View Single Post
  #26  
Old 07-01-06, 05:55 PM
Kanchanadasan's Avatar
Kanchanadasan Kanchanadasan is offline
நிர்வாக ஆலோசகர்

Awards Showcase

 
Join Date: 18 Oct 2003
Location: காஞ்சனை
Posts: 5,004
iCash Credits: 366,666
My Threads  
உங்களின் கதைகளை முழுதும் படித்து எழுத்துப் பிழைகள் களைந்தவன் என்ற உரிமையில் சில பரிந்துரைகள்.

பத்தி பிரிக்க சிலர் அதிகமாக space பயன்படுத்துகிறீர்கள். ஆனால் இதனால் பிரயோசனம் இல்லை. ஏனெனில் காமலோகதளத்தினை நிர்வகிக்கும் செயலி இந்த spaceஐ பத்தி பிரிக்கப் பயன்படுத்துவதில்லை. சும்மா enter அடித்தாலே போதுமானது.

சிலர் கதை முழுதும் அதிகமாக கமா(,) பயன்படுத்துகிறீர்கள். தேவையில்லாத இடங்களில் பயன்படுத்தும் கமாக்கள் படிப்பவரை குழப்பி விடும்.

'ன்' மற்றும் 'ண்' குழப்பம் உள்ளது. பொதுவாக கதை எழுதி முடித்த பின் ஒரு முறை முழுதும் முடி முதல் அடி வரை நிதானமாய்ப் படித்துப் பார்த்தாலே பல பிழைகளை கண்டறிந்து திருத்த முடியும்.

Microsoft wordஐ பயன்படுத்தி இ-கலப்பை கொண்டு தமிழ் தட்டச்சு செய்து பின் வெட்டி ஒட்டி நம் தளத்தில் பதியும் போது, சில எழுத்துக்கள் (எ.கா: 'ஆ') காணாமல் போவது உண்டு. இதே பிரச்சனை முரசுவிலும் வர வாய்ப்புள்ளது. எனவே எனது பரிந்துரை இ-கலப்பையும் மற்றும் Wordpadம்.

எது பதியலாம் எது பதியக் கூடாது என்பதை சும்மா வெறும் விதிமுறைகளை படித்துப் பார்த்து மாத்திரமே முடிவு செய்ய முடியாது. இந்த விதிமுறைகள் எல்லாமே ஒரு வழி காட்டுதல்கள் தான். எதையும் பதிக்கும் முன், ஒரு தடவை உங்கள் மனதைக் கேட்டுப் பாருங்கள் - "யாருக்கேனும் இது சங்கடம் விளைவிக்குமா? இல்லை ஏதேனும் சர்ச்சைகள் எழுமா" என்றோ அல்லது சில வேளைகளில் உஅங்களுக்கே தோன்றும் "அடச்சே. நாம் செய்வது அபத்தமாய் இல்லை?" என்றோ. விடையை உங்களின் பண்பட்ட மனதே பளிச்சென்று சொல்லி விடும். இதில் சந்தேகமா? பூட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு தலைப்பையும் படியுங்கள். ஏதேனும் ஒரு இடத்தில் பதிந்தவரே ஒத்துக் கொண்டிருப்பார் "இது சரிப்படுமான்னு அப்பவே நினைச்சேன்" என்று.

அதே போல் அட்மின் டீம் நண்பர்கள் ஏதும் குறை சொன்னாலோ இல்லை உங்கள் பதிப்பினை பூட்டினாலோ முதலில் கோபம் வருவது இயற்கை தான். இது எப்படி என்றால் காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல தவமிருந்து வரமாகப் பெற்ற பிள்ளையை குறை சொல்லும் பக்கத்து வீட்டுக்கரனை எதிரியாய்ப் பாவிக்கும் ஒரு தகப்பனின் அல்லது தாயின் கோபமே. ஆனால் ஒரு நிமிடம் நிதானமாய் யோசியுங்கள். உங்களுக்கே புலப்படும். நாங்கள் தவறு செய்தாலும் அன்பாய் நட்பாய் சுட்டிக் காட்டுங்கள்.

"முக நக நட்பது நட்பன்று." "இடிப்பாரே இல்லா ஏமரா மன்னன்"

எனது இந்தப் பரிந்துரைகளை தாங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்.
__________________

நன்றி.
நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய்
காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்...

காஞ்சனாதாசன்.
Reply With Quote