View Single Post
  #1  
Old 05-08-22, 03:55 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Oct 2012
Location: குமரி கண்டம்
Posts: 3,308
iCash Credits: 141,094
My Threads  
நண்பர்களே... அனைவரும் வாக்களிப்போம்... வாருங்கள் நண்பர்களே!!!

நண்பர்களே... அனைவரும் வாக்களிப்போம்... வாருங்கள் நண்பர்களே!!!


ஒரு நாட்டை எடுத்துக் கொண்டால் அனைவரும் வாக்களித்தால் மட்டுமே ஒரு சிறந்த தலைவனை தேர்ந்தெடுக்க முடியும். நம் தளத்தில் பற்பல கதைகளை நம் லோக கதாசிரியர்கள் மிகவும் சுவாரஸ்யத்துடனும், கிளுகிளுப்பாகவும், புதுமையாகவும் நமக்காக பதிக்கிறார்கள்.

நாம் ஒரு கதையை பத்து, பதினைந்து நிமிடங்களில் கூட படித்து முடித்துவிட முடியும். ஆனால் அதே கதையை எழுத அந்த கதாசிரியர் எவ்வளவு நேரத்தை செலவு செய்திருப்பார்? கதை படிக்கும் போது நமக்கே உணர்ச்சிகள் பொங்கிவிடுகிறது என்றால், அந்த கதாசிரியர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு கதையை எழுத எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பது கதை எழுதும் கதாசிரியர்களுக்கு தான் தெரியும். மற்ற கதைகளைப் போல கிளுகிளுப்பான காமக் கதைகள் எழுதுவது அவ்வளவு சுலபம் இல்லை. சற்று சிந்தித்து பாருங்கள் நண்பர்களே!

கதாசிரியகளுக்கு கிடைக்கும் வெகுமதி என்பது நாம் அந்த கதைகளுக்கு கொடுக்கும் பின்னூட்டங்களும், வாக்கும் தான். இதை செய்ய நாம் தயங்கலாமா? இரண்டு மூன்று வரிகளிலாவது பின்னூட்டம் கொடுப்பது ஒரு பாக கதையை ஐம்பது வரிகளுக்கு மேலே எழுதும் கதாசிரியரின் சிரமத்தை விட பெரியதா? சற்று சிந்தியுங்கள் நண்பர்களே!

லோகம் நடவடிக்கைள் எடுக்கும் போதும் குமுறும் நாம் இதுவரை என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சற்று சிந்திக்க வேண்டாமா? பங்களிப்புகள் கொடுப்பதாக உறுதி அளித்து தான் நாம் அனைவரும் லோகத்தில் அனுமதியை வாங்குகிறோம். அனுமதிகள் வாங்கிக்கொண்டு, படைப்புகளை பார்த்து மகிழ்ந்துகொண்டு, அடுத்தடுத்த வாசல்களுக்கு முன்னேறிய பின்னர் பங்களிப்புகளே கொடுக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம்? சற்று சிந்தியுங்கள் நண்பர்களே!

கதைகளுக்கு சரியான பின்னூட்டங்களே கிடைக்காத பட்சத்தில் ஒரு கதாசிரியருக்கு தொடர்ந்து அடுத்ததடுத்த கதைகள் எழுதுவதில் ஆர்வம் குறைந்து விடாதா? அவர்களை உற்சாகப் படுத்தி கதைகளை எழுத செய்வது நம் நோக்கமாக இருக்க வேண்டாமா? முடிந்தவரை கதைகளை படித்து பின்னூட்டங்கள் கொடுங்கள். கதாசிரியர்கள் மனதை குளிர செய்யுங்கள். கதாசிரியர்களின் மனம் குளிர்ந்தால் அவர்களிடமிருந்து நமக்கு பலப்பல கதைகள் தொடர்ந்து கிடைக்குமே. சற்று சிந்தியுங்கள் நண்பர்களே!

மாதந்தோறும் மாதப் போட்டிகள் நடத்தப் படுகிறது. வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களில் வரும் கதைகளுக்கு லோகத்தின் சார்பாக பரிசுகள் வழங்கப்படுகிறது. நிர்வாகம் சார்பாக நிர்வாக சவால் போட்டிகள் நடைபெறுகிறது. லோகத்தில் முடிவுறாத கதைகளை முடித்து வைக்கவே இந்த போட்டி நடைபெறுகிறது. ஒவ்வொருவர் கொடுக்கும் தொடர்ச்சிகளும் புதுப்புதுக் கோணத்தில் சிறப்பாக கொடுக்கபடுகிறது. சிறந்த தொடர்ச்சியை கொடுத்த கதாசியரை தேர்ந்தெடுக்க இங்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப் படுகிறார். மேலும், வாசகர்களே வாசகர்களுக்கு சவால் விடும் படியான வாசகர் சவால் போட்டிகளும் வாசகர்களால் நடத்தப் படுகிறது. இவை அனைத்தும் எந்த காம தளத்துக்கும் இல்லாத தனித்துவம். லோக நண்பர்களின் பங்களிப்புகள் இருந்தால் மட்டுமே இந்த போட்டிகள் அனைத்தும் சிறப்பானதாக அமையும். இந்த போட்டிகள் அனைத்திலும் பங்கு கொண்டும், போட்டிகளின் இடம்பெறும் கதைகளுக்கு பின்னூட்டம் கொடுத்தும், போட்டியில் இடம்பெறும் கதைகளில் நம்மை கவர்ந்த கதைகளுக்கு வாக்களிப்பதை நம் கடமையாக நினைக்க வேண்டாமா? சற்று சிந்தியுங்கள் நண்பர்களே!

லோகத்தில் நம் கடமைகளை நாம் ஒழுங்காக செய்வோம். சொந்த வேலைகள், அலுவலக வேலைகள், குடும்பத்தோடு செலவிட வேண்டிய நேரங்களை எல்லாம் ஒதுக்கி நமக்காக பற்பல கதைகள் எழுதும் கதாசிரியர்களை உற்சாகப் படுத்துவோம். முடிந்த அளவு கதைகளுக்கு பின்னூட்டங்கள் கொடுப்போம். மறவாமல் அனைத்து போட்டிகளிலும் வாக்களிப்போம். நாட்டிலும் சரி, லோகத்திலும் சரி கண்டிப்பாக வாக்களிப்போம். நமக்காக பல மணி நேரங்களை ஒதுக்கி கதைகளை எழுதி நம்மை மகிழ்விக்கும் கதாசிரியர்க்ளுக்காக சில நிமிடங்களையாவது ஒதுக்குவோம். சற்று சிந்தித்து செயல்படுங்கள் நண்பர்களே!

என்னால் முடிந்த அளவு லோக கதாசிரியர்களை உற்சாகப் படுத்தவும், லோக வளர்ச்சிக்கும் என்னால் முடிந்த பங்களிப்புகளை கொடுத்து ஒவ்வொரு போட்டியிலும் கண்டிப்பாக வாக்களிப்பேன் என்று உறுதி எடுப்போம். இவ்வாறு செய்தால் லோக நடவடிக்கைகள் நம்மை எந்த விதத்திலும் பாதிக்காது. சில காலம் ஓய்வு எடுக்க நினைத்தாலோ, வேலை மாற்றம் காரணமாக லோகத்தில் வர முடியாத சூழல் ஏற்பட்டாலோ, விடுமுறையில் செல்கிறீர்களா? என்ற இந்த திரியில் சென்று விடுப்பு அறிவியுங்கள். விடுப்பு எடுக்கப்படும் காலத்தில் தங்கள் கணக்கு இனாக்டீவ்-ஆக இருக்கும். விடுப்பு முடிந்ததும் மீண்டும் ஆக்டிவ் செய்யப்படும். தங்களின் அனுமதிகள் குறைக்கப் படாது. மேலும் விவரங்கள் அந்த திரியிலே உள்ளது.

நம்மை தகுதி இறக்கம் செய்ய வேண்டும் என்பது நிர்வாகத்தின் நோக்கம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தனை வருடங்களாக நம் லோகம் இன்றும் தலை சிறந்த தளமாக இடம்பெற காரணமே இங்கே வகுக்கப் பட்டிருக்கும் விதிமுறைகள் தான். அதனால் தான் இந்த காமத்தளம் மட்டுமே இன்றும் கட்டுக் கோப்புடன் பயணிக்கிறது. லோக வளர்ச்சிக்கும் பங்களிப்புகளை பெருக்கிக் கொள்ளவும் சில நடவடிக்கைகள் அவசியம் ஆகிறது நண்பர்களே. புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

கதைகளுக்கு பின்னூட்டங்கள் கொடுங்கள். போட்டிகளில் வாக்களியுங்கள் என்று எவ்வளவு தான் கோரிக்கை வைத்தாலும், கேட்டுக் கொண்டாலும் பலரும் அதற்கு செவி சாய்ப்பதே இல்லையே. லோக நடவடிக்கைகள் மட்டுமே மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. லோக நடவடிக்கைகள் லோக வளர்சிக்காக இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. நடவடிக்கைக்கு பின்னர் தான் பலரும் ஒழுங்கான பங்களிப்பை லோகத்திற்கு கொடுக்கிறோம். நான் உட்பட. வெரி சிம்பிள். நேரம் கிடைக்கும் போது படிக்கும் கதைகளுக்கு பின்னூட்டம் கொடுங்கள். அனைத்து போட்டிகளிலும் வாக்களியுங்கள். இவ்வளவு தான்.

லோக நடவடிக்கையால் தகுதி இறக்கம் செய்யப்பட்டோர் மீண்டும் அதே நிலையை அடைய முயற்சி செய்யுங்கள். ஏற்றம் இறக்கம் நிறைந்தது தான் வாழ்க்கை. இறக்கி விட்டாலும் அதே இடத்தில் நின்று கொண்டு லோக நிர்வாகத்தினர் மீது கோபம் கொள்வதாலும், கடிந்து கொள்வதாலும், வருந்துவதாலும் எந்த பயனும் இல்லை என்பதை முதலில் உணருங்கள். நான் தவறு செய்துவிட்டு லோக நிர்வாக நடவடிக்கைகளை குறை கூறுவது சற்றும் ஏற்புடையது அல்ல. அடுத்த நிலையை அடைய போதிய முயற்சிகளை செய்யுங்கள். பதிப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துங்கள். கதைகளுக்கு தரமான பின்னூட்டங்கள் கொடுத்து அடுத்தடுத்த வாசல்களுக்கு முன்னேறி செல்லுங்கள். கதை எழுதுவதில் ஆர்வம் உள்ளோர் கதை எழுதுங்கள். பழைய உறுப்பினர்களுக்கு பதிப்புகளில் சலுகையும் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனுமதிக்கான புதிய விவரங்களை ஜனவரி 1 2022 முதல் அனுமதிகள் மாற்றம் என்ற இந்த திரியிலே சென்று காணலாம். மீண்டுமொருமுறை நம் பங்களிப்பின் அடிப்படையில் தகுதியை பெருக்கிக்கொண்டு இழந்த வாசல் அனுமதியை பெற்றிடுவோமே. ஏற்கனவே ஒவ்வொரு வாசலாகத் தானே முன்னேறி வந்திருப்பீர்கள். மீண்டும் முன்னேறி வர முடியாதா? தகுதி இறக்கம் செய்யப்பட்ட பல உறுப்பினர்கள் சூறாவளி போல பங்களிப்புகளை மீண்டும் கொடுத்து இழந்த வாசல் அனுமதியை அதிவிரைவில் மீண்டும் பெற்றுள்ளார்கள். முயன்றால் முடியாதது இல்லை நண்பர்களே!

தரமான பங்களிப்புகளை தொடர்ந்து கொடுப்போம்! கதாசிரியர்களை தொடர்ந்து கதைகளை எழுத ஊக்குவிப்போம்! லோக விதிமுறைகளை ஒழுங்காக கடை பிடிப்போம்! லோக நடவடிக்கைகளை ஆதரிப்போம்! லோகத்தின் வளர்ச்சிக்காக ஒத்துழைப்பு நல்குவோம்!


மாத போட்டிகளில் வாக்களியுங்கள்!
நிர்வாக சவால் போட்டிகளில் வாக்களியுங்கள்!
வாசகர் சவால் போட்டிகளில் வாக்களியுங்கள்!



வாக்களிப்போம்! வாக்களிப்போம்! இனி தவறாமல் வாக்களிப்போம்! மறவாமல் வாக்களிப்போம்! கண்டிப்பாக வாக்களிப்போம்!

நன்றி!
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote