நான் லோகத்தில் சேர்ந்த காலகட்டத்தில் இருந்தே ஒன்றாக பயனித்து எப்போதும் தளம் வரும் நண்பர், சளைக்காமல் கதை மற்றும் கருத்துக்கள் தந்து தளத்தில் புது ரத்தம் பாய்ச்சி வரும் பண்பாளரின் 11000 பதிப்புகளை பாராட்டும் இந்த திரியில் நானும் பதிந்ததை பெருமையாக கருதுகிறேன்.
அநேக நேரம் நான் நம்பும் நிர்வாக சவால் பங்கேற்பாளர் இவர் ஒருவரே, நிர்வாக சவால் பங்கேற்பவர்கள் கணக்கெடுக்கும் போது கூட இவரை முதல் நபராக நினைத்து இன்னும் சிலராவது பங்கேற்க வேண்டுமே என்று நினைப்பேன். இவர் தான் சமயத்தில் ஆரம்பித்து வைப்பார், பின்னர் மற்ற நண்பர்கள் மள மளவென்று வரிசையாக போட்டிக்கு கதைகள் தருவார்கள். வெற்றி தோல்வி கருதாதது பங்களிக்கும் பங்காளி. இன்னும் பல பதிப்புகள் பதிக்க வாழ்த்துக்கள்.
ஆரம்பத்தில் என் ஆத்ம நண்பர் ஆதிக்கும் இவர் ஐடிக்கும் ஒரே (நடிகர்) அவதார் என்பதால் குழம்பியிருக்கிறேன். ஆனால் அவருடையது சாந்தமாகவும் இவர் அவதார் ஆக்சன் முகமாகவும் இருக்கும். ஏறத்தாழ இவர் கதைகள் அனைத்தும் நான் வாசித்திருக்கிறேன், ஆனால் அனைத்திலும் கருத்து பதிவுகள் பதிந்ததில்லை. இவர் கதையை படித்தவுடன் மூடாகி விடும் பின் எங்கே