View Single Post
  #19  
Old 15-01-06, 11:43 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by red_block
பொங்கல் திரு நாள் தமிழர் திரு நாளா யாராவது விளக்கமாக கூறவும்.
இதோ விளக்கம் :

"..தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில் சமயசார்பற்ற எல்லோருக்கும் பொதுவான விழா பொங்கல் திருநாளாகும். பொங்கல் விழாவில் கற்பனைக்கோ புனைவுகளுக்கோ அருவருக்கத் தக்க பகுத்தறிவுக்குப் பொருந்தாத கட்டுக் கதைக்கோ இடமில்லை.."

தை முதல்நாள் தமிழர்களின் திருநாள். உழவர்களின் பெருநாள். தமிழர்கள் இயற்கைக்கு விழா எடுக்கும் இனிய நாள். தமிழ்கூறு நல்லுலகம் போற்றும் இன்ப நாள்.

களனி திருத்தி வயல் உழுது எரு இட்டு நீர் பாய்ச்சி நெல் விதைத்துயூயூ களை எடுத்து விளைந்த நெல்மணிக் கதிர்களை அரிவி வெட்டி சூடு மிதித்து நெல்லை வீட்டுக்குக் கொண்டு வந்து கூடையில் போட்டு பின்னர் அதில் கொஞ்சம் எடுத்து உரலில் போட்டுக் குத்தி அரிசியாக்கி புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் பாகும் பருப்பும் இட்டுப் பொங்கி மஞ்சளும் இஞ்சியும் கரும்பும் கற்கண்டும் இயற்கைத் தெய்வமான ஞாயிறுகுப் படைத்து மனைவியும் மக்களும் கொண்டாடி மகிழும் விழாவே பொங்கல் நாள்!

அறுவடைக்கு முன்னதாக நல்ல நாளில் வயலில் தலைசாய்த்து காற்றினால் தலையசைத்து நிற்கும் நெல்மணிக் கதிர்களில் கைப்பிடி அரிந்து தட்டில் எடுத்து வந்து வீட்டு வாசலில் கட்டுவார்கள். இதற்குப் புதிர் எடுத்தல் என்று பெயர். பின்னர் தைப்பூசத் திருநாளில் புதிர் குழைத்தல் இடம்பெறும். புத்தரிசி பொங்கியூயூ சர்க்கரையும் வாழைப் பழமும் சேர்த்துப் படைக்கும் இப்புதிர் சோற்றை சுற்றமும் நட்பும் சூழ இருந்து உண்டு மகிழ்வர்.

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். இந்நாளில் வயல் உழவவும் வண்டி இழுக்கவும் பால் தயிர் நெய் கொடுக்கவும் எரு எடுக்கவும் காரணமாக இருந்த எருதுகளையும் பசுக்களையும் கன்றுகளையும் குளங்களில் குளிப்பாட்டி குங்குமம் சந்தனம் மலர் மாலைகளால் அலங்கரித்து குடிக்கக் பச்சையரிசிக் கஞ்சி கொடுப்பர்.

உழவன் கமத்துக்கு துணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடப் படுகிறது. இ;ந்த விழா பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படும்.

பொங்கள் நாளை ""சங்கராந்தி"" யாக புராணிகர்கள் மாற்ற முற்பட்டபோதும் அடிப்படையில் பொங்கல் உழவர் விழாவாகவே உயர்ந்தும் நிலைத்தும் உள்ளது.

நன்றி - தமிழ்நேசன்

Last edited by ஆதி; 15-01-06 at 11:47 AM.
Reply With Quote