View Single Post
  #15  
Old 28-08-15, 06:14 AM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
நான் சமீபத்திய கதைகளை படிக்கவில்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியும் நண்பரே? நான் கதைகளை படிப்பதே இல்லை என்று எப்படி உங்களால் சொல்ல முடியும். சமீபத்திய கதைகளில் இது சிறந்த கதை என்று சொல்லுவதற்கு என்ன பொருள்?? மற்ற கதைகள் மட்டம் என்றா பொருள்?? எஸ்ரா ஒரு 100 கதைகளை வரிசைப்படுத்தினால் அதற்கு பொருள் அவை 100 சிறந்த கதைகளை ஒழிய, இன்னொருவர் கதை மட்டம் என்பதுதானா? வரிசைப்படுத்துவது எஸ்ரா உரிமை....அதில் யாராவது வந்து என் கதையை ஏன் சேர்க்கவில்லை என்று சண்டை போட முடியுமா என்ன??

இது என் தனிப்பட்ட கருத்து! மேலும் இதே போட்டியில் என் கதையும் உண்டு. நிச்சயமாக ராம் கதை என் கதையை விட சிறந்ததுதான்...! இதை சொல்ல என்ன தயக்கம்.

நானும் இங்கே 10 வருடமாக இருக்கிறேன். ஏறக்குறைய 90 கதைகள் எழுதியுள்ளேன்....இன்னும் 1000 கதை எழுதும் அளவுக்கு எனக்கு திராணியும், சரக்கும் உண்டு! நீங்கள் நிர்வாக உதவியாளராக இருக்கிறீர்கள். தட்டி கொடுத்து உறுப்பினரை பாராட்டிவீர்களா? இல்லை லைனுக்கு நடுவே படித்து மற்றவரை நான் அவமானப்படுத்துகிறேன் என்று பொருந்தாத கதை சொல்வீர்களா? இது உங்கள் பதவிக்கு அழகல்ல!

மற்றபடி உங்கள் மீது எனக்கு வருத்தம் இல்லை.

நன்றி
மௌனி

[QUOTE=Nallavan1010;1353675]
Quote:
Originally Posted by mayakrishnan View Post
உங்களின் இந்த பாஷையில் கேட்டால் சமீபத்தில் வந்த கதைகள் எல்லாவற்றையும் தாங்கள் படித்துவிட்டீர்களா? படிக்காமல் சமீபத்தில் வந்த கதைகளை விட சிறந்தது என்று சொல்வது நண்பர் இங்கு முதலிடம் பெற்ற ராமிற்கும் பெருமை இல்லை(காரணம் சமீபத்தில் வந்த எல்லா கதைகளையும் படித்தவர் சொன்ன கருத்தில்லை இது) கதை எழுதிய மற்றவர்க்கும் பெருமையில்லை. ஒருவரை வாழ்த்துங்கள் மற்றவர்களை குறைத்து சொல்லவேண்டாமே.
Reply With Quote