View Single Post
  #2  
Old 22-07-16, 06:38 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
நம் நெஞ்சங்களில் நீங்காத இடம்பெற்று 100 நாட்களுக்கு முன் நம்மை எல்லாம் மீளா துயரில் ஆழ்த்திவிட்டு இப்பூவுலகை விட்டு பொன்னுலகம் மேவிய அருமை அண்ணன் ட்ரீமர் அவர்களின் நினைவுகளாக அவருடன் கொண்ட அனுபவங்களை திரியாக வெளியிட்டுள்ள அருமை நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அண்ணன் ட்ரீமர் அவர்களை நானும் நேரில் சந்தித்திருக்கிறேன். இதோ அவரை பற்றிய என் நினைவலைகள்.

காமலோகத்தில் நான் இணைந்தது 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம். 17/10/2011 அன்று 'விமலாவின் நட்பு' என்ற என் முதல் கதையை படைத்தேன். கதையை பதித்த ஒரு மணி நேரத்திற்குள் அண்ணன் ட்ரீமர் அவர்களிடமிருந்து எனக்கு வந்த பாராட்டு இது.
Quote:
Originally Posted by dreamer View Post
முதற்கதை ஆயினும் வெகு நன்றாக இருக்கிறது. உங்கள் இலக்கிய அறிவு பாராட்டுக்குரியது.
அப்பொழுது எனக்கு இவரைப்பற்றி அதிகம் தெரியாது. அவரை பற்றி தெரிந்ததும் வியந்தேன். அவரது வயோதிக நிலை பற்றி இந்த திரியின் மூலம் அறிந்துகொண்டேன். காமலோக நண்பர்களின் முதன் முதல் நேரடி சந்திப்பு நிகழ்ச்சியில் அவரை நேரில் காணும் பாக்கியம் கிட்டியது அவரது அறைக்கும் சென்று அவரை சந்தித்திருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியான நினைவுகள். அவரது இலக்கிய அறிவை பறை சற்றும் திரிகள் இவை.

01 பாட்டுக்கு பாட்டு
02 காணாததை கண்டிட ?
03 வேசையா நான் சொல்லுங்கள் !
04 தாரமா? தாசியா?
05 வேசி தந்த மனைவி
06 இந்த வெண்பாவை முடியுங்களேன்


இந்த திரிகளுள் ஆறாவதாக சொல்லப்பட்டதில் எனது பங்களிப்பும் அதற்கு அவரின் சன்மானமும் என் மனதில் நீங்காத நினைவலைகளாக உள்ளன. 10/03/2015 அன்று அவர் எனக்கு தந்துள்ள மிக அருமையான பிறந்தநாள் பரிசு ஒரு அருமையான வாழ்த்து திரைப்பட பாடல். இதை அவர் மிகவும் முயன்று தட்டச்சு செய்து என் பார்வையாளர் தகவலாக பதித்துள்ளதை என்னால் மறக்க இயலாது. என்னை மிகவும் நெகிழச்செய்தது. அவருக்கு என் நினைவாஞ்சலியாக அவரது ப்ரோபைலில் நான் பதித்த கவிதையை இங்கு மீண்டும் பதிக்கிறேன்.

மண்ணில் நீர் வாழ்ந்த காலை எம்மை மகிழ்வித்துவிட்டு
விண்ணில் எளிதாய் மறைந்துவிட்டீர் இன்று மனதில் இதை
எண்ணில் சோகத்தில் விம்முது நெஞ்சம் ஐயா! எங்கள்
கண்ணில் நீர் வழிய மனத்தினில் நீர் (நீங்கள்) வாழுகின்றீர் எந்நாளும்
Reply With Quote