ப்ரியமுடன் சங்கவி
சில ஆண்டுகளுக்கு முன் மெம்பர் ஆகி ஒரு வருடத்தில் ஒரு பதிப்பு கூட செய்யாமல் பதவி இழந்தேன்.
பின் பெய்ட் மெம்பர் ஆகியும் எழுதவில்லைசில எழுத்துகளை மாற்றி அமைத்ததில் தோன்றியது sankavi not sangavi,
எனக்கு எழுதும் எண்ணம் இல்லாததால் யூசர் நேம் பற்றி சிந்திக்காமல் பெண் பெயரை செலக்ட் செய்ய வேண்டியதாயிற்று,வேறு சில குழுக்களில் உறுப்பினராக உள்ளேன்,அங்கே யூசர் நேம் பற்றி எந்த கருத்தும் இல்லை.
பின் தோழமையான மாடரேட்டர் மற்றும் நல்ல,கண்ணியமான* பதிப்புகளை பார்த்தபின் எழுதலாம் என்று நினைத்து ஒரு 10 பதிவுகளை
செய்தேன்,என் பதிவுகளை காண ஒவ்வொரு முறையும் பேரை தேடி படிக்க வேண்டியதாயிற்று.
அதனால் ஒரு அவதார் போடலாம் என்று ஏதேச்சையாக மை பிக்ச்சரில் என் அவதாரின் ஃபோட்டோவை பார்த்தேன்.
பெண் பெயர்தான் முடிவு செய்துவிட்டீர்கள் சரின்னு ஒரு பெண் அவதாரை சூஸ் செய்தேன்.சேலை கட்டி,பொட்டு வைத்து,நடு வகிடு எடுத்து,மல்லிகை பூ மாலை வைத்து அசல் இந்திய பெண்ணாக இருந்தாள்,இது போல் ஒரு பெண்ணை பார்க்க வேண்டுமென்றால் 1980 க்கு போக வேண்டும்.அதனால் இவளை தேர்ந்தெடுத்தேன்.
என்னை போன்ற கதை எழுதாதவர்களுக்கும் இது ஒரு அறிமுகம் போல் உதவும்.இதற்காக ஸ்பெசல் தேங்ஸ் டூ வரிபுலி
.
Last edited by sankavi; 03-08-07 at 10:38 PM.
|