View Single Post
  #12  
Old 01-10-12, 08:49 PM
குரு குரு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Sep 2012
Posts: 1,133
My Threads  
எனது இந்தத்திரியால் பயன்பெற்ற பெறப்போகும் அனைவருக்கும் எனது நன்றிகள்.

அன்பின் மிம்ஸ்..

நானும் இ கலப்பைதான் முன்னர் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். ஆயினும் இந்த என் எச் எம் ரைட்டரில் கூடுதலான வசதிகளைக் கண்டு இதில் மாறி கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக மாற்றாமல் பயன்படுத்துகிறேன்.

பொதுவாக தமிழில் தட்டச்சும் போது தண்டை என தட்டச்சினால் முன்னர் இ கலப்பையில் தன்டை என டைப் ஆகும். நாம் வலிய ஷிஃப்டை அழுத்தி தண்டை என தட்டச்ச வேண்டும்.

ஆனால் என் எச் எம் ரைட்டரில் வண்டு தண்டு செண்டு வேண்டும் என நீங்கள் தட்டச்சும் போது ணகரம் தானாகவே ட என்னும் இணைக்கு ஏற்ப மாறிக்கொள்ளும்.

குறிப்பாக வாத்தியார் செய்யும் மிக அதிக எழுத்துப்பிழைகள் இந்த டண்ணகரப்பிழைகள் தான். அவர் இந்த மென்பொருளைப் பயன்படுத்தினால் தானாகவே குண்டு முண்டு துண்டு என மாறிக்கொள்ளும். இது நிறையப்பேருக்கு பிழை இல்லாமல் தட்டச்ச உதவும்.

அதனால் தான் அதை இங்கே அறிமுகப்படுத்தி அனைவருக்கும் பயன் உண்டாகட்டுமே என வழங்கினேன்.
Reply With Quote