View Single Post
  #35  
Old 18-03-09, 08:31 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,283
iCash Credits: 674,642
My Threads  
Quote:
Originally Posted by காமராஜன் View Post
புன்னகை எப்போதும் புத்துணர்வைத் தருகின்றது..
அது இடத்தை பொறுத்தது, ஒருவர் தெரிந்தே ஒரு தவறு செய்யும் போது, அந்த தவறை கண்டிக்க கூடிய இடத்தில் இருப்பவர் அவரை பார்த்து புன்னகைத்தால் அந்த தவறை அவரும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகி விடும். அதே போல மிகவும் சிரியசான இடத்தில் (ஒரு தவறு/கஸ்டம்/துக்கம் என ) இருக்கும் போது புன்னகைத்தால், அதை விட கொடுமையான தண்டனை சம்பந்தப்பட்டவருக்கு இருக்காது. ஒருவர் தவறு செய்திருக்கிறார் என்று சுட்டிக்காட்டும் போது, புன்னகை செய்தால் அது இன்னும் கூடுதலாக தவறு செய்தவருக்கு (கிண்டல் செய்வதாக) தோன்றும். உ.தா, நமது லோகத்தில் ஒருவருக்கு இப்படி தனிமடல்/எச்சரிக்கை அனுப்பினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.

அன்பு நண்பரே,

நீங்கள் நம் தளத்திலே, திருட்டுக்கதை பதிந்ததால் உங்களை ஒரு மாத காலத்திற்கு உள் நுழைய தடை செய்கிறோம், மற்றும் உங்கள் அங்கத்தினர் பதவியையும் ஒரு படி கீழே இறக்குகிறோம் . தொடர்ந்து இதுமாதிரி செய்தால் முற்றிலும் உங்களை தடை செய்ய வேண்டி இருக்கும்.

வாழ்த்துக்கள்.

என்றும் உங்கள்
மேற்பார்வையாளர்.


கண்டிக்கவேண்டிய நேரத்தில் கண்டிப்பு காட்டாமல், புன்னகை சிந்தினால் பின்னர் கண்டிப்பிற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். நம் தளம் மற்ற தளங்கள் போல வந்தோம் பார்த்தோம் சென்றோம் தளம் அல்ல. அப்படி எல்லோரும் சென்றால் கதை/கவிதை/கட்டூரை/விவாதங்கள் எப்படி கிடைக்கும். எனவே பங்களிப்பது அவசியம். அப்படி பங்களிப்பது ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதாலே தான் நாம் விதிமுறைகள் வைத்துள்ளோம், அது இப்போதுவரை நம் தளத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. இதில் தளர்வு அதாவது தவறு செய்பவரை(தெரிந்து செய்தாலும்/தெரியாமல் செய்தாலும்) கண்டி(டு)க்காமல் சிரித்து மழுப்பி விட்டு விட வேண்டும் என்றால், அவர் மீண்டும் அந்த சிரிப்பை காண நினைப்பார். அதற்கு பதில் கண்டிப்பு இருந்தால் முறையாக பங்களிப்பார்.

பொதுவாக, நாடு என்றிருந்தால் சட்டம் என்றிருக்கும், அப்படி சட்டம் என்றிருந்தால் அந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை என்றும் சொல்லப்பட்டிருக்கும், அவ்வாறின்றி தண்டனையே கூடாது என்றிருந்தால் அந்த சட்டத்திற்கு மதிப்பிருக்காது. அவரவர் விருப்பப்படி மீறுபவர்கள், அதே போல வெப்தளம் என்றிருந்தால் அததற்கென விதிமுறைகள் உண்டு மீறுபவர்கள் மீது நடவடிக்கை உண்டு. இல்லாவிட்டால தளம் குப்பையாகி விடும். தளத்திலே உள்நுழைபவர் ஒழுங்கற்ற தன்மையால் எரிச்சலுறுவர்.

நம் தளத்திலே தப்பு செய்பவர்கள் இரண்டே வகையினர், ஒன்று புத்தம் புது உறுப்பினர் மற்ற தளம் போல நினைத்து, இங்கே செயல்படுவர், இவர்கள் முதலில் அறிவுறுத்தல் பெறுவர், அதனை புறந்தள்ளி திரும்ப செய்தால், அதற்குரிய தண்டனை பெறுவதன் மூலம் திருந்துவர். இன்னொரு வகையினர் முன்னரே இங்கே பழம் தின்று கொட்டை போட்டு, பின்னர் பங்களிக்க மறந்து தளத்திலே திடிரென அவ்வப்போது தோன்றி, அதை மாற்று இதை மாற்று என்று சொல்லி தங்கள் நேரத்தையும் மற்றவர் நேரத்தையும் கெடுப்பவர்களே, பொதுவாக இவர்களிடம் நிர்வாகம் கடுமையாக நடந்து கொள்வதில்லை, அவர்கள் பழைய பங்களிப்பை மனதில் கொண்டு நீங்கள் சொல்வது போல புன்முறுவல் செய்து விட்டு, தளத்திலே ஆக வேண்டிய ஆக்கப்பூர்வ வேலைகளில் கவனம் செலுத்துவர். ஆனால் நிர்வாகம் மற்றும் தளத்து நண்பர்கள் கண்டு கொள்ள வேண்டும் என்றே, ஆங்காங்கே சில திரிகளில் வித்தியாசமாக கருத்து பதிந்து சென்று கொண்டே இருப்பார்கள். ஒரு அளவுக்கு மேலே போனால் தான் இவர்கள் செம்மையாக கவனிக்கப்படுவார்கள். கவனிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவர்.

நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும், மிரட்டலோ கண்டிப்போ செய்வதில்லை, நிர்வாக உறுப்பினர்களில் நிர்வாக உதவியாளர்கள், கண்கானிப்பாளர், மேற்பார்வையாளர், தலைமை நிர்வாகி, ஆலோசகர் என இருக்கின்றனர். இதில் மேற்பார்வையாளர் என இருப்பவர்கள் (நானும், ஹயாத், ஸ்மார்ட்மேன்) தான் பிறர் மீது நடவடிக்கை எடுக்கிறோம். இதில் மற்ற நிர்வாக உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?.

நிர்வாக உதவியாளர்கள், நிர்வாகத்தினருக்கு உதவி செய்வதை விட தளத்து உறுப்பினர்களுக்கே அதிகம் உதவி புரிகின்றனர். அது கதை பதிக்கும் புதியவர்களும் மற்றும் சமயத்தில் சில பழையவர்களுக்கு வரும் தனிமடலை வைத்து அவர்கள் அறிவார்கள். கண்கானிப்பாளர்கள் தாங்கள் கானும் நெறிமீறல்களை மேற்பார்வையாளர்களுக்கு தெரிவித்து, பின் அதை ஒன்றுக்கு இருமுறை ஊர்ஜிதப்படுத்தியே தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை திரியிலே பதிவுகள் (உங்கள் பார்வையில் மிரட்டல், அதிரடி) எங்களால் செய்யப்படுகிறது. அது தவறென்றால் நிர்வாக ஆலோசகர் மற்றும் தலைமை நிர்வாகியால் (மேற்பார்வையாளர்கள்) கவனம் பெற்று அதற்கு நிவாரணம் செய்கிறோம்.

சினிமா பட பஞ்ச் டயலாக் மாதிரி சொல்வதென்றால், தளத்திலே பங்களிக்கும் நல்லவர்களுக்கு நாங்கள் காமதேனு, தளத்திற்கு ஊறு விளைவிக்கும் வல்லவர்களுக்கு மிரட்டல்காரர்கள் தான்.

நாங்கள் எப்படி உங்களுக்கு தெரிகிறோம் என்று ஒருவர் நினைப்பதை வைத்து அவரவர் தங்களை அறிந்து கொள்ளலாம்.

தளத்திலே தவறு செய்பவர்களில், நேரமின்மை காரணமாக, அதிக உழைப்பில்லாமல் அடுத்தவர்(தள) படைப்பை இங்கே காப்பி செய்பவரே அதிகம், இவர்களிடம் தான் அதிக கடுமை காட்டப்படுகிறது. அடுத்தவர் படைப்பை(உழைப்பை) தனது படைப்பென்று கூசாமல் சொந்தம் கொண்டாடி அதன் மூலம் இங்கே அங்கீகாரம் பெற நினைப்பவர்களை, கண்டிக்க கூடாது என்று சொல்லி அவர்களுக்கு வால் பிடிக்காதீர்கள்.

உங்கள் அளவிற்கு தெளிவாக புரியும்படி என்னால் பதில் பதிக்க முடியவில்லை, ஏதோ எனக்கு தெரிந்தபடி பதிந்திருக்கிறேன். புரியாத இடம் இருந்தால் சொல்லுங்கள் மறுபடியும் பதிக்கிறேன்.
__________________
Reply With Quote