View Single Post
  #4  
Old 18-05-05, 12:22 AM
vskumaran vskumaran is offline
User inactive for long time
 
விண்டோஸ் 98 - யூனிகோடும் ஓபன் ஆபீசும்

விண்டோஸ் 98 கணினிகளில் தமிழ் யூனிகோடில் எழுதுவது எப்படி? - முகுந்தராஜ்.

தற்போது உருவாகி வரும் வலைத்தளங்களில் பெரும்பாலானவை யூனிகோடையே பயன்படுத்துகின்றன என்பது பலருக்கு தெரிந்திருக்கும். வரும் நாட்களில் யூனிகோட் உருகுறிமுறையை [encoding] மட்டுமே அனைவரும் உபயோகிக்கப் போகிறார்கள். உலகளாவிய அங்கிகாரம் பெற்ற ஒரே தமிழ் உருகுறிமுறையும் யூனிகோட் மட்டுமே.

இப்படிப் பிரபலமாகிக் கொண்டிருக்கும் தமிழ் யூனிகோட் முறையில் தமிழை பயன்படுத்த ஒரு உபயோகிப்பாளருக்கு இருக்கும் ஒரே சிக்கல் என்னவென்றால், விண்டோஸ் 98 கணினிகளில் யூனிகோட் முறையை எளிதாக பயன்படுத்த முடியாது என்பதே. ஆனால் தற்போது பல மென்பொருள் நிறுவனங்கள், இந்தப் பிரச்சனையை தீர்க்க முன்வந்துள்ளன.

அந்த வகையில் முக்கியமானது, சன் மைக்ரோ ஸிஸ்டம்ஸ் [Sun Microsystems] வெளியிட்டுள்ள ஓப்பன் ஆபீஸ் 1.1 [Open Office 1.1] ஆகும்.

ஓப்பன் ஆபீஸ் 1.1 விண்டோஸ் 98 கணினிகளிலேயே தமிழ் யூனிகோட் தமிழ் எழுத்துகளை எழுதும் வசதியை கொண்டுள்ளது. இதைப் பயன் கொள்வது எப்படி?

முதலில் ஓப்பன் ஆபீஸ் என்றால் என்ன என்று பார்ப்போம்.

ஓப்பன் ஆபீஸ், என்பதுமைக்ரோ சாஃப்ட் ஆபீஸ் தொகுப்புக்கு நிகரான, ஏன் அதைவிடவும் சிறப்பாக சில தன்மைகள் கொண்ட மென்பொருள் தொகுப்பு.

இதில் கீழேயுள்ள மென்பொருள்கள் அடங்கியுள்ளன

1. Write - இது மைக்ரோசாஃப்ட்டின் Wordக்கு நிகரான செயலி. ஓப்பன் ஒஃபீஸின் Write கொண்டு நீங்கள் உரை ஆவணங்களை தொகுக்கமுடியும். அந்த ஆவணங்களில் வரைபடங்கள், அட்டவணை, சார்ட்கள் போன்றவைகளையும் சேர்க்கமுடியும். மேலும் தொகுக்கப்பட்ட ஆவணங்களை MS Word , HTML முதலிய பல்வேறு வடிவங்களாக சேமிக்க முடியும். ஏன் pdf கோப்பாகவும் நாம் சேமிக்க முடியும்.

2. Spreasheet - இது மைக்ரோசாஃப்ட்டின் excelக்கு நிகரான செயலி. இதனை கொண்டு நீங்கள் விரிதாள்களை உருவாக்க முடியும். அந்த விரிதாள்களில் உள்ள தரவு[data] பல்வேறுவிதமாக எளிதாக மேலாண்மை செய்யமுடியும். இதனைக் கொண்டு மைக்ரோசாப்ட் Excel கோப்புகளை உருவாக்கவும் முடியும், ஏற்கனவே உருவாக்கிய மைக்ரோசாஃப்ட் எக்சல் விரிதாள்களை திறந்து மாற்றம் செய்யவும் முடியும்.

3. Presentation - இது மைக்ரோசாஃப்ட்டின் powerpoint க்கு நிகரான செயலி. இதனை கொண்டு, படங்கள், உரைகள், சார்ட்கள் மற்றும் ஒலி/ஒளி கோப்புகளைக் கொண்ட தரமான slideshowக்களை உருவாக்க முடியும். மைக்ரோசாஃப்ட் ppt கோப்புகளையும் இதன் மூலம் உருவாக்கவும்/மாற்றம் செய்யவும் முடியும்.

4. Drawing - இதை கொண்டு எளிய மற்றும் சிக்கலான படங்களை வரைந்து, பல்வேறு படகோப்பு வகைகளாக சேமிக்கமுடியும். இந்த மென்பொருள் கொண்டு வரைந்த படங்களில் பட்டியல்கள், சார்ட் முதலியவைகளையும் இணைக்க முடியும். மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பில் இதற்கு இணையாக எந்த மென்பொருளையும் சொல்ல முடியாது.

எல்லாவற்றையுவிட சிறந்த செய்தி என்னவென்றால் இந்த தொகுப்பை முழுக்க முழுக்க இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்பதே! இது GPL லைசன்ஸின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒரு திறவூற்று செயலி [opensource software].

இனி ஓப்பன் ஆபீஸ் தொகுப்பை எவ்வாறு விண்டோ ஸ் 98/ME/2000/XP கணினிகளில் பயன்படுத்தி யூனிகோட் தமிழில் எழுதுவது என்று பார்க்கலாம்.

ஒப்பன் ஆபீஸ் நிறுவதற்கு முன் உங்கள் கணினியில் குறைந்த பட்சம் 250 MB அளவு வட்டுப்பரப்பு [hard disk space] இருக்கிறதா என உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் ஓப்பன் ஓஃபிஸ் தொகுப்பை கொண்டு. யூனிகோட் தமிழெழுத நான்கு முக்கிய மென்பொருள் தொகுப்புகளை நிறுவவேண்டும். அவற்றின் விபரங்கள் இதோ:

1. சன் ஜாவா தொகுப்பு [பதிப்பு: 1.4.1 அல்லது அதற்குமேல்]:

இந்த ஜாவா தொகுப்பு நிறுவவேண்டும் என்ற கட்டாயம் இல்லை, ஆனால் ஓப்பன் ஆபீஸில் உள்ள அனைத்து வசதிகளும் உங்களுக்கு செயல்படவேண்டுமானால், இந்த ஜாவா தொகுப்பை நிறுவிவிட்டு பிறகு ஒப்பன் ஆபீஸ் தொகுப்பை நிறுவ வேண்டும். இதனை www.java.sun.com என்ற தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். இறக்கிய கோப்பை இயக்கினால் போதும். நிறுவுவது மிக எளிது.

2. ஓப்பன் ஆபீஸ் 1.1 தொகுப்பு:

www.openoffice.org என்ற வலைப்பக்கத்திற்கு சென்று, downloads பகுதியில் இருந்து open office 1.1 தொகுப்பை இறக்கிக் கொள்ளலாம். கோப்பின் அளவு: 62.3 MB.

ஓப்பன் ஓஃபீஸ் நிறுவ பின்பற்ற வேண்டிய படிகள்:

1. zip கோப்பை உங்கள் கணினியில் இறக்கியவுடன், நீங்கள் வின் ஜிப் [Winzip] செயலிகொண்டு , சுருக்கப்பட்ட நிலையில் இருக்கும் இந்த zip கோப்பை திறந்து அதிலுள்ள கோப்புகளை தனியாக ஒரு அடைவில்[folder] சேமிக்கவும்.

குறிப்பு: வின்ஜிப் செயலி என்பது , கோப்புகளை குறுக்கவும், மீட்கவும் பயன்படுவது. இது பெரும்பாலான கணினிகளில் ஏற்கனவே இருக்கும். zip கோப்பை doubleclick செய்தாலே, வின்ஜிப் கொண்டு திறந்துவிடும். அப்படி ஒருவேளை உங்கள் கணினியில் வின்ஜிப் செயலி இல்லை என்றால் அதையும் இலவசமாக இறக்கிக்கொள்ளலாம்:

2. அப்படி தனியாக சேமித்த கோப்புகளுள் setup.exe என்ற ஒரு கோப்பும் இருக்கும். அதனை double click செய்யவும். நிறுவல் உடனே தொடங்கிவிடும். கேட்கப்படும் கேள்விகளை படித்துப் பார்த்து அதன்படி பொத்தான்களை தட்டினாலே நிறுவல் வெற்றிகரமாக முடிந்துவிடும்.

நிறுவும்போது முக்கியமாக 2 விஷயங்களை குறிப்பிடலாம்.

1 . மென்பொருள் லைசன்ஸ் ஆவணத்தை முழுதுமாக படித்தபிறகே , "I accept the terms of the agreement" என்ற பெட்டியை டிக் செய்து நிறுவலை தொடரமுடியும்.

2. select the installation type, என்ற பகுதியில், கொடாநிலையாக[Default ஆக]விட்டுவிடலாம்.

3. ஜாவா செட்டப் என்ற பகுதியில், ஜாவா தொகுப்பு உங்கள் கணினியில் பதிந்துள்ள பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே நீங்கள் ஜாவா தொகுப்பை நிறுவியிருந்தால் பெரும்பாலும், இதுகூடத் தானாகவே தேர்தெடுக்கப்பட்டிருக்கும். ஜாவா தொகுப்பை நிறுவாதவர்கள் இந்த பகுதியில் "Do not use java with Openoffice.org 1.1.0" என்கிற விருப்பத்தை தேர்தெடுத்து நிறுவலைத் தொடரலாம்.

இதற்கு மேல் எந்த கேள்வியையும் கேட்காமல் ஓப்பன் ஓஃபீஸ் நிறுவல் முடிந்துவிடும்.

இப்போது நீங்கள் ஓப்பன் ஆபிஸ் தொகுப்பில் யுனிகோட் தமிழ் எழுத ஒரு மென்பொருள் வேண்டும். அதற்கு எகலப்பை என்ற செயலியை பயன்படுத்தலாம்.

3. எகலப்பை மென்பொருள்:

http://www.ezilnila.com/downloads/ekalappai20b_anjal.exe என்ற வலைச்சுட்டியிலிருந்து இ-கலப்பை மென்பொருளை இறக்கியவுடன், ekalappai20b_anjal.exe கோப்பை doubleclick செய்தால் போதும், எகலப்பை சுலபமாக உங்கள் கணினியில் நிறுவப்பட்டுவிடும். இந்த செயலி கொண்டு டிஸ்கி, யூனிகோட் முறைகளில் தமிழ் எழுதலாம்.

குறிப்பு: எகலப்பை செயலி தனியார்களுக்கு முற்றிலும் இலவசம். [அரசு மற்றும் வணிகப் பயன்பாடுகளுக்கு tavultesoft நிறுவனத்திடம் அதற்கான லைசன்ஸ் பெற்றுப் பயன்படுத்த வேண்டும்] இப்போது உங்கள் கணினி யூனிகோட் எழுத தயாராகிவிட்டது!

இனி ஓப்பன் ஆபீஸ் உரை ஆவணத்தினை திறந்து, யூனிகோட் எழுத்துருக்களில் எதாவது ஒன்றை [உதாரணத்துக்கு TSCu_Paranar] தேர்வு செய்யுங்கள். எகலப்பையில் தற்போது unicodetamil கீபோர்டை தேர்வு செய்து, ஓப்பன் ஆபீஸ் ஆவணத்தில் தட்டச்சு செய்து பாருங்கள். உங்களால் இப்போது யூனிகோட் தமிழில் எழுத முடியும்!

மேலும் உங்களுக்கு வரும் யூனிகோட் மடல்களைப் படிக்க, மடலில் உள்ள தகவலை நகலெடுத்து, ஓப்பன் ஒஃபீஸ் ஆவணத்தில் ஒட்டிவிடுங்கள். பிறகு அனைத்தையும் தேர்வு செய்து, எழுத்துருவை TSCu_Paranar[அல்லது வேறு யூனிகோட் எழுத்துரு] என்று தேர்வு செய்யுங்கள், யூனிகோட் தமிழ் எழுத்துக்கள் உங்களுக்குத் தெரிவதைப் பார்க்கலாம்!!!

இது போல் ஓப்பன் ஆபீஸ் தொகுப்பைக் கொண்டு பலவகையான தமிழ் யூனிகோட் ஆவணங்களை விண்டோஸ் 98 கணினிகளிலிருந்து உருவாக்க முடியும்.
Reply With Quote