View Single Post
  #14  
Old 01-10-12, 09:51 PM
குரு குரு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Sep 2012
Posts: 1,133
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
இதில் ஒரு சின்ன சந்தேகம் அனைத்து 'ட்'+உயிரெழுத்துக்கும் முன்னால் மூன்று சுழி ண் தான் வருமா? அல்லது ஏதாவது எழுத்துக்கு இரன்டு சுழி 'ன்' உம் வருமா? இது எனக்கு ரொம்ப நாள் குழுப்பமாக இருக்கிறது.
ஆமாம் வாத்தியார். எந்த டண்ணகரத்தின் முன்னாலும் ணகரம் தான் வரும். இது தமிழின் மாறாத விதி.

ஆனால் ஆங்கிலத்தை தமிழில் எழுதும்போது லன்டன் என வரலாம் என்றாலும் லண்டன் என எழுதுவதுதான் தமிழுக்கு நாம் செய்யும் மரியாதை.

கொண்டான் குண்டான் சிண்டைப்பிடித்து மண்டையை உடைத்தான்.
இப்படித்தான் வரும். இந்த மாற்றமுடியாத விதியைத்தான் என் எச் எம் ரைட்டர் அதில் புகுத்தியுள்ளது. நீங்கள் எத்தனை முயன்றாலும் ’’வன்டை’’ என டைப் அடிக்க முடியாது,

இதைப் பயன்படுத்துவதிலும் சிரமமில்லை வாத்தியார். இன்ஸ்டால் செய்தபின் ஆல்ட் + 2 தமிழுக்கு என வைத்துக்கொண்டால் அந்த ஒரு கீ மட்டுமே தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் நமக்கு மாற்றிக்கொடுக்கும்.

முயன்று பாருங்களேன் வாத்தியார். காசா பணமா..?
Reply With Quote