View Single Post
  #13  
Old 27-07-22, 05:09 AM
பிரசாந்த்'s Avatar
பிரசாந்த் பிரசாந்த் is offline
Gold Member (i)
 
Join Date: 08 Sep 2010
Posts: 2,210
iCash Credits: 48,173
My Threads  
வெற்றிப்பதங்கங்களை வென்ற KADAMBANC, naughty2hotty, pistha ஆகியோருக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். கடின உழைப்புக்கும், அழகிய கற்பனைக்கும் எப்போதும் வாசகர்களின் ஆதரவு உண்டு என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. கதைகளை அளித்து போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். கூடவே பின்னூட்டமளித்து ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு மாதமும் வாக்களிப்பை மறந்தவர்களின் எண்ணிக்கை கூடுவது கவலை தருவதாகவே உள்ளது.

வாக்களிக்க மறந்தவர்களுக்கு தண்டனையாக தலைவாசலுக்கு அனுப்புவதற்குப் பதிலாக அவர்களுக்கு அடுத்த மாதந்திரப் போட்டியில் அனைத்துக் கதைகளுக்கும் ஒன்று விடாமல் பின்னூட்டம் எழுதுவதையும், வாக்களிப்பதையும் தண்டனையாக தரலாம். அந்த வாய்ப்பையும் தவறவிட்டால் அவர்களை இப்போது செய்வது போல் தலைவாசலுக்கு அனுப்பலாம். இது ஒரு வின்-வின் தீர்வு. கதாசிரியர்களுக்கு வாக்கும், ஊக்கமும் கிடைக்கும், உறுப்பினருக்கு பதிவுகளும் கிடைக்கும், நிர்வாகத்தின் தலைவலியும் நீங்கும், அவர்களின் நேரம் தளத்தை மேம்படுத்தும் வேறு காரியங்களுக்கு பயன்படும்.
Reply With Quote