View Single Post
  #1  
Old 18-02-07, 11:06 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
2007 மார்ச் முதல் அனுமதிகள் மாற்றம்

எனதருமை காமலோக நண்பர்களே.. நண்பிகளே...!

2007 மார்ச் 4-ம் தேதி 6வது பிறந்த நாள் கொண்டாடும் காமலோகத்தில் பல மாற்றங்கள் வர உள்ளன. நமது லட்சியங்கள் நீண்டு கொண்டே போகும் போது, நாம் தொட வேண்டிய மைல் கற்களையும் தூரமாக்கி வைக்க வேண்டும். அது போல இந்த வருட லட்சியம், தரமான கருத்துக்களை அடைவதாக வைத்துள்ளேன்.

தரமான கதைகளை படைப்பதில் நமது படைப்பாளிகள் குறைந்தவர்கள் அல்ல என்று நிரூபித்துள்ளார்கள், இனி தரமான கருத்தில் கவனம் செலுத்த இருப்பதால், காமலோக பகுதிகளின் அனுமதிக்கு வேண்டிய கருத்துக்களின் எண்ணிக்கை கூட்டப் பட்டுள்ளது.

இது புதியவர்கள் பலருக்கு கடினமாக இருக்கலாம். ஆனால், முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை தோழர்களே.. முயற்சி செய்யுங்கள் நிச்சயம் உங்களுக்கு வழி காட்ட நாங்கள் இருக்கிறோம். அத்துடன் நமது காமலோக படைப்பாளிகளுக்கு இது ஒரு புதிய புத்துணர்வை ஊட்டக் கூடியதாகவும் அமையும்.

அனுமதிக்கான தமிழ் பதிப்புகள்

தமிழ் வாசல்-க்கு = 20 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 10 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* கதைகள் படைத்திருந்தால் 10 தமிழ் பதிப்புகள் போதுமானது.
(கவனிக்க! கதைகளின் சராசரி அளவு: 50 வரிகள்)

காமக் கதை வாசல் = 40 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 20 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* 2 கதைகள் படைத்திருந்தால் 20 தமிழ் பதிப்புகள் போதுமானது.
(கதைகள் 50 வரிக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்)

தீ.தகாத உறவு வாசல் = 60 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 30 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* 2 கதைகள் படைத்திருந்தால் 30 தமிழ் பதிப்புகள் போதுமானது.
(கதைகள் 50 வரிக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்)

வெண்கல வாசல் = 300 தமிழ் பதிப்புகள்
--* 3 கதைகளுடன் தரமான பங்களிப்பு உள்ளவர்களுக்கு 200 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 150 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* 5 கதைகள் படைத்தவர்கள் (50 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்).

வெள்ளி வாசல் = 1000 தமிழ் பதிப்புகள்
--* 5 கதைகளுடன் தரமான பங்களிப்பு உள்ளவர்களுக்கு 800 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 500 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* 10 கதைகள் படைத்தவர்கள் (200 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்).

தங்க வாசல் = 3000 தமிழ் பதிப்புகள்
--* 10 கதைகளுடன் தரமான பங்களிப்பு உள்ளவர்களுக்கு 2000 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 1500 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* 20 கதைகள் படைத்தவர்கள் (500 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்).

வெள்ளி வாசல் வரை எளிதில் முன்னேறி விடலாம், ஆனால் தங்க வாசல் அனுமதி உங்கள் பதிவுகளை தீவிரமாய் ஆராய்ந்த பின்னரே, பங்களிப்பின் அடிப்படையில் கொடுக்கப் படுகிறது. உபயோகமான திரிகள் துவக்காதவர்களின் தங்க வாசல் அனுமதி தாமதப் படுத்தப் படும்.

நான் பழைய உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டுள்ளது, எங்களுடன் Nov. 2000 - Mar. 2002 வருடங்களில் நமது குழுக்களில் பங்கு கொண்டிருந்தவர்களையும், பிறகு March 2002 *- Dec. 2004 வருடங்களில் பழைய திஸ்கி மன்றத்தில் இருந்தவர்களையும் குறிக்கும்.

சிலர் மொத்தமே 5 பதிப்புகள் செய்து விட்டு அதில் 3 கதைகள் பதித்து விட்டதால் வெண்கல வாசல் அனுமதி வேண்டும் என்று விண்ணப்பித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கதைகள் பதிப்பதோடு மற்றவர்கள் கதையையும் படித்து கருத்துக்கள் கூற வேண்டும் என்பதற்காக, வெண்கல வாசல் முதல் கதைகள் பதிப்பவர்களும் குறைந்த பட்சம் கருத்துக்கள் கூறயிருக்க வேண்டும் என்று பதிப்புகள் எண்ணிக்கை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

வெண்கல, வெள்ளி, தங்க வாசல் அனுமதி பெற்றவர்கள் வருடம் தோறும் குறைந்தபட்சம் 10 தமிழ் பதிப்புகளாவது செய்தல் வேண்டும், அல்லது அவர்கள் அனுமதிகள் குறைக்கப் படும். ஏதாவது தவிர்க்க சூழ்நிலை காரணமாக பதிக்க முடியாமல் போனால், அந்த வருடம் முடிவதற்கு முன் நிர்வாகியிடம் தெரிவித்தால், பரிசீலனை செய்யப் படும்.

முன்பு பங்களித்தவர்கள் தொடர்ந்து 4 மாதங்கள் வராமல் இருந்தால் அவர்கள் கணக்கு "செயல்படா நிலை"-யில் (Inactive Mode) வைக்கப் படும். அவர்கள் நிர்வாகியிடம் தெரிவித்து அனுமதி பெற்று சென்றிருந்தால், அதே அனுமதி திருப்பி வழங்கப் படும். அல்லது ஒரு நிலை குறைவாக அனுமதி திருப்பி கொடுக்கப் படும்.

இந்த திருத்தங்கள் அனைத்தும், நமது படைப்பாளிகளை உற்சாகப் படுத்துவதற்காகவே செய்யப் படுகின்றன. அதை உணர்ந்து பெயரளவில் எண்ணிக்கைக்காக பதிக்காமல், மனம் திறந்து உங்கள் கருத்துக்களை பதிக்கவும்.

சிறப்பான, தரமான கருத்துக்களுக்கு நிர்வாக உறுப்பினர்கள், சீனியர் உறுப்பினர்கள் உங்களுக்கு காமலோக வெகுமதி பணமான "ஐகேஷ்" அளிப்பார்கள்.

இவை அனைத்தும் மார்ச் 4-ம் தேதி முதல் அமுலுக்கு வருகின்றன.

உங்கள் ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி..

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 24-06-10 at 11:36 AM.