View Single Post
  #1  
Old 29-12-20, 05:54 PM
rojaraja rojaraja is offline
Bronze Member (i)
 
Join Date: 17 Aug 2008
Location: தமிழகம்
Posts: 514
iCash Credits: 14,133
My Threads  
(ல ள ழ), பிழைகள் இல்லாமல் பயன்படுத்த சில குறிப்புக்கள்

(ல ள ழ), எப்படி ஓரளவுக்கு பிழைகள் இல்லாமல் வார்த்தைகளில் பயன்படுத்துவது என்று இங்கே பார்ப்போம்

அவற்றின் பெயர்களை பார்ப்போம்

ல - ஒற்றல் லகரம் (இதை சின்ன "ல" என்றும் சொல்வதும் உண்டு)
ள - பொது அல்லது வருடல் ளகரம் (இதை பெரிய "ள" என்றும் சொல்வதும் உண்டு)
ழ - சிறப்பு ழகரம்

இந்த எழுத்துக்கள் பயன்படுத்த அதன் உச்சரிப்பை சரியாக தெரிந்து இருந்தால் அதை பயன்படுத்துவது எளிது. "ல" தனி லகரம் நாக்கின் நுனி வைத்து உச்சரிக்கவேண்டும், "ள" - பொது ளகரம் லேசாக நாக்கை கொஞ்சமாக பின்னுக்கு வளைத்து உச்சரிக்கவேண்டும், ழ - சிறப்பு ழகரம் நாவை நன்றாக பின்னுக்கு வளைத்து உச்சரிக்கவேண்டும் இவ்வாறு பழகி கொண்டால் அதன் பயன்பாடு வரும் சொற்கள் உச்சரித்து நாம் சரியான "ல ள ழ" எழுத்துகளை பயன்படுத்திவிடலாம்

சில குறிப்புக்கள் வைத்து பிழைகளை தவிர்க்கலாம், முதலில் "ள" பற்றி பார்ப்போம்
ள - அதிகம் பன்மையை குறிக்கும் சொல்லோடு தொடர்புடையது, பெண்பால் குறிக்கும் சொற்கள் மற்றும் அதிகம் "கள்" என்று வரக்கூடிய சொற்கள்
ஊ.த: ஆடுகள், மாடுகள், வாருங்கள், அவள், இவள், வருகிறாள், பார்த்தாள்

ழ - பெரும்பாலும் "ள"வா என்ற சந்தேகம் வரும் இது "ள" வை காட்டிலும் கொஞ்சம் நீட்டி ஒலிக்ககூடியது இது பெரும்பாலும் உச்சரித்து மற்றும் சொல்லின் பொருள் கொண்டு திருத்திக்கொள்ளவேண்டும்

ல - பொதுவாக ஆல், யில், லாம், லை, லும் (in, if, may, by, but ) என்று வரக்கூடிய சொற்களோடு தொடர்புடையது, மேலே கொடுக்கப்பட்ட இரு குறிப்புக்குள் அடங்காத வார்த்தைகள் இதில் அடங்கும்.

ஆல் (என்றால், if) - ஊ.த: வந்தால் -> வந்து + ஆல், நின்றால் -> நின்று + ஆல்
யில் (உள்ளே, in) - ஊ.த: மேஜையில் ->மேஜை + யில் , பையில் -> பை + யில்
லாம் (கூடும் may) - ஊ.த: வந்துயிருக்கலாம், சென்றிருக்கலாம்
லை (கொண்டு, by) - பாலை கொண்டு,
லும் (ஆனாலும் , but) - பாலினாலும்
க்கு (ஆக, for) - பாலுக்கு மாற்றாக

ஒற்று ஏழுத்து "ள்ள" "ல்ல" ஒரே எழுத்தாக தான் வரும் இது கலந்து வராது

சிறப்பு ழகரம் "ழ" எழுத்து ஒற்று எழுத்தாக வராது
Reply With Quote