View Single Post
  #1  
Old 02-11-12, 10:53 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,237
iCash Credits: 671,294
My Threads  
தவறுதலாக புரிந்து கொள்ளும் நிர்வாக விதிமுறைகளுக்கான விளக்கம்.

நம் தளத்திலே அநேகர் சில நிர்வாக விதிமுறைகளை தவறுதலாக புரிந்து கொள்வதை விளக்க இந்த திரி பயன்படும்.



1) ரிப்போர்ட் போஸ்ட்.

உறுப்பினர் தன்னை/எவரொருவரையும் பாதித்த அல்லது விதிமுறைகளை மீறிய ஒரு திரி/பதிப்பு குறித்த தங்கள் எண்ணத்தை/ஆட்சேபத்தை நிர்வாகத்திற்கு தெரிவிப்பதற்கான ஒன்று. இது ஓவ்வொரு பதிப்பின் ஓரத்தில் ஒரு சிவப்பு முக்கோணத்தில் ஆச்சர்யக்குறி போட்ட ஐகானை அழுத்துவதன் மூலம் ஒரு செய்திபெட்டியாக கிடைக்கும். அதில் பதிக்க வேண்டிய புகாரை பதிந்து பின் send report என்பதை அழுத்தினால் நிர்வாகத்திற்கு குறிப்பாக தலைமை நிர்வாகி அவர்களுக்கு ரிப்போர்ட் சென்றடையும்.



ரிப்போர்ட் போஸ்ட் எதெதற்கு செய்யலாம்.
தள விதிகளுக்கு முரணாக பதிக்கப்பட்ட, சொல்லப்பட்ட ஒரு கருத்து/பதிவிற்கு, அது எவ்வாறு முரண்பட்டது என்று சொல்லி ரிப்போர்ட் போஸ்ட் செய்யலாம்.

தன்னைப்பற்றியோ, தளத்து உறுப்பினர் பற்றியோ, நிர்வாகம் பற்றியோ ஒருவர் தனது பதிவில் தரம் தாழ்த்தியோ உள்நோக்கம் கற்பித்தோ, பொதுவிலே குழப்பம் விளைவிக்கும் படியான எந்த ஒரு பதிப்பிற்கும் ரிப்போர்ட் போஸ்ட் செய்யலாம். அந்த ரிப்போர்ட் போஸ்டிலே அந்த பதிவை ஏன் ரிப்போர்ட் செய்கிறோம் என்று சுருக்கமாக எழுத வேண்டியது நல்லது.

முன்னரே பதிக்கப்பட்டிருந்த கதையை இன்னொருவர் திரும்ப பதிந்தாலோ, பிற தள/வலைப்பூவில் கண்ட கதையை இங்கே ஒருவர் அதற்குப்பின் பதிந்திருந்தாலோ, அது திருட்டுக்கதை, இங்கே எழுதியவருக்கு சொந்தமானதில்லை என்பதை நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்ட ரிப்போர்ட் போஸ்ட் செய்யலாம். அந்த ரிப்போர்ட் போஸ்ட்-ல் அதற்குரிய ஆதார சுட்டியை இட்டும் அனுப்பலாம்.

பிறிதொருவர் செய்த இரட்டைப்பதிவு/வெற்றுப்பதிவு/தேவையில்லாத பிறதளசுட்டி, அல்லது முந்தைய கதைக்கான வேலை செய்யாத சுட்டி, தவறான இடத்தில் திரி ஆரம்பித்திருப்பது, முன்னரே வந்த தலைப்பில் திரும்ப திரி ஆரம்பித்திருப்பது இவற்றை ரிப்போர்ட் போஸ்ட் செய்யலாம்.




ரிப்போர்ட் போஸ்ட் செய்யக்கூடாதது:

ஒருவர் தானே இரட்டைபதிவு/தவறான இடத்தில் திரி ஆரம்பித்து விட்டோ அல்லது தவறாக ஒரு பதிவு செய்து விட்டு பின் அதனை ரிப்போர்ட் போஸ்ட் செய்வது இரட்டைத்தவறு, இதற்குப்பதில் அவர் நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு தனிமடல் தான் இட வேண்டும். அப்போதைக்கு ஆன் லைனில் உள்ளவருக்கோ அல்லது அன்று லாகின் ஆகி இருந்த ஒரு நிர்வாக உறுப்பினருக்கோ தனிமடலிட்டால் போதும்.


அனுமதிகள்/விளக்கங்கள்/விதிமுறைகளை பற்றி கேட்பதற்கும் ரிப்போர்ட் போஸ்ட் கூடாது.


சோஷியல் குருப்களில் பதிக்கப்பட்டுள்ள சில படங்களுக்கு, கருத்து பதிப்பதற்கு பதில் அநேகர் send report என்பதை அழுத்தியும் ரிப்போர்ட் போஸ்ட் தந்து விடுகிறார்கள். இது தவறாகும்.


தங்கவாசலில் ஏதேனும் திரியிலே படம் தெரியவில்லை, சுட்டி வேலை செய்யவில்லை என்றால் ரிப்போர்ட் செய்வதும் கூடாது. கதைகள் தான் நமக்கு முக்கியம், கதை தவிர்த்து மற்றவைகளுக்கு நாம் ரிப்போர்ட் போஸ்ட் செய்வதற்கு பதில் தனிமடல் திரி ஆரம்பித்தவருக்கும் கூடுதலாக நிர்வாக உறுப்பினருக்கும் அனுப்புதலே சிறந்தது. அதை விடுத்து அடுத்தடுத்து உறுப்பினர்கள் சுட்டி வேலை செய்யவில்லை என்றே பதிந்து அதனை எழுப்பி விடுதல் சரியல்ல.
__________________