View Single Post
  #43  
Old 13-03-07, 03:02 PM
tubuk's Avatar
tubuk tubuk is offline
User inactive for long time

Awards Showcase

 
காமலோகம் தளத்தை முறைப்படி லாக் அவுட் செய்யாமல் ப்ரவுசரை நேரடியாக குளோஸ் செய்தாலோ அல்லது எதிர்பாராமல் கணினி ஷட்டவுன் ஆகிவிட்டாலோ, அந்த கணினியில் ப்ரவுசரில் காமலோக தள முகவரியை உள்ளிட்டு என்டர் செய்தால் லாக் இன் செய்யப்பட்ட பக்கம் லாக் இன் செய்யாமலே வந்து விடுகிறது. இது ஒரு தொழில்நுட்ப குறையே. (குறிப்பிட்ட கால அளவில் ஏதும் நடவடிக்கை இல்லையெனில் செஷ்ஷன் காலாவதியாகி தானே கணக்கு லாக்அவுட் செய்யப்படவேண்டும்.)

முதலில் எனது யாகூ பாஸ்வேர்ட் திருடப்பட்டிருக்க வேண்டும், அதன் மூலம் காமலோக விபரமறிந்து என் பெயரில் பதிவுகள் இடப்பட்டன. (யாகூ கா.லோ இரண்டுக்கும் ஒரே பாஸ்வேர்ட்தான் வைத்திருந்தேன்).இதை கவனித்து முதலில் தலைவருக்கு பி.எம் மூலம் தெரிவித்தேன்.

அதன் விபரம்:

//மதிப்பிற்குறிய நிர்வாகி அவர்களுக்கு! நான் கடந்த அக்டோபர் 11 முதல் இன்று (நவம்பர் 11) வரை விடுப்பில் சென்றிருந்தேன். இடைப்பட்ட நாட்களில் காமலோகத்திற்கு வரவில்லை. அக்டோபர் 20 மற்றும் நவம்பர் 7 ஆகியதேதிகளில் நெட்கபேயில் லாக் செய்து விட்டு உடனே லாக் அவுட் செய்துவிட்டேன்.

இன்று லாக் செய்து எனது படைப்புகளையும் பதிவுகளையும் பார்வையிட்டபோது நான் பதியாத சில புதிய பகுதிகள் என் பெயரில் பதிந்திருக்கக்கண்டேன். என் பாஸ்வேர்ட் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து உடன் பாஸ்வேர்டை மாற்றினேன். தங்களுக்கும் தனிமடலிட்டேன்.

தலைவரவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். என் பக்கம் ஏதும் தவறிருப்பின் தயவுசெய்து சுட்டிக்காட்டவும்.//

அதற்கு தலைவரின் பதில்:

//நண்பரே,

தெரியப் படுத்தியதற்கு நன்றி..
அதனால், தான் அனைவரையும் மிகக் கடினமான பாஸ்வேர்ட் வைத்துக் கொள்ள அறிவுறுதுகிறோம். இனிமேலாவது கவனமாக இருங்கள், இந்த செய்தியை மற்றவர்களுக்கும் கூறி, எச்சரிக்கையாக இருக்க கூறுங்கள்.

எந்தெந்த பதிப்புகள் நீங்கள் பதிக்காதவையோ அவற்றின் லிங்கினை எனக்கு தனிமடலில் அனுப்புங்கள், அதன் IP முகவரியை ஆராய்கிறேன்.

நன்றி..//

அதன் பிறகு எனது கா.லோ யாகூ இரண்டு கணக்குகளும் முற்றிலுமாக கைப்பற்றப்பட்டு காமலோகத்துடன் எனது தொடர்பு துண்டிக்கப்படவே காமலோகத்துக்கு தனிமெயில் அனுப்பி காத்திருந்தேன். இரண்டொருநாள் காத்திருந்தும் பதில் எதுவும் வராததால் இதயத் திருடன் என்ற புதிய கணக்கு தொடங்கி இப்பதிவை இட்டேன்.

அதன் சுட்டி:

http://www.kamalogam.com/new/showthread.php?t=28651

அதன் பிறகும் பதில் ஒன்றும் வராததால் இதயத்திருடன் என்ற பெயரிலேயே எனது இரண்டாவது பதிவு இட்டேன்.

அதன் சுட்டி:

http://www.kamalogam.com/new/showthread.php?t=28677

அந்தத்திரிக்கு கைமேல் பலன் கிடைத்தது. தலைவர் என் புதிய ஜிமெயிலுக்கு தொடர்பு கொண்டு விபரங்களை சரிபார்த்து மெயில் ஐடியை அப்டேட் செய்து வெண்கல வாசல் வரை வந்துவிட்ட என்னை தற்காலிகமாக தமிழ்வாசல் வரை அனுமதித்தார். மீண்டும் அனுமதி கிடைத்ததும் மேற்கண்ட அதே திரியில் டுபுக் என்ற பெயரில் எனது கமென்டை பதிவு செய்தேன்.(அதுவரை வில்லியைத்தவிர வேறுயாரும் என்னை ஆதரிக்கவில்லை..எனவே வில்லிக்கு நன்றி தெரிவித்து)


மீண்டும் வெண்கலவாசல் அனுமதி கேட்டு ஒரு திரி தெடங்கினேன். தலைவர் தனி மடலில் நான் ஏற்கெனவே தண்டனையை அனுபவித்து விட்டதால் மேலும் தண்டிக்கும் எண்ணமில்லை என்று பதிலளித்திருந்தார்.


http://www.kamalogam.com/new/showthread.php?t=28731

எல்லா பிரச்சினைகளும் முடிந்ததும் எனது அனுபவங்களை மற்ற உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் இந்தத் திரியில் இட்டிருக்கிறேன்.

அதன் சுட்டி:

http://www.kamalogam.com/new/showthread.php?t=28747


//இந்த இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறிந்தவர் போல் எனக்கு படுகிறது. ஏதோ பிரச்சினை ஏற்பட்டு இருவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர்.//

இதயத்திருடனும் நானே டுபுக்கும் நானே!

//தளத்தில் ஒருவரே இரு கணக்கு மேலாண்மை செய்தது போததென்று இருவர் ஒரு கணக்கை சொந்தம் கொண்டாடுவது பற்றி செய்தி வியப்பாக இருக்கிறது.//

இதை தலைவருக்கு விளக்கி விட்டேன். தவறை உணர்ந்து எனது பதிவிலும் இத்தகவலை இட்டிருந்தேன்.

//காமலோகம் மற்றும் இ-மெயில் இரண்டையுமே திறக்க முடியாவிட்டால் புதிய மெயிலிலிருந்து தளத்துக்கு விளக்கமாக எழுதி பதில் வரும்வரை பொறுமையாக காத்திருக்கவும். காமலோகத்தில் புதிய கணக்குகள் எதுவும் திறக்க வேண்டாம்.//

தலைவர் அவர்கள் அந்த போலி ஆசாமியுடன் தொடர்பு கொண்டதையும் எனது இதயத்திருடன் என்ற கணக்கை பின்னர் நீக்கி விடுவதாகவும் கூறி எனக்கு வாழ்த்து கூறி இப்பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது. இதெல்லாம் நடந்தது நவம்பர் 2006-ல் . நான் எனது பழைய டுபுக் என்ற கணக்கிலேயே தொடர்ந்து இருந்து வருகிறேன்.

பிரச்சினைக்குறிய காலம் : 11 அக்டோபர் முதல் 11 நவம்பர் வரை
புதிய கணக்கு தொடங்கியது 12 நவம்பரில்
மீண்டு(ம்) வந்தது: 14 நவம்பரில்

அதன் பிறகு நான் இதயத்திருடன் என்ற கணக்கை உபயோகிக்கவில்லை. அது இதுவரை நீக்கப்பட்டிருக்கும் என்றே நினைத்திருந்தேன்.இந்த விளக்கங்கள் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். எஞ்சி நிற்பது ஒரு கேள்வி மட்டுமே..! மூன்று மாதங்களுக்குப் பிறகு இதை தூஸி தட்டி எடுக்க வேண்டிய அவசியம் என்ன? விளக்குவீர்களா?