர்கள். உங்களின் வாழ்கையின் சில பகுதிகளை இந்த தளத்திற்காக செலவு செய்துள்ளீர்கள்.உங்கள் பங்களிப்புகளை படிக்கவே பல நாட்கள் தேவைப்படுகிறது. அது உங்களுக்கு ஏதோ ஒரு சந்தோஷத்தை தந்துள்ளது. ஆகையால் இத்தருணத்தில் காமலோகத்தை விட்டுப் போகாதீர்கள். கடைசி தெம்பு இருக்கும் வரை பங்களிப்பை அளியுங்கள். மற்ற அன்றாட வாழ்கை செயல்களை முடிந்தவரை தொடருங்கள். புற்று நோய உங்கள் வாழ்கைமுறையை மாற்ற அனுமதிக்காதீர்கள். மேலும், நல்ல மருத்துவர்களிடம் ஆலோசனைப் பெறுங்கள். சிகிச்சை பலன் தருமா, செலவுகள் எவ்வளவு, சிகிச்சையின் பின்விளைவுகள். சிகிச்சையளிக்கவில்லையென்றால் என்னவாகும் அளித்தால் என்னவாகும்.... என பலவித கேள்விகளுக்கு விடைத் தெரிந்து சிகிச்சையை தொடருங்கள்.
இந்த புற்று நோயை வென்று, மீண்டு வருவீர்கள் என வாழ்த்துகிறேன். மனம் தளராதீர்கள். நன்றி நண்பரே.
Reply With Quote