View Single Post
  #21  
Old 09-07-05, 12:27 AM
மதன் மதன் is offline
User inactive for long time
 
Join Date: 24 Jun 2005
Posts: 25
My Threads  
Unicode என்பது font வகை அல்ல.

புதிய எழுத்துக்களின் செட் என சொல்லலாம். சில வருடங்கள் முன்பு வரை, அனனத்து கம்ப்யூட்டர்களிலும் ASCII முறைதான் பின்பற்றப் பட்டு வந்தது. இதன் படி Font-க்கு 256 எழுத்துக்கள் மட்டுமே இருக்க முடியும் (8 bit, 2^8 = 256). அதனாலேயே ஒவ்வொரு மொழிக்கும் ஒரு Font தேவையிருந்தது. அல்லது சில சமயங்களில் இரண்டு அல்லது மூன்று மொழிகளை மட்டுமே உள்ளடக்க முடிந்தது.

இந்த குறையை நீக்க, ஒரு புதிய எழுத்துக்கள் செட் கொண்டு வர முடிவு செய்த்தார்கள். அதன் படி வந்ததே Unicode, இதில் ஒவ்வொரு Font-ம் 65536 எழுத்துக்களைக் கொண்டது. (16 bit, 2^16 = 65536). இதன் மூலம் உலகத்தில் உள்ள அத்தனை முக்கிய மொழிகளையும் எந்த ஒரு Font-டிலும் அடக்க முடியும்.

தமிழ், தெலுங்கு, அரபி... என எல்லா மொழிகளும் இதில் அடங்கும். இதுவே இப்பொழுது உலகின் standard என்பதால், எல்லா இடங்களிலும் unicode முறையே பின்பற்றப் படுகிறது.

இன்னும் அதிக விபரம் வேண்டுமென்றால், Google-ல் தேடுங்கள், நிறைய கிடைக்கும்.