View Single Post
  #16  
Old 06-01-06, 03:49 PM
ilangomat's Avatar
ilangomat ilangomat is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2005
Location: நுங்கம்பாக்கம்,
Posts: 388
My Threads  
நாம் பலமுறை தவறுகள் தெரிந்தும் அதை பெரிது படுத்தாமல் பாராட்டோடு நிறுத்திக் கொள்கிறோம்.

அப்படி இல்லாமல், நாம் எல்லோரும் தவறுகளை உடனுக்குடன் குறிப்பிட்டு வந்தால், எழுதியவர்களுக்கு திருத்த வாகாக இருக்கும். எழுதியவர்கள், அப் பிழைகளை பற்றி அறியும்போது, உடனே அதை திருத்த வேண்டும். இவ்வாறு பிழைகளை குறிப்பிடுவதை வித்தியாசமாக நினைக்கக் கூடாது.

உதாரணமாக, இங்கு முந்தைய பதிவுகளில் பிழைகள் (தருகிருகிறார்கள் என்று இருக்கிறது. தருகிறார்கள் என்றிருக்க வேண்டும். (ஆதி அவர்கள் பதிவு) என்னக்கு = எனக்கு ramv. பரிந்துறை = பரிந்துரை arasan. பெரும்பார்மையோர் = பெரும்பான்மையோர் arasan. வரவேர்க்கிறேன் = வரவேற்கிறேன். arasan. ) முதலிய பிழைகள் எனக்கு தோன்றுகிறது.

விமர்சன பதிவுகளை விட கதைப் பதிவுகளுக்கு பிழையில்லாமல் இருப்பது முக்கியம் என்று நினைக்கிறேன். பேச்சுத்தமிழில் எழுதுவது வேறு. அது பிழையில்லை. அது கதைக்கு ஒரு சுவை ஊட்டுவதை மறுக்க முடியாது. ஆனால், பிழையாக எழுதினால் கதையை ரசிக்கமுடியவில்லை.

நன்றி
Reply With Quote