View Single Post
  #1  
Old 14-02-22, 11:00 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,836
My Threads  
இந்த ஆண்டு 2022 புது உறுப்பினர் சேர்க்கை முடிந்தது

இந்த ஆண்டு 2022 புது உறுப்பினர் சேர்க்கை முடிந்தது


இந்த ஆண்டு 2022 புது உறுப்பினர் சேர்க்கை, ஜனவரி 14ல் இருந்து பெப்ரவரி 14 வரை (இந்தியநேரப்படி) நடைபெறும். என்று முன்னரே அறிவித்து இருந்தோம்.

இந்த ஆண்டு 2022 புது உறுப்பினர் சேர்க்கை ஆரம்பம்
http://kamalogam.com/new/showthread.php?t=76203


இந்த தளத்திலே புது உறுப்பினராக (கட்டணமில்லாத பங்களிப்பு முறையில்) சேர விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்கள்.

இன்றுடன் அந்த வாய்ப்பு முடிவடைந்தது.


1) புது உறுப்பினராக சேர்ந்து ஆனால் நுழைவு தேர்வு கேள்வி பதில் அனுப்பாதவர்களுக்கு

சேர்ந்த 2 நாட்களுக்குள் பதில் அனுப்ப கால அவகாசம் தரப்படுகிறது, அதற்கு பின் வரும் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இன்னும் 2 நாட்களுக்குப்பின் (16-02-22) வரும் எந்த பதில்களும், எந்த காரணம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளப்படாது.

17-02-22 க்கு பின், இதுவரை சேர்ந்து நுழைவு தேர்வு கேள்விக்கான பதில் அனுப்பாதவர்கள் அனைவர் கணக்கும் முடக்கப்படும்.


2)புது உறுப்பினராக முறையாக கேள்வி பதில் கொடுத்து சேர்ந்தவர்களுக்கு

இங்கே பங்களிப்பு முறையில் சேர்வதாக சொல்லி, பங்களிக்காமலே இருந்தால் கணக்கு முடக்கப்படலாம், எனவே இன்னும் 13 நாட்களுக்குள் தலைவாசலில் இருக்கும் அனைவரும் குறைந்தபட்ச பதிப்புகள் 10 பதிப்புகளாவது செய்து விட வேண்டும். 28ந்தேதிக்கு பின் தலைவாசலில் 10 பதிவுகள் செய்யாதவர் கணக்கு அனைத்தும் இயங்காநிலைக்கு சென்று விடும்


3)புது உறுப்பினராக சேர்ந்து ஒன்றிரண்டு பதிவுகள் செய்து வந்தவர்கள் இன்னும் 30 தினங்களுக்குள் தினம் ஒரு பதிவு இனியாவது செய்து தமிழ்வாசலுக்கு சென்று விட வேண்டும். அடுத்த மாதம் மார்ச் 14க்கு பின் தலைவாசலில் எந்த உறுப்பினரும் இருக்க கூடாது என்றே நினைக்கிறோம். மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்கு போடாதவர்களுக்கு இயங்கா நிலைக்கு கணக்கு சென்றால் கூட இனி தமிழ்வாசலில் இருந்தே அனுமதி தர இருக்கிறோம். அப்படி மார்ச் 14ந்தேதிக்கு பின் தலைவாசலிலே தங்கியிருக்கும் உறுப்பினர்கள் கணக்கு இயங்கா நிலை செய்யப்படும்.


4)தமிழ்வாசலில் உறுப்பினர் ஒருவர் எவ்வளவு காலம் வேண்டுமானலும் இளைப்பறலாம். ஆனால் வருடத்திற்கு குறைந்தது 36 பதிவுகள் தர வேண்டும். காமக்கதை வாசல் அனுமதி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் கூடுதல் நிபந்தனையாக மாதம் ஒருமுறை மாதந்திர சிறந்த கதை போட்டிக்கு வாக்களித்து விட வேண்டும். தளத்திற்கு அந்த வாக்கெடுப்பு கால கட்டத்தில் வரவில்லை என்றால் விதிவிலக்கு உண்டு, தளத்திற்கு வந்து கதைகள் படித்து, வாக்களிப்பு திரியை பார்த்து பின் வாக்களிக்கவில்லை என்றால் அவர் கணக்கு இயங்கா நிலை செய்யப்படும். தமிழ்வாசல் உறுப்பினர்களுக்கு ஏதும் வாக்களிப்பு பிரச்சினை இல்லை, ஏனென்றால் அவர்கள் விருப்பப்பட்டாலும் வாக்களிக்க அனுமதி இல்லை.


5) சேரும் போதே இரண்டு மூன்று கணக்கு துவங்கியவர்கள் அனைவரும், தனிமடலில் அல்லது இமெயிலில் தெரிவித்து ஒரே ஒரு கணக்கை காப்பாற்றி கொள்ள இன்னும் 7 நாட்கள் அவகாசம் தரப்படுகிறது. 21-02-22க்கு பின் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கு வைத்திருக்கும் நபர்களின் அனைத்து கணக்குகளும் எந்த முன்னறிவிப்பும் இன்றி முடக்கப்ப்டும். இது அம்மாதிரி கணக்கு வைத்திருப்பவர்களை கண்டறிய போட்டு வாங்கும் வழிமுறையல்ல, எங்கள் மென்பொருள் தேடி தந்திருக்கும் பட்டியல் படி 42 கணக்குகள் இம்மாதிரி உள்ளது. அதில் சிலர் 2 கணக்குகளுக்கு மேல் துவங்கியுள்ளனர். எப்படியிருந்தாலும் (முன்னாள் உறுப்பினரை நிர்வாகமே திரும்ப புது உறுப்பினராக வரச்சொல்லியிருந்தாலும்), தகவல் தனிமடலில் தந்து கணக்கை காப்பாற்றி கொள்ளுங்கள். ஏனென்றால் இரட்டை கணக்கு இங்கே எப்போதும் கதைகளை திருடுபவர்களாலே அதிகம் கையாளப்பட்டு வருகிறது என்பதாலே இந்த கறார் நடவடிக்கை.




கட்டண உறுப்பினர் அனுமதி திரும்ப அனுமதிக்கப்படுகிறது, புதுப்பிக்க விரும்புவர் தளத்து இமெயிலுக்கு (காமலோகம்@ஜிமெயில்.காம், ஆங்கிலத்தில்) தகவல் தந்து பதில் பெற்ற பின் புதுப்பித்துக் கொள்ளுங்கள். புதிதாக சேர விரும்புவரும் அம்மாதிரியே செய்யுங்கள்.

3மாத சந்தா இப்போது இல்லை, 6 மாத சந்தா மற்றும் 12 மாத சந்தா மட்டுமே நடைமுறையில் உள்ளது. கட்டணம்/பணம் செலுத்தும் விவரங்கள் பற்றி இமெயில் கொடுத்து கேட்டுக்கொள்ளுங்கள்.

புது உறுப்பினர்களை வரவேற்று, அவர்களுக்கு பதில்கள் சொல்லி உற்சாகப்படுத்திய தளத்து சொந்தங்களுக்கு நிர்வாக குழு சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

புது உறுப்பினர்களையும் மனமுவந்து வரவேற்கிறோம். விதிமுறைகளை பின்பற்றி இன்புற்று இருங்கள்.



இந்த அறிவிப்பில் ஏதும் திருத்தம்/சேர்க்க வேண்டியிருந்தால் பின்னர் புதுப்பிக்ககூடும்.
__________________
Reply With Quote