View Single Post
  #4  
Old 31-03-12, 09:57 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
தம்பி ராஜேஷுக்கு என் வாழ்த்துகள். ஒரு மச்சினிச்சி என்ன, ஒரு டஜன் மச்சினிச்சிகளை அணிவகுத்து நிறுத்தி, இறுதியில் இரண்டு சிறந்த கருத்துகளையும் கூறிவிட்டாரே. பதவிப்போட்டியில் கணவன் வெல்லவேண்டும் என்று விரும்பும் மனைவியர் அவன் தொழில் நிமித்தம் செய்யவேண்டிய சில 'சர்வீஸ்'களுக்கு நீக்குபோக்காக விடவேண்டும் என்று மனைவிகளுக்கும், முன்னேற்றத்துக்காக கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் பறக்கும் பட்டத்தின் நூல் போல மனைவி குழந்தையைவிட்டு அறுந்து தறிகெட்டப் போகக்கூடாது என்று கணவர்களுக்கும் படிப்பினை தருகிறார். ('கருத்து கந்தசாமி' என்று சும்மாவா சொன்னார்கள்?)

இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை இணையாகப் பெறும் தம்பிகள் அநபாயன் & ஹெர்மிக்கும் எனது வாழ்த்துகள்.

படைப்பாளிகள் அனைவருக்கும் நன்றி.

போட்டியை நடத்த தன் மூலக்கதையையே தந்துதவிய தளத்தலைவர் முக்குறியோனுக்கும் சிறப்பாக நடத்திய கண்காணிப்பாளர் பச்சி அவர்களுக்கும் நன்றி.

தலைவரின் தனிப்பரிசு யாருக்காவது உண்டா, இல்லை இதில் எதுவும் என் எண்ணம்போல் இல்லை என்று அவரே ஒரு பகுதியை எழுதுவாரா என அறிய ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.
Reply With Quote