என் இரண்டு லட்சம் இ.பணங்கள் ( 7-11-2020 )
லோக நண்பர்கள் அனைவருக்கும் முன் கூட்டிய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
நான் லோகத்தில் இணைந்து இரண்டு ஆண்டுகள் ஆகப் போகிறது. இன்று ( 7- 11-2020 ) எனது இ.பணங்களின் மதிப்பு இரண்டு லட்சத்தை ( 2,00,000 ) தொட்டு விட்டது. இந்த இ.பணங்களை பரிசுகள் வாயிலாகவும் பின்னூட்டங்கள் வாயிலாகவும் எனக்கு வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த லோகத்தைப் பொருத்த வரை இது ஒரு சாதனையா என்று எனக்குத் தெரியவில்லை. எனினும் வளர்ந்து வரும் இளம் உறுப்பினர்களுக்கு இந்த சாதனை ஒரு உந்துதலைத் தரும் என்று நான் நம்புகிறேன். அதனால் இந்த திரி அவர்களுக்கு உதவும் என்று பதிவிடுகிறேன். லோகத்தில் இந்த சாதனையை இதற்கு முன் நிகழ்த்திய ஜாம்பவான் படைப்பாளர்களுடன் என்னை இணைத்துக் கொள்வதை நான் பெருமையாக கருதுகிறேன். இப்படி ஒரு வாய்ப்பை நல்கிய நிர்வாகத்தினருக்கும் எனது நன்றிகள்!
தொடர்ந்து என்னால் இயன்ற அளவு படைப்புகளை வழங்குவேன். நண்பர்கள் தொடர்ந்து படித்து தங்கள் மேலான ஆதரவை தாருங்கள்!
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!
|