View Single Post
  #15  
Old 17-11-13, 08:43 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
சச்சினுக்கு வாழ்த்து திரி ஆரம்பிக்க நானும் நேரம் பார்த்து கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு நேரம் கிடைக்கவில்லை. மச்சான் சரியான நேரத்தில் வாழ்த்து திரி ஆரம்பித்தமைக்கு மச்சானுக்கு நன்றி.

சச்சினின் சாதனையின் பின்னால் பல வித விமர்சனங்கள் இருந்தாலும் அதனையெல்லாம் தனது முன்னேற்ற படியாக்கி உலக சாதனைகள் பலவும் தன்னில் கொண்டவர் சச்சின். கிரிக்கெட் போட்டியில் ஒரு சதம் அடித்து விட்டாலே காலை கீழே வைக்காமல் பல நடிகைகளின் பின்னாலே சுற்றிய பல விளையாட்டு வீரர்கள் சில கிரிக்கெட் வீரர்கள் தண்ணீர் குமிழி போல் வந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள். ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் மேல் உள்ள ஈடுபாடு காரணம்மாய் கிரிக்கெட்டை தவிர வேறு எந்த சமாச்சாரங்களிலும் தலையை நுழைக்காதவர் சச்சின். கழிந்த 24 வருடங்களில் இவர் மேல் எந்த கிசு கிசுவும் வந்தது கிடையாது என்பதும் ஒரு மகத்தான சாதனையாகும்.
Quote:
Originally Posted by kamaleton View Post
(ஆமா... அந்த போட்டோவுல எல்லோரும் சோகமாயிருக்க நீங்கள் மட்டும் சிரிக்கிரீங்களே.... ஏன் மச்சான்...ரொம்ப நாள் கனவோ? ஹிஹி சும்மா கொளுத்திப்போடுவோம்...)
லால்சேட்டா நம்ம தோனி மச்சான் மட்டும் அல்ல. நான் கூடத்தான் சச்சின் எப்போ இடத்தை காலி பண்ணுவார் என எதிர்பார்த்து கொன்டிருந்தேன். ஆனாலும் 24 வருட ஆட்டம் முடிவுக்கு வரும் போது என் மனதும் ஏனோ கலங்கி விட்டது.
Quote:
Originally Posted by kamaleton View Post
அவரின் அடுத்தடுத்த (அரசியல் உட்பட) முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
ஊழலை ஒழிக்க ஒரு புது கட்சியை தொடங்கினால் சச்சின் பின்னால் அணி வகுக்க நான் ரெடி. ஆனா ஊழலின் அஸ்திவார கட்சிகளுடன் இவர் சேர்ந்தால் சச்சினின் பெயருக்குத்தான் களங்கம் ஏற்படும். இத்தனை நாள் சம்பாத்தித்த பெயரை சச்சின் காவு கொடுக்க மாட்டார் என நினைக்கிரேன். ஆனால் இவருக்கு கிடைக்கும் பல டைமிங் விருதுகளை பார்க்கும் போது சச்சினின் தூண்டிலில் சிக்கிய மீனாகி விடுவார் போலிருக்கிறது. காலம் விரைவில் பதில் சொல்லும்.
Reply With Quote