View Single Post
  #11  
Old 04-09-12, 04:17 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
Quote:
Originally Posted by KANNAN60 View Post
ஆனால், ’உண்மை வாழ்க்கையில் நடப்பதை அப்படியே கதைகளில் எழுதினால் இயல்பாக இருக்குமே’ என்ற நோக்கத்தில் அவ்வாறு ஆங்கிலக் கலப்பில் எழுத நேர்கிறது. இல்லையென்றால், படிப்பவர்களிடம் இருந்து நம் கதை அந்நியப்பட்டுவிடுமோ என்ற சிறு அச்சமும் (அது தேவையற்ற அச்சமாக இருக்கலாம்) அவ்வப்போது எழுந்து தூய தமிழ்நடையிலிருந்து இயல்பு நடைக்குத் தாவ நேர்கிறது.
இந்த உண்மை வாழ்வின் நடைமுறையை தான் மாற்றவேண்டும் என்பது நண்பரின் ஆதங்கம்.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு
முடியாது என்பது எதுவுமில்லை

நாம் அந்நிய மொழியை ஏற்கிறோம் என்றால், நம் மொழியை பற்றி நம்மவர்களே அறியாததால் வந்த விளைவே.
இன்னமும் மேலே அந்நிய மொழி மீதான மோகம். நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளும் மனப்போக்கு.

இதில் வளைந்து கொடுப்பதும் தாழ்ந்துகொடுப்பதும் பெரிய விசயமே இல்லை. இன்று இந்தியா பூராவும் உள்ள மொழிகளில் இந்த நிலமை தான்.

உலகில் ஆங்கிலத்தை அதிகமாக ஏற்றுக்கொண்ட நாடுகள் எத்தனை எனப்பார்த்தால்,

ஓர் குட்டியோண்டு நாடு சிங்கப்பூரும்
ஓரு பெரிய நாடு இந்தியாவும் தான்.

மற்ற ஆசிய நாடுகளானாலும் சரி, ஐரோப்பா, தென் அமெரிக்க நாடுகளாக இருந்தாலும் சரி எங்குமே அவரவர் மொழிகளுக்கே மிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதுவும் ஆங்கில கலப்பு இல்லாமல். மிகவும் வளர்ந்த நாடுகளான ஜப்பான் சீனாவில் எல்லாம் பெரும்பாலோருக்கு ஆங்கிலமே தெரியாது.

சிங்கப்பூர் முழுக்க அமெரிக்காவை நம்பியிள்ள ஓர் குட்டி நாடு என்பதால் அங்கு ஆங்கிலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சிங்கப்பூரில் ஓர் விசேஷம் என்னவெனில், முக்கியமாக தமிழ் தொலக்காட்சி நிகழ்ச்சியாக இருக்கட்டும், வானொலி நிகழ்ச்சியாக இருக்கட்டும், யாரேனும் தங்கிலிஷில் உரையாடினால், உடனே நிறுத்துங்கள், இங்கே எங்கள் எல்லோருக்கும் தமிழ் நல்லாவே தெரியும் தமிழிலேயே பேசுங்கள் என மூஞ்சில் அடித்தார் போல் அக்கனமே சிறிதும் தயக்கமின்றி சொல்லிவிடுவார்கள். இதனாலேயே அங்கே ரொம்பவும் முன்னெச்செரிக்கையாக நல்ல தமிழிலேயே உரையாடுவார்கள்.

எனக்கு இதுபோன்ற மூஞ்சில அடிக்கிற மாதிரி நடந்துக்கொள்வது மிகவும் பிடிக்கும். ஏனெனில் ஒரு பழமொழி சொல்வர்கள், அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்று.

நம்மவர்கள் மிகவும் பொருமைசாலிகள் பல விதங்களில். எங்கு ஓர் இடத்தில் பயம் உள்ளதோ அந்த இடம் அங்கு நடைபெறும் செயலும் சரியாகவே இருக்கும்.

நம்ம நாட்டில் ஆங்கிலத்தில் பேசினால் பந்தா என நினைத்ததன் விளைவு தான் அந்நிய மொழி நம்மை ஆக்கிரமித்துக்கொண்டதற்க்கான முதல் படி.

நல்ல சிந்தனையோடு திரி துவங்கிய நண்பர் ஜெகனை நான் பாராட்டுகிறேன். நான் சொன்னவை யாவும் அந்நிய மொழியை ஒலிக்க செய்து எழுதுவது பேசுவது எல்லாமே அடங்கும். நீங்கள் உங்கள் வழியிலேயே தொடருங்கள் அய்யா அம்மனி. உங்களின் தமிழ் தொண்டு பரவட்டும். தமிழ் வாழட்டும், வாழும் எனவும் சொல்லி விடைபெறுகிறேன்...
Reply With Quote