View Single Post
  #1  
Old 26-12-20, 11:36 PM
rojaraja rojaraja is offline
Bronze Member (i)
 
Join Date: 17 Aug 2008
Location: தமிழகம்
Posts: 514
iCash Credits: 13,869
My Threads  
மயங்கொலி (ன ண ந) எழுத்துக்களை சரியாக பயன்படுத்த வழிகள்

எழுத்துகளை உச்சரிக்கும் ஒலி பொறுத்து மூன்று பிரிவுகள் இருக்கின்றன வல்லினம், மெல்லினம் இடையினம்

க ச ட த ப ற - வல்லினம் (நெஞ்சில் இருந்து வரக்கூடிய ஒலிகள்)
ங ஞ ண ந ம ன - மெல்லினம் (மூக்கு வழியாக வரக்கூடிய ஒலிகள்)
ய ர ல வ ழ ள - இடையினம் (தொண்டையில் இருந்து வரும் ஒலிகள் )
குறில் - குறுகி ஒலிக்கும் ஓசைகள் அதாவது (அ இ உ எ ஒ) என்று முடிக்கும் எழுத்துக்கள் அனைத்தும் குறில்கள்
நெடில் - நீட்டி ஒலிக்கும் ஓசைகள் அதாவது (ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ) என்று முடிக்கும் எழுத்துக்கள் அனைத்தும் நெடில்கள்

மேலே குறிப்பிட்ட படி எழுத்துக்களை சரியாக உச்சரிக்க பழகிக்கொண்டால் எழுதுவதும் எளிது

(ல ள ழ) (ர ற) (ன ண ந) இந்த எழுத்துக்கள் மயங்கொலி என்பார்கள் இதன் சிறப்பு என்னவென்றால் குழுவில் இருக்கும் எழுத்துக்கள் ஒரே ஒலிகொண்டு இருக்கும் இதை சரியாக பயன்படுத்த இருவழிகள் உண்டு

1. எழுத்தின் உச்சரிப்பு வைத்து
2. சொல்லின் பொருள் கொண்டு

நான் பொதுவாக சொல்லின் பொருள் கொண்டு தான் இந்த எழுத்துக்களை திருத்திக்கொள்வேன் இதில் எனக்கு இப்போதைக்கு தெரிந்த (ன ண ந) உபயோகத்தை பற்றி இங்கு பாதிக்கிறேன் (ன ண ந) எழுத்துக்களுக்கு தனி பெயர்கள் உண்டு

ன - றன்னகரம்
ண - டன்னகரம்
ந - தன்னகரம்

இந்த எழுத்துகளின் பெயர் கொண்டே அவைகளை பயன்படுத்த தெரிந்து கொள்ளலாம் அதாவது இரண்டு சுழி "ன" எழுத்தை அடுத்து "ற" சார்ந்த வல்லின எழுத்து வரும் அதே போன்று "ன" அடுத்து "த" னா எழுத்துக்கள் வராது.

அதே போன்று மூன்று சுழி "ண" வுக்கு அடுத்து "ட" சார்ந்த எழுத்துக்கள் தான் வரும் அதனால் தான் இதை டன்னகரம் என்று அழைக்கின்றனர்

"ந" வுக்கு அடுத்து "த" சார்ந்த எழுத்துக்கள் தான் வரும் அதனால் தான் இதை தன்னகரம் என்று அழைக்கின்றனர்

எப்போதும் (ன ண ந) ஒலிகள் வரும்போது முதலில் மூன்று சுழிக்கான "ண" மற்றும் "ந" வின் விதியை பாருங்கள் இது இரண்டும் பொருந்தவில்லை என்றல் இரண்டு சுழி "ன" வை பயன் படுத்துங்கள்

உதாரணத்துக்கு
"பன்றி" என்ற வார்த்தை சரியா என்று ஆராய்வோம்
"ண" வுக்கு அடுத்து "ட" சார்ந்த எழுத்து வரவேண்டும் (பொருந்த வில்லை)
"ந" வுக்கு அடுத்து "த" சார்ந்த எழுத்து வரவேண்டும் (பொருந்த வில்லை)
"ன" வுக்கு அடுத்து "ற" சார்ந்த எழுத்து வரவேண்டும் (பொருந்துகிறது)

வண்டல், சுண்டல் எழுத்துக்கள் "ண" வுக்கு பொருந்துகிறது (ண அடுத்து ட வருகிறது)
மந்தை, ஆந்தை எழுத்துக்கள் "ந" வுக்கு பொருந்துகிறது (ந அடுத்து த வருகிறது)

சுண்ணி, தண்ணிர் - மேலே கொடுக்கபட்ட விதி படி சுன்னி தண்னிர் தான் சரியான வார்த்தையாக இருக்கமுடியும்
Reply With Quote