View Single Post
  #33  
Old 18-03-09, 02:53 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Quote:
Originally Posted by asho View Post
சரி இதோ புன்முறுவலுடன் உங்களுக்கு ஒரு சுட்டிகாட்டல் உங்கள் யூசர் புரபைலில் இருக்கிறது. சென்று பாருங்கள்..
புன்னகை எப்போதும் புத்துணர்வைத் தருகின்றது..
ஒரு தவறு (!!?) சீர் செய்யப் பட்டுள்ளது.
அடுதது தவறா (???) என்ற எண்ணம் மேலோங்கி நிற்கவே செய்கிறது

எப்படியானாலும் தவறு-சரி பற்றி சில ஆலோசனைகள்.....

தவறு-சரி என்பவை கறுப்பு-வெள்ளை அல்லது 1-0 போல ஒரு சின்ன இழையில் பிரிக்க முடியாது.. கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையே ஆயிரக்கணக்கான grey shades உள்ளன.. கறுப்பு வெளிச்சம் இல்லாத நிலை. வெள்ளை என்பது பல வண்ணங்களின் கலவை..

இதுபோலவே தவறுக்கும் சரிக்கும் இடையே சில விஷயங்களில் நூல் இழை வித்தியாசம் இருக்கலாம், சில விஷயங்களில் மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையே உள்ள தூரம் கூட இருக்கலாம்..

சில தவறுகளை சரி யாக பார்க்க முடியும்.. சில சரிகளைக் கூட தவறு என்று நாமே வரையருக்கக்கூடும்.. இதெல்லாம் பார்ப்பவர் கண்ணோட்டம், மன நிலை, விஷயத்தின் சீரியஸ்னஸ் என்று பலவற்றை பொருத்தது.

நான் செய்யும் தவறு எனக்குச் சரியாகப் படலாம். மற்றவர் சரியாகச் செய்தாலும் என் மனம் 'தவறு' என்று அறைகூவக்கூடும்.. இதெல்லாம் இயற்கை. அன்றாட வாழ்க்கையில் தினம் நாம் சந்திக்கும் பல நிகழ்வுகளிலும் இந்த முரண்பாடுகளை நாம் அனுபவிக்கவே செய்வோம்.

பொழுது போக்கிலாவது சற்று மூச்சை ஆழமாக அனுபவித்து சுவாசித்து புன்னகையுடன் 'எல்லாம் சரி' .. ஐ அம் ஓகே .. யு ஆர் ஓகே .. லெவல்-இல் லயித்து இன்பம் காணுவோமே....
Reply With Quote