View Single Post
  #5  
Old 06-08-22, 06:10 AM
Suryatamil Suryatamil is offline
User inactive for long time
 
Join Date: 14 Jan 2022
Location: India
Posts: 247
My Threads  
அவசியமான திரி,
சமீபத்தில் அஷோ எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஒப்ப சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட திரி இது.

நண்பர் காதலன் சொல்லுவது போல ஒரு கதை எழுத பல நிமிடங்கள் செலவாகும். ஆனால் அதைப் படிக்கவோ கருத்து சொல்லவே சில நிமிடங்கள்தான். அந்த சில நிமிடங்களுக்காகத்தானே பலமணிநேரம் செலவு செய்கிறோம்? அந்த சில நிமிட நேர சுகம் பெற்றுக்கொண்டு நாம் என்ன பணமா கேட்கிறோம்? ஒரு சில வரிகள் தானே (அட்லீஸ்ட்)
இன்றைய ஃபேஸ்புக் யுகத்தில் எல்லாரிடமும் அலைபேசியும் தமிழில் அச்சு செய்ய வசதியும், (கூகிள் text to speech வசதியெல்லாம் செய்து தருகிறது) இருந்தும் அதைச் செய்ய ஒரு முடை.

கதாசிரியர்கள் முடைப்பட்டால் கதை எப்படி வரும்?

இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதி கேட்டு ஒருவர் திரி தொடங்கி மன்னித்துவிடுங்கள் இனிமேல் தொடர்ந்து பங்களிப்பேன் என்று சொன்னார். சொன்ன தேதியிலிருந்து இன்று வரை தினமும் பத்து திரிகளுக்கு எழுதியிருந்தாலாவது அடுத்த வாசலுக்குச் சென்றிருக்க முடியும் அல்லது அனுமதி கோருவதில் ஒரு நியாயமும் இருக்கும். ஆனால் அவர் எழுதியது மொத்தம் மூன்று பதிவுகள். அதில் இரண்டு அனுமதி கேட்கும் பதிவு. இன்னும் ஒன்று இரண்டே வார்த்தை உள்ள ஒரு வரி.

இப்படி இருந்தால் நிர்வாகிகளுக்குக் கோபம் வருமா வராதா?

ஆகவே விதிகளுக்குக் கட்டுப்பட்டு கதைகளைப் படியுங்கள். குறைந்த பட்சம் நல்ல விமர்சனங்களைக் கொடுங்கள், அதிகபட்சம் வாக்குகளைச் செலுத்துங்கள். போலவே வெறும் வாக்கோடு நின்றுவிடாதீர்கள். அதுவும் டேஞ்சர்தான். நிறைய எழுதுங்கள்.

பாராட்டுகள் காதலன். அவசியமான திரி இது.
இதைக் கடந்து செல்லும் வாக்களிக்காதவர்கள் நிச்சயம் யோசிப்பார்கள்.
Reply With Quote