View Single Post
  #1  
Old 05-01-10, 10:03 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
வாசகர் சவால் போட்டி 2010 மாற்றங்கள்

நண்பர்களே,

இந்த புதிய வருடத்தில் நமது தளத்தில் மிகச் சிறப்பாக பீடு நடை போட்டுக் கொண்டிருக்கும் வாசகர் சவால் பகுதியில் ஒரு சில புதிய மாற்றங்கள் அவசியம் என்று நினைக்கிறோம். அவை பின்வருமாறு:

[01] வாசகர் சவால் போட்டி நடத்தும் உறுப்பினர்கள், வருடத்திற்கு ஒரு முறை வருடாந்திர சிறப்பு வாசகர் சவால் போட்டி நடத்த அனுமதிக்கப் படுகிறார்கள். இதன் அதிக பட்ச பரிசுத் ஐகேஷ் தொகை 3000-க்கு பதில் 5000 என்று வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள்.

[02] 5000 ஐகேஷ் கொடுக்கும் சிறப்பு சவால்கள் தரமானதாக உள்ளவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு பக்கத்திற்கு குறைவான சிறிய பங்களிப்புகளுக்கு இத்தகைய பரிசுகள் செல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

[03] ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கூட்டணியாக நடத்தும் சவால் போட்டிகளில் அதிக பட்சம் 3 பேர்கள் கொண்ட கூட்டணியே அனுமதிக்கப் படும்.

[04] வருட சிறப்பு வாசகர் சவால் கூட்டணியில் உள்ள ஒருவர், அதே வருடத்தில் இன்னொரு கூட்டணியுடனோ அல்லது தனியாகவோ இன்னொரு வருட சிறப்பு சவால் நடத்த அனுமதியில்லை.

[05] வாசகர் சவால் போட்டியில் வெல்பவர்களுக்கு பரிசுகள் வழங்கும் போது, அதன் முதல் மூன்று பரிசுகளையும் போட்டியை நடத்துபவர்கள் தான் சொந்தமாக கொடுக்க வேண்டும். மற்ற பரிசுகளை மட்டுமே இதர உறுப்பினர்கள் உபசரணையாக (ஸ்பான்சர்) கொடுக்க முடியும்.

[06] சவால் போட்டி அறிவிப்புகளினுள்ளே, அறிவிப்புக்கு சம்மந்தமுள்ள காமமில்லா அசைபடங்கள் (வீடியோ தளங்களில் பதிவேற்றம் செய்து) பதிக்க அனுமதிக்கப் படுகின்றன. ஆனால், அவை பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள வீடியோ தளத்தில், அந்த அசைபடத்திற்கு கருத்துக்கள் பதிப்பதை தடை செய்திருக்க வேண்டும்.

[07] ஒரு முறை அறிவிக்கை விடப் பட்டு முடிந்த வாசகர் சவால் போட்டியை போதுமான அளவு வரவேற்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், அடுத்த ஒரு வருடத்திற்கு முன்பு அதே சவாலை மீண்டும் அறிவிக்க அனுமதியில்லை.

[08] ஒருவர் அல்லது ஒருகுழு தங்கள் வாசகர் சவால் முடித்த பின் சற்று இடைவெளி விடுதல் சிறந்தது. அதனால், ஒரு வாசகர் சவால் முடித்த பின் அவர் அல்லது அந்த குழு மீண்டும் 2 மாதங்களுக்கு அடுத்த சவால் விடக் கூடாது. இதன் மூலம் மற்றவர்களுக்கும் சவால் விட வாய்ப்பு கிடைக்கும்.

[09] ஒரே நேரத்தில் பல சவால்கள் வருவதும், ஒன்றுடன் ஒன்று மோதுவதையும் தவிர்க்க, ஒரு சவால் நடந்து கொண்டிருக்கும் போது இன்னொரு சவால் துவக்க அனுமதியில்லை.

[10] ஒரு சவால் நடத்தி முடிக்க அதிக பட்சம் 45 நாட்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு வேளை தவிர்க்க முடியாத காரணங்களுக்காக நீட்டிக்க வேண்டி வந்தால்,நிர்வாகியை தொடர்பு கொண்டு அதிக பட்சம் 5 நாட்கள் நீட்டிப்பு கேட்கலாம்.

[11] எந்த ஒரு இலக்கும், கருவும் (concept, theme) இல்லாமல் பொதுவாக சிறுகதைகளுக்கு சவால் விடுவதைத் தவிர்க்கவும்.

[12] உங்கள் சவால்களை அறிவிக்குமுன் தள மேற்பார்வையாளர்கள் அல்லது நிர்வாகியின் ஆலோசனையை பெற்று துவங்கவும்.

இந்த திருத்தங்கள் அனைத்தும் விரைவில் வாசகர் சவால் விதிமுறையுடன் சேர்க்கப் படும்.

நன்றி..!!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 09-02-10 at 05:49 PM.
Reply With Quote