26-11-21, 05:05 PM
|
User inactive for long time
|
|
Join Date: 05 Aug 2007
Location: சிங்கப்பூர்
Posts: 949
My Threads
|
|
மிக்க நன்றி
முதற்கண் இந்த போட்டியில் பங்கெடுத்த படைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி; அடுத்து போட்டியில் கதைகளைப் படித்து வாக்கு செலுத்திய அனைவருக்கும் மிக்க நன்றி. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்கள் இருவருக்கும் பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்
என் கதையை விரும்பி என்னை ஊக்குவித்த தோழ/தோழியர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி
Quote:
Originally Posted by KADAMBANC
அக்டோபர் மாதப் போட்டியில் முதலிடம் பெற்ற நண்பர் ராகவ் அவர்களுக்கும், இரண்டாமிடம் பெற்ற நண்பர் காதலன் அவர்களுக்கும், மூன்றாம் இடத்தையும் திரும்ப தங்கவாசல் அனுமதியையும் பெற்ற நண்பர் சிவா அவர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!! போட்டியில் பங்கேற்ற இதர நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!!
|
மிக நன்றி நண்பரே
Quote:
Originally Posted by ASTK
நண்பர் ராகவ் அவர்கள் ஆயிரம் பெண்மை மலரட்டுமே என்ற இந்த தொடர்கதையை முதலில் எழுதிய போது இடையிலே நிறுத்தி விட்டார். பின்னர் இப்போது மீண்டும் தொடர்ந்து எழுதி முடித்து அதை வெற்றிக் கதையாக மாற்றி விட்டார். அவருக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோல ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதல் இடத்தை தவற விட்டு ஆறுதல் பரிசை தட்டிச் செல்லும் நண்பர் காதலன் அவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல மீண்டும் கதை எழுதி மூன்றாம் இடத்தையும் தங்கவாசல் அனுமதியையும் ஒன்றாகப் பெறும் நண்பர் சிவா அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அக்டோபர் மாத கதை போட்டியில் கலந்துகொண்டு கதை எழுதிய மற்ற நண்பர்களுக்கும் , வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்து நண்பர்களுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுக்களும்.
|
முதலில் நிறுத்திவிட்டேன் என்று சொல்லமுடியாது; என் முதல் முயற்சி, முதல் கதை எழுதும் அனுபவம் . . . 2008-ல் எழுதத்தொடங்கி பின்னர் இழு இழு என நேரம் இழுக்க; ஒரு வழியாக 18 பாகங்களாக 2009-ல் முடித்தேன். முடிக்கும் போது அதை மேலும் தொடர எண்ணமிருந்தாலும் சரியாக திருப்தி அளிக்கும் அளவுக்குக் கதைக்கரு அமையாமை என் மனதைக் குழப்பி காலம் கடத்த அந்த யோசனையைத் தற்காலிகமாக நிறுத்தியது உண்மைதான். மேலும் என் முகவுரையில் குறிப்பிட்டதைப்போல இந்த கோவிட்-19 ஏற்படுத்திய கட்டாய ஓய்வில் அந்தக்கதையை மேலும் தொடர முடிந்தது. ஆனால் இப்படி பலர் மனதைக்கவர்ந்து போட்டியில் வெற்றி பெரும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை எனக்கு இது நிச்சயமாக ஒரு பெரிய ஆச்சரியம்
Quote:
Originally Posted by kathalan
அக்டோபர் மாதப் போட்டியில் முதலிடம் பெற்ற நெடுந்தொடர் வித்தகர் Ragov அவர்களுக்கும், அடுத்தடுத்து இடங்களில் வந்த கதாசிரியர் நண்பர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட லோக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்!
|
மிக்க நன்றி நண்பர் காதலன் அவர்களே!
ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடம் நழுவ, இரண்டாம் பரிசு வென்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்
'நெடுந்தொடர் வித்தகர்' எனப்பட்டம் சூட்டியமைக்கு மிக்க நன்றி, ஆனால் அதுவே என் குறைபாடு; நான் தங்களுக்குத் தனிமடலில் விளக்கியபடி என்னால் சிறு கதைகளைப் படைக்க முடியாமல் திணறுகிறேன் என்பது உண்மை
Quote:
Originally Posted by ஸ்திரிலோலன்
நூற்று இருபத்தி மூன்று பாகங்கள் கொண்ட கதை படைத்து மீண்டும் ஸ்டார் ரைட்டர் ஆகிய நண்பர் ராகவ் அவர்களுக்கு வாழ்த்துகளையும், அவரை கிட்டத்தட்ட நெருங்கி ஆறுதல் பதக்கம் வென்ற நண்பர் காதலன் அவர்களுக்கும், தன் இரண்டாம் இன்னிங்ஸில் மூன்றாம் இடம் வென்று மீண்டும் தங்க வாசலை அடைந்த நண்பர் சிவா அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். கதை கொடுத்த படைப்பாளிகளுக்கும், வாக்களித்த நண்பர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
|
மிக்க நன்றி நண்பரே
Last edited by Ragov; 26-11-21 at 05:14 PM.
Reason: Format
|