View Single Post
  #3  
Old 05-05-11, 07:35 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
நண்பர் அசோவுக்கு நன்றி..!
எனது கண்ணோடத்துக்குள் வரும் எதையுமே பார்வையிடுவது வழக்கம்.. சிலவற்றை மேல்வாரியாக.. சிலவற்றை .... உன்னிப்பாக.. உடனே ரியாக்ஷன் செய்வதை தள்ளிப் போடுவதும் வழக்கம் ஆகி விட்டது.

ஏணிப்படி.. ஏறக் குறைய எனது கணிப்பு சரியானதே என்பதை கன்ஃபர்ம் பண்ணியிருப்பதற்கு மீண்டும் நன்றி. ஆலோசகர்கள்.. (அட்வைசர்ஸ்)... பொதுவாக பின்னணியில் இருந்தே செயல்படுவது வழக்கம். அன்றாட செயல்பாடுகளில் (ஆப்பரேஷன்ஸ்) இல் ஈடுபடுவது நார்மலாக இல்லை. அதைத் தவறு என்று சொல்ல முடியாது.

ஆனால் நான் இந்தத் திரி தொடங்கக் "காரணம்' அவ்வப்போது தென்படும் 'முரண்பாடுகள்'... முற்றிலும் தவிர்க்க முடியும் என்று நான் கூறவில்லை.. குறைக்கலாம் அல்லவா??

நிர்வாகக் குழுவுக்குள்.. விதிமுறைகளின் அர்த்தம் கற்பித்ததில் (interpretation of rules), விதிமுறைகளை அமல்படுத்துவதில் (Adhoc implementation of rules) .. பல முரண்பாடுகள் தோன்றுவது இயற்கை.. குறைப்பதே நோக்கமாக இருக்க வேண்டும்.

வேண்டுமானால் சுட்டிகளுடன் உதாரணத்துடன் விரிவாகச் சொல்லத் தயார்..

சீருடை.. எந்த அளவுக்கு புரியப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. நான் ஒரு டாக்டர் என்று வைத்துக் கொள்வோம்.. ஒரு மார்க்கெட் அல்லது சாலையில் கார் ஓட்டும்போது நான் ஒரு தனி மனிதன்.. ஆனால் ஒரு ஆஸ்பத்திரிக்குள் கோட் அண்ட் ஸ்தெதஸ்கோப் போட்டு உள்ளே நுழையும்போது வேறு ஒரு அவதாரம்.. பொறுப்புக்கள் அதிகம்..!!!

ஒரு சின்ன உதாரணம்.. எனது ப்ரொஃபைலில் .. சில எச்சரிக்கைப் புள்ளிகள் உள்ளன.. அதில் ஒன்று "புதிய அங்கத்தினரை தவறாக (!) வழி நடத்தியது" என்று ஒரு திரியில்...! அந்தத் திரியில் நான் 'கோட்' செய்து நிர்வாகத்தின் சொல் வாக்கையே நான் கூறினேன் என்று வலியுறுத்தியிருந்தேன்... அன்று கிடைத்த பதில் ..ஒரு நிர்வாக நண்பர்.. நான் தனி அங்கத்தினர் என்ற ரோல்-இல் சொன்னேன்.. நியாயமான பதில்.. இதைத்தான் 'சீருடை' என்று கூறினேன்...

பல ரோல்களில் வரும் நண்பர்கள்... நிர்வாக ரோல்-இல் வரும்போது "மேபா-1" அல்லது 'ககா-3" அல்லது "நிஉ-2" என்று log-in செய்து செயல்பட்டால் இந்த முரண்பாடு வராது அல்லவா??
Reply With Quote