வெற்றிப் பெற்ற கெமரூன் அவர்களுக்கும், கலந்துக் கொண்டு ஏனைய இடங்களை பிடித்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
வாக்குகள் ஏன் குறைகின்றன என்ற காரணங்களை ஆராய்வது அவசியம் என்றாலும், அதன் உண்மையான காரணங்களை வெளி சொன்னால் அது படைப்பாளிகளை டிஸ்கேரேஜ் செய்துபோலவும், வாக்கிளிக்காதவர்களுக்கு ஒரு நொண்டி சாக்கு கிடைத்ததுப் போலவும் ஆகிவிடும், சோ, இதை சொல்வது ஆரோக்கியமானதாக இருக்காது.
குறைந்த வாக்குகளை காணும் படைப்பாளியின் உணர்வுகளை புரிந்துக் கொள்ள முடிகிறது. சுறுசுறுப்பான பல உருப்பினர்கள் ஒருவித சோர்வு காரணமாக காணமற் போயிருக்கிறார்கள், அவர்களும் விரைவில் வருவார்கள் அதே உற்சாகத்துடன் உங்களின் ஆதங்களுக்கு விடையளிப்பார்கள்.
நன்றி.
|