View Single Post
  #17  
Old 11-05-05, 09:33 PM
catwalk catwalk is offline
User inactive for long time
 
Join Date: 18 Mar 2002
Location: Hyderabad
Posts: 3
My Threads  
பப்பி,
எனக்கு unicodeல் போஸ்ட் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. நமது unicode converterஐத்தான் உபயோகிக்கிறேன். எனது போஸ்ட்டை உங்களால் சரியாக பார்க்க முடிவதால் இது நன்கு வேலை செய்கிறது என்று நினைக்கிறேன்.

எனது பிரச்சினை என்னவென்றால், unicodeஇல் உள்ள நமது பக்கங்கள் எனது கணணியில் தெளிவாக இல்லை. உதாரணமாக, உங்கள் போஸ்ட் எனது மானிட்டரில் எப்படி தெரிகிறது என்று கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்க்கலாம். எழுத்துக்களில் சில கொக்கிகளும் புள்ளிகளும் இடம் மாறி வருகின்றன. usp10.dllஐ மாற்றிய பின்னும் இப்பிரச்சினை போகவில்லை. win98ல் வேறு ஏதும் செய்ய வேண்டுமா என்று தெரியவில்லை.

என் கணணியில் பல பழைய DOS mode மென்பொருட்கள் உபயோகிப்பதால் உடனடியாக XPக்கு மாற்றம் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேன். XP/win98 dual boot போட்டு பார்க்கலாமா என்று யோசனை செய்துகொண்டிருக்கிறேன்.

தற்சமயம் unicode பதிப்புக்களை [http://www.suratha.com/uni2bam.htm]ல் உள்ள 'unicode to bamini converter'ல் paste செய்து படிக்கிறேன்.

Reply With Quote