View Single Post
  #612  
Old 14-01-24, 05:40 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,295
iCash Credits: 675,956
My Threads  
Quote:
Originally Posted by மாணிக்கம் View Post
பின்நூட்டத்தில் கதாசிரியர் பெயரை குறிப்பிட்டு வாழ்த்து தெரிவிக்கலாமா?
அவ்வாறு தெரிவிக்கலாம் என்றால், அவரது பெயர் ஆங்கிலத்தில் இருக்கும் போது அதை அப்படியே குறிப்பிட்டு வாழ்த்து தெரிவிக்கலாமா?
நீங்கள் தமிழில் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்பதால் எளிதாக கேட்டு விட்டீர்கள், எந்தக்கதைக்கு பின்னூட்டம் எழுதுகிறீர்களோ அந்தக்கதாசிரியர் பெயரை குறிப்பிட்டு தான் சொல்ல வேண்டியதில்லை, கதாசிரியர் என்றும் சொல்லலாம் அவர் பெயர் குறிப்பிட்டும் சொல்லலாம்.

ASTK என்ற பெயரை அப்படியே ஆங்கிலத்தில் பதிந்தும் சொல்லலாம், அல்லது ஏஎஸ்டிகே என்றும் சொல்லலாம்.

பொதுவாக ஒருவர் பெயரில் ஏதும் இல்லை, அந்த பெயரை பெற்றவர் செய்யும் நற்செயல்களில் தான் அந்த பெயர் பெரும் பேறு பெருகிறது, டி.எம்.எஸ், எம்.ஜி.ஆர், எம்,கே.டி என்ற பெயர்கள் பலகாலம் புகழ்பெற்றிருந்திருக்கிறது, அது போலவே ஏஎஸ்டிகே என்ற பெயரும் இங்கே.

இருந்தாலும், இங்கே பயனாளர் பெயரை முறையாக நல்ல பெயரில் வைக்கசொல்வது அதற்காக தான் அநேகர் அவரவர் விருப்பத்திற்கு பெயர் வைத்து கொள்கிறார்கள் அதில் சில சுத்த ஆங்கில பெயர் அல்லது குறியீடாக உள்ளது. பின் எப்படி தளத்திலே ஒருத்தரை ஒருத்தர் குறிப்பிட்டு சொல்வார்கள்.

நைஸ்கைஇண்டியா(ஆங்கிலத்தில்) என்ற பெயருள்ள கதாசிரியரை நைஸ்கை என்று தான் அழைக்கிறார்கள்.

ஒல்வாத்தியார் (ஆங்கிலத்தில்) உள்ளவரை இங்கே வாத்தியார் என்றோ, வாத்தி என்றும் ஒல்வாத்தி என்றும் அழைக்கிறார்கள். இங்கே பெயர் ஒரு சுட்டுப்பெயரே அன்றி ஒரிஜினல் அல்ல. ஒரே பெயரில் இருவர் இருந்தால் (ஒருவர் தமிழிலும், இன்னொருத்தர் ஆங்கிலத்திலும்) தான் சிரமம். ஆனால் ஒரு கதையை ஒருவர் தானே எழுதியிருக்க முடியும்.

அதே போல எஸெம்டிஹபிப்(ஆங்கிலத்தில்) என்று ஒருவர் நிர்வாக உறுப்பினராக இருந்தார் அதற்கு முன் கதாசிரியராக இருந்தார் அவரை ஹபிப் என்றே அழைப்பார்கள். ஒருவர் பெயரை எப்படி வேண்டுமானலும் அழைக்கலாம் அது அவர்களுக்கு கெளரவம் தருவதாக இருக்க வேண்டும். அவர்களை கிண்டல் செய்வதாக இருக்க கூடாது,

முடிந்தவரை தமிழில் சொல்ல முடியுமா என்று பார்க்க வேண்டும் இல்லாவிட்டால் ஆங்கிலத்தில் பதிந்தும் செல்லலாம்.

இந்த வருடம் இன்று தான் கணக்கு துவங்கியது, இதுவரை கணக்கு துவங்கியவர்களில் ராட்சசன் ராட்சசி என (ஆங்கிலத்தில்) பெயர்கள் வைத்தும் இருந்தனர், ஆனால் இம்மாதிரி நபர்கள் நீண்ட காலம் நிலைத்திருக்க பெயர் வைப்பதில்லை, அந்த இரண்டு பெயரும் ஒருவரே வைத்து இரட்டை கணக்கு துவங்கியதால் கணக்கை இழந்தார்.. கடைசியாக ஒருவர் விக்நேஸ்தமிழ்டோட்டல்(ஆங்கிலத்தில்) பெயர் வைத்துள்ளார், இவர்களை எல்லாம் மற்றவர் எப்படி எளிதில் அழைப்பார்கள் என்று தெரியவில்லை. பார்ப்போம் எப்படி அழைக்கிறார்கள் அல்லது அவர்கள் அறிமுகப்படுத்திகொள்கிறார்கள் என்று.
__________________

Last edited by asho; 14-01-24 at 05:46 PM.
Reply With Quote