View Single Post
  #30  
Old 14-11-06, 02:25 PM
tubuk's Avatar
tubuk tubuk is offline
User inactive for long time

Awards Showcase

 
பாஸ்வேர்டை பாதுகாப்போம்!

நண்பர்களே!

பாஸ்வேர்ட் திருட்டால் பாதிக்கப்பட்டு தலைவரின் பெருந்தன்மையால் மீண்டவன் என்ற முறையில் சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். இது எனது அனுபவம் மற்றும் தலைவரின் அறிவுறுத்தல்களின் தொகுப்பு.

ஒரு பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்?

1. பன்னிரெண்டு எழுத்துக்களுக்கு குறையாமல்.
2. சுலபமாக யூகிக்க முடியாததாக.
3. எழுத்துக்களும் எண்களும் குறியீடுகளும் கலந்து.

பாஸ்வேர்ட் திருட்டை தவிர்ப்பது எப்படி?

1. தளத்திலிருந்து செல்லும் முன் திறந்துள்ள அணைத்து பக்கங்களையும் மூடவும்.
2. டெஸ்க்டாப்பில் மவுஸை ரைட் கிளிக் செய்து ரிஃப்ரெஷ் செய்யவும்.
3. குறிப்பிட்ட கால இடைவெளியில் பாஸ்வேர்டை மாற்றவும்.

பாஸ்வேர்ட் திருட்டை அறிவது எப்படி?

1. உங்கள் புரொபைலில் உங்கள் அணைத்து பதிவுகளையும் நோக்கவும். நீங்கள் பதியாதவை காணப்படுதல்.
2. நீங்கள் தளத்துக்கு வராத நாட்களில் பதிவுகள் காணப்படுதல்.
3. ஐடி மற்றும் பாஸ்வேர்ட் மறுக்கப்பட்டு தளத்தில் நுழைய முடியாமை.

பாஸ்வேர்ட் திருடர்கள் என்ன செய்வார்கள்?

திருடிய பாஸ்வேர்டை பயண்படுத்தி புரொபைலில் தொடர்பு இ-மெயிலை மாற்றிவிடுவர். (எனது இ-மெயில் பாஸ்வேர்டையே காமலோகத்துக்கும் கொடுத்திருந்தேன். ஆதனால் இ-மெயிலை மாற்றாமல் இ-மெயிலின் பாஸ்வேர்டை மாற்றிவிட்டான். பர்கெட் பாஸ்வேர்ட் வசதி மூலமாக காமலோக பாஸ்வேர்டையும் மாற்றி விட்டான்.)

முதலில் சில நாட்களுக்கு எந்தப்பதிவும் இடமாட்டார்கள். அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு வந்து செல்வார்கள்.

பிறகு உங்கள் பதிவை எடிட் செய்து ஓரிரு வாசகங்களை மாற்றுவர். இதை நீங்கள் கவணிக்காவிடில் உங்கள் பெயரில் பதிவுகள் வெளியாகும்.

உங்கள் பாஸ்வேர்ட் திருடப்பட்டால்....

(பெரும்பாலும் இ-மெயில் பாஸ்வேர்ட் திருட்டுதான் எல்லா திருட்டுக்களுக்கும் அடித்தளம்.)

அவசரப்பட்டு காமலோக பாஸ்வேர்டை மாற்றாமல்.. உங்கள் தொடர்பு இ-மெயிலை திறந்து பாருங்கள்.

திறக்க முடிந்தால்.. முதலில் காமலோக பாஸ்வேர்டையும் அடுத்து இ-மெயில் பாஸ்வேர்டையும் உடனே மாற்றுங்கள்.

திறக்க இயலாவிடின்.. காமலோகத்தில் உங்கள் புரொபைலில் தொடர்பு இ-மெயிலையும் அடுத்து காமலோக பாஸ்வேர்டையும் மாற்றுங்கள்.

நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்துங்கள்.

காமலோகம் மற்றும் இ-மெயில் இரண்டையுமே திறக்க முடியாவிட்டால் புதிய மெயிலிலிருந்து தளத்துக்கு விளக்கமாக எழுதி பதில் வரும்வரை பொறுமையாக காத்திருக்கவும். காமலோகத்தில் புதிய கணக்குகள் எதுவும் திறக்க வேண்டாம்.

பி.கு: உங்கள் இ-மெயில் அக்கவுன்டில் உங்கள் புரொபைல் மற்றும் ரகஸிய கேள்வி ஆகியவற்றை பத்திரப்படுத்தவும். பாஸ்வேர்ட் மாற்றப்பட்ட இ-மெயிலை மீட்க இவை மிக அவசியம்.

புதுமொழி: பாம்பையும் பாஸ்வேர்ட் திருடுறவனையும் ஒன்னா பார்த்தால் முதலில் பாஸ்வேர்ட் திருடுறவனை அடி!..பாம்பை பிறகு அடி!!

நன்றியுடன்
டுபுக்