View Single Post
  #2  
Old 29-04-18, 12:12 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,265
iCash Credits: 673,222
My Threads  
உங்கள் வருத்தம் புரிகிறது, அதே நேரத்தில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள். இங்கே ஆண்/பெண் என்று உறுப்பினர் சேர்க்கை போது பதிவதை அப்படியே நிர்வாகம் எடுத்துக்கொள்கிறது, அது அவர்கள் விருப்பம். அதே சமயத்தில் பெண் உறுப்பினர்கள் நலனில் அக்கறையும் எடுத்துக்கொள்கிறது, உங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் நீங்கள் தனிமடலில் தலைமை நிர்வாகி அவர்களை தொடர்பு கொண்டால் பிரச்சினை தீர்க்கப்படும்.

உங்களை ஒருவர் கவனிக்கிறார், கவனம் பெற விழைகிறார், தொடர்பு கொள்ள நினைக்கிறார் என்று உணர்ந்தால் அவருடன் மேற்கொண்டு கீழே உள்ள நடவடிக்கைகள் மூலம் அதனை சரி செய்யலாம்.

1) கண்டு கொள்ளாமல் சும்மா இருப்பது

2) தொடர்ந்து தனிமடல்/தனிப்பட்ட வார்த்தைகள் பொதுவிலே வந்தால் நிர்வாக உறுப்பினருக்கு தனிமடல் தந்து சுட்டிக்காட்டுதல்

3)சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு ஒரு வரியில், உன் நடவடிக்கை பிடிக்கவில்லை என்னை திரும்ப கவனம் பெற வைக்காதீர்கள் என்று பதில் தருவது, அப்படியும் தொல்லை தந்தால் முதலில் சொன்னபடி தலைமை நிர்வாகியிடம் புகார் தனிமடலில் செய்வதுடன் அவர் கதை முடிந்து விடும்.


நம் தளம் ஒரு பொது இடத்திற்கு(பூங்கா) சமமானது, இங்கே நல்லவரும் வருவார், கெட்டவரும் வருவார். நாம் நடந்து கொள்வதில் இருந்து நாம் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

நீங்கள் ஒரு பூங்காவில் உலா வரும் போது, பின் தொடர்ந்து வரும் ஒருவர் விசில் அடித்தால் அல்லது ஏய் என்று அழைத்தால் நாம் திரும்ப பதில் நடவடிக்கை செய்வதில் இருந்து அவரை தவிர்க்கலாம், நாம் சட்டை செய்யவில்லை என்னும் போது அவர் அத்து மீறினால் நாம் அவர் சட்டையை பிடித்து இரண்டு அறை விடலாம் அல்லது செருப்பை எடுத்து அடிக்கலாம். ஆனால் விசில் அடிப்பதே தவறு என்றோ அல்லது பூங்கா நிர்வாகத்தையோ குறை சொல்ல முடியாது.

நான் நிர்வாக உறுப்பினராக இருந்த காலத்தில் பெண் பெயரில் உள்ள உறுப்பினர்கள் ஒரு சிலருக்கு சிலர் தனிமடல் கொடுத்ததை அந்த பெண் உறுப்பினர்கள் யாரிடமும் சொல்லாமலே ஒதுங்கி(தளத்தை விட்டே) இருந்திருக்கிறார்கள். பின்னர் சில நாள் கழித்து ஏதோச்சையாக என்னிடம் தெரிவித்த பின் உடனடியாக அந்த உறுப்பினர்கள் விளக்கம் கோரப்பட்டு தடை செய்யப்பட்டார்கள்.

நாமே முடிவெடுப்பது சில விசயங்கள் சரியாக இருக்கும், ஒரு அமைப்பில் இருக்கும் போது அமைப்பை நிர்வாகிப்பவர்களிடம் தெரிவித்து பின் பதில் கண்டு முடிவெடுப்பது தான் சிறந்தது.

இங்கே உங்கள் பிரச்சினையில் நீங்கள் வெளிப்படையா ஜெயா6 என்ற உறுப்பினர் பெயர் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர் ஏதும் மரியாதைக்குறைவாக எழுதியாக தெரியவில்லை, அவர் நோய்வாய்ப்பட்டு இறுதிக்காலத்தை நாட்களில் மீதம் வைத்திருக்கும் ஒரு உறுப்பினர். அவர் தவறான அர்த்தத்தில் எழுதியாக தெரியவில்லை.

பெண் உறுப்பினர் ஒருவர் தனிமடல் தந்தவரை நிர்வாகத்திற்கு புகார் அல்லது இக்நோர் லிஸ்ட் செய்து விடுதல் நலம். மற்றபடி தளத்திலே பொதுவிலே பதிப்பு சரியில்லை என்றால் நிர்வாக உறுப்பினருக்கு தனிமடல் தந்தால் பதிவு திருத்தப்படக்கூடும்.

எல்லோருக்கும் உணர்வுகள் பொறுத்துக்கொள்ளும் அளவு மாறுபடும் எனவே, ஒருவர் சிரமத்தை மற்றவர் உணர்ந்து கொள்ளுதல் எந்த அளவிற்கு என்று தெரியாது, ஆனால் பாதிப்படைந்த ஒருவர் அதனை குறிப்பிடும் போது மற்றவர் அறிந்து கொள்ள முடியும்.
__________________
Reply With Quote